நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 21, 2019

மார்கழி தரிசனம் 05

தமிழமுதம்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு..(0595)
* * *
அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 05


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயபெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!..
***
ஆழ்வார் அமுதம்


ஸ்ரீ ராஜகோபாலன் - மன்னார்குடி 
குன்றனைய குறஞ் செயினும் குணங் கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.. (2122)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
* * *

சிவதரிசனம்
திருக்கருகாவூர்
ஸ்ரீ முல்லைவனநாதர் - திருக்கருகாவூர் 
குருகாம் வயிரமாம் கூறுநாளாம் 
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற்பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.. (6/15)
-: திருநாவுக்கரசர் :-
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 05


பூதங்கள் தோறும் நின்றாய் எனின்அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உன்னைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *
தேவி தரிசனம்


ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை - திருக்கருகாவூர் 
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச்சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும்புரி சடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண் கொடியே!.. (021)
- அபிராமி பட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

14 கருத்துகள்:

 1. தமிழமுதம் பருகினேன்.   தரிசனம் செய்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. மன்னார்குடிக்காரனைப் பார்த்தாலே நெஞ்சம் விம்மும். அழகான படம். இனிமையான பதிவு. பலமுறை சென்றிருக்கும் திருக்கருகாவூர் தரிசனத்துக்கு நன்றி. ஸ்ரீரங்கத்தில் இருந்து காலை ஏழு மணிக்குக் கிளம்பினால் தரிசனம் எல்லாம் முடித்துக்கொண்டு பத்து மணிக்கு வீடு வந்துடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்...

   ராஜகோபாலனின் அழகுக்கு அவனே நிகர்.. மன்னார்குடி அதிக பரபரப்பு இல்லாமல் இருக்கும்.. நிம்மதியாக தரிசனம் செய்யலாம்..

   தங்கள் வருகியும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. தமிழமுதம், ஆழவார் அமுதம், தெய்வ தரிசனங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ஆண்டாளின் அழகு தமிழ், மாணிக்க வாசகரின்
  உருக வைக்கும்
  திருவெம்பாவைப் பாடல்,
  கருகாவூர் அம்பிகை தரிசனம்,
  அபிராமி அந்தாதிப் பாடல் அனைத்தும் இன்றைக்கும் என்றைக்கும் வழிகாட்டி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றியம்மா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..