நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 29, 2019

மார்கழி தரிசனம் 13

தமிழமுதம்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு..(396)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்த்துக் கலந்தேலோர் எம்பாவாய்!..

உதயத்திற்கு முன்பு பிரகாசமாக விடிவெள்ளி
விடிவெள்ளி எனப்படும் வெள்ளி (Venus) விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே வானில் தோன்றிவிடும்..
இவ்வேளையில் சூரியனுக்கு நேர் எதிரே வியாழன் (Jupiter) மறையும்..

இந்நிகழ்வு மார்கழியில் சமச்சீராக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்..

இதையே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
திருப்பாடலில் குறித்தருள்கின்றனள்.. 
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ ஆமருவியப்பன் - தேரழுந்தூர் 
தாழ்ந்து வரங்கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தரிக் கொண்ட அவன்.. (2204)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருவெண்காடு

ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு 

ஸ்ரீ பிரம்ம வித்யா நாயகி 
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே!.. (3/15)
-: திருஞானசம்பந்தர் :-
***

திருவாசகத் தேன்

ஸ்ரீ அகோரமூர்த்தி - திருவெண்காடு 
நீல உருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் றிகழும் கொடிமங்கை உள்ளுறைக் கோயில்
சீலம் பெரிதும் இனியதிரு உத்தர கோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக்கூவுவாய்!..
***

மார்கழிப் பதிவுகளைத் தொகுக்கின்றபோது
திருவெண்காடு திருத்தலமும்
ஸ்ரீ அகோரமூர்த்தி தரிசனமும்
தன்னிச்சையாய் அமைந்திருக்கின்றன...


ஸ்ரீ அகோரமூர்த்தி ஸ்வாமியைத் தரிசிக்க
ஞாயிற்றுக் கிழமை உகந்தநாள் என்பர்...

ஸ்ரீ அகோர மூர்த்தி வழிபாட்டினால் அன்பு தழைக்கும்..
ஆரோக்யம் பெருகும்... பெரும்பிணி பகை விலகும் 

நாட்டைச் சூழ்ந்துள்ள பெரும்பகை அகல
ஸ்ரீ அகோர மூர்த்தி ஸ்வாமியைத் தொழுவோம்..

தேவி தரிசனம்
ஸ்ரீஅஷ்டபுஜ காளீஸ்வரி - திருவெண்காடு 
பரிபுரச் சீரடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே..(043)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

 1. படித்தேன், தரிசித்தேன், ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம்..
  தங்களுக்கு நல்வரவு..

  மகிழ்ச்சி... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  அருமை.. மார்கழி பதிவாக ஹரியும்,சிவனுமாக நல்லதொரு தொகுப்பு. தெளிவான படங்கள். அழகான பாசுரங்கள் என பதிவு பக்தி மணம் நிரம்ப மிகவும் அருமையாக உள்ளது. படங்கள் அந்தந்த கோவிலுக்கு சென்று பார்த்து அங்குள்ள மூலவர்களை தரிசிக்கும் ஆனந்தத்தை தருகிறது. சங்கர நாராயணரையும், அன்னை உமாதேவியையும் பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன்.பாடல்களையும் வாசித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

   படங்கள் அனைத்தும் Fb வழியாகக் கிடைப்பவை...

   அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. திருவெண்காடு பலமுறை போனோம். அருமையான தரிசனம். மிக அழகான பாசுரங்களுடன் அதற்கேற்ற இறை தரிசனம். சங்கரநாராயணர் இருப்பதாகக் கமலா அவர்கள் கூறுகிறாரே! எனக்குக் கிட்டவில்லை! :( அகோர மூர்த்தியும், அஷ்டபுஜ காளியோடு ஸ்வேதாரண்யேஸ்வரரும், பிரம்ம வித்யா நாயகியும் தான் தென்படுகின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   சங்கர நாராயணன் என்று நான் குறித்தது பெருமாளையும், சிவனையும். இந்த பதிவில் இவர்கள் இருவரையும் ஒருசேர தரிசனம் பெற்றாயிற்று எனக் குறிப்பிட்டேன். தாங்கள் அறியாததா? எதற்கோ நானும் விளக்கமளிக்கிறேன். ஹா. ஹா. ஹா. நன்றி சகோதரி.

   நீக்கு
  2. தங்களது கருத்துரைகளுக்கு மகிழ்ச்சி...

   சைவ வைணவ இறை இலக்கியங்களை மார்கழியில் நினைவு கூர்கின்றேன்...

   முந்தைய ஆண்டுகளில் தலவரலாறுகளும் குறித்திருக்கிறேன்....

   இந்த ஆண்டில் இந்த அளவுக்கு நிகழ்வது இறையருள்...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. அன்பு கீதாமா,சங்கரன் விஷ்ணு என்று வைணவ ,சைவத் திருத்தலங்கள் நம் துரை பதிவிடுவதைச் சொல்கிறார் கமலா என்று நினைக்கிறேன்.

  அன்பு துரை திருவெண்காடு என்றால் கோமதி அரசு நினைவுதான் வரும். அகோர மூர்த்தி அனைவருக்கும் நல் வாழ்வு தரட்டும்.

  அபிராமி அன்னையின் அருளும், ஆண்டாளின் நற்சொற்களும்
  நம்மைக் காக்கட்டும். நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   தாங்கள் சொல்வது சரியே....

   சைவ வைணவ திருப்பாசுரங்களைப் பதிவில் வைக்கிறேன்...

   அதனை ஒட்டிய தலங்களின் படங்களை இணைக்கிறேன்...

   எல்லாரும் நலம் வாழ பிரார்த்தனைகள்...

   நீக்கு
 7. நல்லதொரு தரிசனம். மனதில் ஒரு வித நிம்மதி உங்கள் பதிவுகள் மூலமாவது பல ஊர்களின் இறைவன் தரிசனம் கிடைக்கிறதே என்ற நிம்மதி!

  தொடரட்டும் தேனான, முத்தான பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...
   தங்களது மகிழ்ச்சி என்றென்றும் வாழ்க...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. திருவெண்காடு தரிசனம் பெற்றேன்.
  வாழ்த்துக்கள் நன்றிகள்.
  ஒவ்வொரு ஞாயிறும் கோவில் தரிசனம் உண்டு.
  7 வருடம் மிக அருமையான வருடம்.
  எல்லோரும் நலமாக இருக்க அகோரமூர்த்தி அருள்புரிவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   ஸ்ரீ அகோரமூர்த்தி அனைவரையும் காத்தருள் செய்வாராக...
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..