நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 30, 2019

மார்கழி தரிசனம் 14

தமிழமுதம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ லக்ஷ்மி வராகர் - திருக்குடந்தை 
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி..(2102)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திரு பிரமபுரம் - சீர்காழி
ஸ்ரீ தோணியப்பர் - பெரிய நாயகி - சீர்காழி 
ஸ்ரீ சட்டை நாதர்

எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழிற் பிரமபுரத் துறையும் வானவனே..(2/40)
-: திருஞானசம்பந்தர் :-
***
திருவாசகத் தேன்


சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவுவாய்.. 
***

தேவி தரிசனம்


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.. (46)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

11 கருத்துகள்:

 1. படித் தேனை படித்தேன், பருகினேன், ருசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 2. கட்டுமலையின் மேலே ஏறிச் சட்டைநாதரைப் பார்த்துட்டு வந்த நினைவுகள் எல்லாம் நெஞ்சில் மோதுகின்றன. அருமையான இறை தரிசனத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோணிபுரம் எனப்படுவது சீர்காழி...

   அங்கே தரிசனம் செய்யும் பாக்கியம் இன்னும் எனக்குக் கிட்டவில்லை...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 3. இன்று சீர்காழி தோணியப்பர் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி.

  பாடல்கள் , படங்களுடன் பதிவு மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. படித்தேன். ரசித்தேன்.... அனைத்தும் தேன்.

  லக்ஷ்மி வராகர் படம் ரொம்பவே பிடித்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..