நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 18, 2019

மார்கழி தரிசனம் 02

தமிழமுதம்

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.. (0020)
* * * 
ளமு
அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 
திருப்பாடல் - 02வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் 
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் 
பையத் துயின்ற பரமனடி பாடி 
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் 
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்அரன்நாராணன் நாமம் ஆன்விடைப் புள்ளூர்தி
உரைநூல் மறையுறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்பளிப்பு கையதுவேல் நேமி
உருவம் எரிகார்மேன்னி ஒன்று.. (2086)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்!..
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 02


அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!..
* * *

சிவ தரிசனம்
திரு ஐயாறு


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே..
வாச மலரெல்லாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே..
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென் மேல் வைத்தாய் நீயே..
தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற்சோதி!.. (6/38)
-: திருநாவுக்கரசர் :- 
* * *

- தேவி தரிசனம் -

ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. (004) 
-:அபிராமி பட்டர் :-  
* * *
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

16 கருத்துகள்:

 1. தமிழமுதம்.  படித்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு....

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான இறை தரிசனம் கண்டபின்னர் படுக்கப் போகிறேன். பகிர்வுக்கு நன்றி. அத்தி வரதரின் சிரித்த முகம் கண்ணிலேயே நிற்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. மிக அருமை ...

  ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே ...அருமையான பாடல் ..  ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   கோதையாள் திருவடிகள் போற்றி...

   நன்றி...

   நீக்கு
 6. அமுதங்கள் அருமை.

  படங்களும், பாடல்களும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 8. திருப்பாவை தரிசனமும் ,திரு எம்பாவை தரிசனமும் ,பாசுரங்களும்,
  நாயன்மார்களின் திரு வாசகங்களும் இந்த நாளை நன்னாளாக்கின.

  நற்சொற்கள் என்றும் நன்மை பயக்கும்.
  நன்றி மா.அன்பு துரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நற்சொற்கள் என்றும் நன்மை பயக்கும்... அருமை...

   நன்றியம்மா...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..