நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 12
செவ்வாய்க்கிழமை
பெரிய கோயிலில் எடுக்கப்பட்ட படங்கள் இப்போதைக்கு இந்தப் பதிவுடன் நிறைவு பெறுகின்றன..
அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் -
கால சம்ஹார மூர்த்தி, அம்பிகையின் சிவ பூஜை, ஆரத் தழுவிய அம்பிகை, புலிக்கு அஞ்சிய வேடன் - எனும் புராணங்கள் நான்கு சுதை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன..
காலக் கொடுமையால் இந்த சிற்பங்கள் மெல்ல மெல்ல
சிதைந்து கொண்டிருக்கின்றன..
இவற்றை மீண்டும்
பொலிவுடன் சீரமைப்பதற்கு எந்த மாதிரியான சட்டங்கள் தடையாக இருக்கின்றனவோ தெரியவில்லை..
கடுமையான வெயில்.. மண்டபத்தின் நிழலுக்குள் புழுக்கம்.. நெற்றியின் வியர்வைத் துளிகள் கண்களில் வழிகின்றன..கைத் தொலைபேசியின் மூன்றாவது கண் தாறுமாறாகி விட்டது..
இந்நிலையில் -
சுதை சிற்பங்களை இன்னும் அழகாக எடுத்திருக்கலாம் - என்ற எண்ணம் மனதில் எழுகின்றது..
 |
| ஸ்ரீ விநாயகர் |
 |
| ஸ்ரீ வில்லேந்திய வேலன் |
 |
| ஸ்ரீ வீரபத்ரர் |
 |
| ஸ்ரீ வயிரவர் |
முருகன் சந்நிதியின் சிற்பங்களையும் வேறு சில கோணங்களையும் மறுபடி படம் பிடிக்க வேண்டும்..
மீண்டும் ஒரு நல்ல பொழுதைத் தந்தருள எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்..
ராஜ கோபுரத்தைக் கடந்த நிலையில் காலணிகள் காப்பகம்..
அங்கே ஒரு பையை எடுத்து அதற்குள் செருப்பைப் போட்டு அங்கிருக்கும் நூற்றுக் கணக்கான கொக்கிகளில் ஏதாவதொன்றில் மாட்டி விட்டு அதற்கான எண்ணைச் சொன்னால் சிறு தாள் ஒன்றில் எழுதிக் கொடுக்கின்றார் ஒருவர்.. அதற்கு மூன்று ரூபாய்.. சுய சேவை மாதிரி இருக்கின்றது..
செருப்பு வைத்த பை மாறிப் போய் விட்டால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று தெரிய வில்லை..
பக்கத்திலேயே சிற்றுண்டிகள்.. ஐஸ்கிரீம்கள்..
குளிர் பானங்கள்.. கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்.. குறுகலான நடைபாதையில் எதற்கும் கவலைப் படாதவர்களாக பெண்கள்..
பதிவின் பகுதி இரண்டு
தஞ்சை பெரிய கோயில் திருவிழா
நன்றி : நம்ம தஞ்சாவூரு நண்பர்கள்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***