நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 10, 2023

கருடசேவை 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 27
சனிக்கிழமை

வம்புலாம் சோலை எனப்பட்ட தஞ்சமா புரியில் பராசர மகரிஷிக்கு ஸ்ரீ மஹா விஷ்ணு கருட வாகனத்தில் தரிசனம் நல்கிய நாள் திரு ஓணம் என்றதன் அடிப்படையில் இவ்விழா..

தஞ்சை திவ்ய தேசத்தின்
புகழ் பெற்ற  இருபத்து நான்கு கருடசேவை  நேற்று நடைபெற்றது.. 

வியாழன்று மாலை ஆழ்வார் திருமஞ்சனம்.. பிரபந்த சேவை..

ஸ்ரீ திருமங்கைஆழ்வார்
வெள்ளிக்கிழமை
(வைகாசி 26 ஜூன் 9) காலை ஏழு மணியளவில் 
திருமங்கை ஆழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருள திரு வெண்ணாற்றங்கரை மாமணிக்கோயில் ஸ்ரீ நீலமேகப்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதியுலா புறப்பட்டார்..  
தொடர்ந்து ஸ்ரீ மணிக் குன்றப் பெருமாளும் தஞ்சை யாளி ஸ்ரீ நரசிங்கப் பெருமாளும் கல்யாண வெங்கடேசப் பெருமாளும் எழுந்தருளினர்..

தஞ்சை நகரின் வடக்கு எல்லையாகிய கொடி மரத்து மூலையின் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் அருகில் கருட வாகனங்கள் ஒன்று கூடியதும் தஞ்சையின் மாபெரும் கருட சேவை ராஜ வீதிகளில் சிறப்பாக நடைபெற்றது..

1) ஸ்ரீ நீலமேக பெருமாள் - ஆண்டாள்
2) ஸ்ரீ வீரநரசிம்ம பெருமாள்,
3) ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்,
4) ஸ்ரீ வரதராஜப் பெருமாள், வேளூர்
5 ) ஸ்ரீ கல்யாண வெங்கடேசர், வெண்ணாற்றாங்கரை
6) ஸ்ரீ கோதண்டராமர், பள்ளி அக்ரஹாரம்.
7) ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், சுங்காந்திடல்.
8) ஸ்ரீ யாதவ கிருஷ்ணன், கரந்தை.
9) படித்துறை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், கரந்தை.
10) ஸ்ரீ யோகநரசிம்மர், கொண்டிராஜபாளையம்
11) ஸ்ரீ கோதண்டராமர், கொண்டிராஜபாளையம்
12) ஸ்ரீ வரதராஜப் பெருமாள், கீழ ராஜவீதி.
13) ஸ்ரீ கலியுக வேங்கடேசர், தெற்கு ராஜவீதி
14) ஸ்ரீ ராமஸ்வாமி, ஐயங்கடைத்தெரு (பஜார்)
15) ஸ்ரீ ஜனார்த்தன பெருமாள், எல்லையம்மன் கோயில் தெரு.
16) ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசர், கோட்டை
17) ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள், கோட்டை.
18) ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், மேல அலங்கம்.
19) ஸ்ரீ விஜயராமர், மேல ராஜவீதி
20) ஸ்ரீ நவநீதகிருஷ்ண ஸ்வாமி, மேல ராஜவீதி
21) ஸ்ரீ பூலோக கிருஷ்ணன், சகாநாயக்கன் தெரு
22) ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மேட்டுத் தெரு.
23) ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், மகர்நோன்புச்சாவடி.
24) ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசர், மகர்நோன்புச் சாவடி.

இன்று (சில கோயில்களில் மட்டும்)  நவநீத சேவை ராஜ வீதிகளில் நடைபெறுகின்றது.. 





















எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.. (953)
-: திருமங்கையாழ்வார் :- 
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***

8 கருத்துகள்:

  1. நாராயணா எனும் பாராயணம்..  நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்...  படங்களைக் கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் கிடைத்தது நன்றி

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அருமை. தரிசனமும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள். தரிசித்துக் கொண்டேன். எனக்குத் திருச்சி/ஸ்ரீரங்கம் வந்த பின்னரே இத்தகைய கருடசேவை தஞ்சையில் வருடம் தோறும் நடைபெறுவது தெரியும் இங்கே குடி இருக்கும் இரு மாமிகள் வருடா வருடம் போய் விடுவார்கள்.இப்போது இருவரும் வெளியூரில்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும். அழகாக வந்துள்ளன. இருபத்துநாலு கோவில் பெருமாள் கருடசேவை தரிசனம் பெற்றுக் கொண்டேன். சென்ற வருடமும் இதுபோல் நீங்கள் பதிவிட்ட போதுதான் இந்த 24 கருட சேவை விபரங்கள் அறிந்து கொண்டேன். இந்த தடவையும் இன்று நல்லபடியாக நாராயணர் தரிசனம் கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  6. தஞ்சையின் கருட சேவை தகவல்களும் படங்களும் சிறப்பு. உங்கள் பதிவு வழி எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கருடசேவை காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..