நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 07, 2023

ஸ்ரீ குந்தாளம்மன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 24
புதன்கிழமை



தஞ்சையின் வடக்கு எல்லையில் ஸ்ரீ கோடியம்மனுக்கு மேல் புறத்தில் காவல் நாயகியாக வயல்வெளிகளுக்குள் ஸ்ரீ குந்தாளம்மன் எனும் திருப்பெயருடன் வீற்றிருந்தவள்.. 

இவள் எல்லைப் பிடாரியம்மன் என்றும் கருதப்படுகின்றாள்..

ஏதோ ஒரு காலகட்டத்தில்  அந்த சிறிய சந்நிதியை  திருப்பணி செய்வதற்கு மக்கள் திட்டமிட்டனர்.. 

அப்போது கேட்பாரற்று பாழடைந்து கிடந்த தர்ம சத்திரங்களை கையகப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு கும்பல்.. 

அந்தக் கூட்டத்தின் கருவறுக்க விரும்பிய பிடாரியம்மன் இங்கே  திவ்ய தேசத்தில் ஸ்ரீ வீரநரசிம்ம ஸ்வாமி கோயிலுக்குப் பக்கத்தில் மிச்சமாக இருந்த சத்திரத்து மண்டபத்தில் குடி கொண்டாள்.. 

அதற்குப் பின் - ஆங்காரத்துடன் எத்தனை பேரை பழி தீர்த்துக் கொண்டாள் என்பது அவளுக்கே வெளிச்சம்..

காலங்கள் உருண்டாடி வயல்வெளியில் புதிதாக கோயில் உருவாயிற்று..

அம்பிகை இங்கேயே இவ்விடத்திலேயே இருக்க விரும்பியதால் அங்கே வேறொரு திருமேனி ஸ்தாபிக்கப்பட்டது.. 

சென்ற ஆண்டில் திருக்குடமுழுக்கும் நிகழ்ந்தேறியது.. 

தஞ்சையம்பதியில் செய்தியும் படங்களும் 
வந்திருக்கின்றன..

அந்தக் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று பால்குட உற்சவம் நிகழ - இங்கே வைகாசி பௌர்ணமியை அனுசரித்து சென்ற ஞாயிறன்று பால்குட உற்சவம் நடந்தது..

பால்குடம் எடுத்து வந்த
ஒரு நூறுக்கு மேலான அன்பர்களுடன் ஆடி வந்தாள் அம்பிகை..

உச்சிப் பொழுதில்
சிற்ப்பாக அம்பிகைக்கு பாலாபிஷேகம் நடந்தது கண் கொள்ளாக் காட்சி..

உச்சி வெயில் நேரத்தில்  தலைக்கு மேலாக நுண்ணலை பேசியை உயர்த்தி பால் குட ஊர்வலத்தைப் படம் பிடிக்கையில் நுண்ணலை பேசியின் அமைப்பு தாமாகச் சுழன்று கொள்ள - பதினைந்திற்கும் மேற்பட்ட காட்சிகள் வீணாகி விட்டதில் மிகவும் வருத்தம்..

பதிவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தங்களை மகிழ்விக்கும் என்று நம்புகின்றேன்..





















தஞ்சை திவ்ய தேசத்தின்
புகழ் பெற்ற  இருபத்து நான்கு கருடசேவை எதிர்வரும் வைகாசி 26  வெள்ளிக்கிழமை (9/6) காலை ஏழு மணி முதல் தஞ்சையின் ராஜ வீதிகளில் நடைபெற உள்ளது..

அனைவரும் வருக..
அருளாசி பெறுக!..

 ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்
***

7 கருத்துகள்:

  1. பால்குட சேவை வைபவங்களின் படங்கள் வழக்கம்போல சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் வழக்கம் போல் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. குந்தாளம்மன் கோயிலுக்கு இதுவரை செல்லவில்லை. அவசியம் செல்வேன்.

    பதிலளிநீக்கு
  4. குந்தாளம்மன் பற்றி முன்னரே படிச்ச நினைவு. படங்களும் விபரங்களும் நன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் நல்லாருக்கு. நிகழ்வும் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்திலும் பால்குட உற்சவம் சிறப்பாக நடந்தேறியதை கண்டு அம்மனை தரிசித்து கொண்டேன். அம்மன் அலங்காரம் நன்றாக உள்ளது. நல்லதொரு கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. அடுத்து கருடசேவை பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..