நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 22, 2023

மனை மங்கலம் 3

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 7
வியாழக்கிழமை


நவகிரகங்களைப் பற்றியும் நவகிரக தோஷங்களைக் குறித்தும் கவலைப்படாதவர் யார்?.. 

நன்மையோ தீமையோ எல்லாமே நாம் வாங்கி வந்த வரங்கள்..

நவகிரக தோஷம் என்பவை நம்மால் முற்பகலில் செய்யப்பட்டு இப்போது திரும்பக் கிடைப்பவை..

இருப்பினும் -
நவகிரக தோஷங்கள்
குறைவதற்கு சில வழி முறைகள்  இருக்கின்றன. 

இவை அனைவருக்கும்
உகந்தவையாகும்.

பொதுவாக அந்தந்த கிரகங்களுக்குரிய நிறத்தில் ஆடைகளை அணிவதும் கைத்துணிகள் வைத்திருப்பதும் கிரக பாதிப்பில் இருந்து  ஓரளவுக்கு தப்பிக்க உதவும்..

வீட்டிற்கு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு அவ்வப்போது இயன்றதைக் கொடுக்கலாம்.. சங்கட ஹர சதுர்த்தி நாளில் சிறப்பு வழிபாடு செய்யலாம்..

எந்த சந்நிதியிலும் நாம் நமது நன்மைக்காகவோ பிறர் நன்மைக்காகவோ வேண்டிக் கொள்ளலாமே அன்றி எவருடைய வீழ்ச்சிக்காகவும் வேண்டி நிற்பது கூடாது..

தீபங்களுக்கு உகந்தவை விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவை மட்டுமே..

சந்நிதிகளில் வேறு எந்த எண்ணெய் கொண்டும் விளக்கு ஏற்றக் கூடாது..

சூரியனுக்குரிய யாகங்களை  வீட்டில் செய்வது. தினமும் சூரியனுக்கு நீர் வார்ப்பது போன்றவை சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்..

கைப்பிடி அரிசியை பறவைகளுக்கு தூவுவது அல்லது நீர்நிலையின் மீன்களுக்கு பொரி இடுவது - சந்திரனின் பலன் அதிகரிக்கும்.

சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை தானமாக அளித்தால், அங்காரக (செவ்வாய்)  தோஷம் விலகும். வீட்டில் அன்ன பூரணியின் கடாட்சம் நிறையும்..

பெருமாள் கோயிலில் பச்சைப் பயறு தானம் அளிப்பது, தினமும் சரஸ்வதி மந்திரம் பாராயணம் செய்வது, கல்வி பயிலும் ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவது - ஆகியன புதன் பலத்தைக் கூட்டும்.

தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிந்து கொண்டால், குருவருள் கிட்டும்.  வியாழக் கிழமைகளில் சிவாலயத்தில் இனிப்பு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும்..

வெள்ளிக் கிழமைகளில் பசுக்களுக்கு உண்ணக் கொடுப்பதும் ஏதேனும் ஒரு கோயிலுக்குத் தொடர்ந்து பதினைந்து நாட்கள் பசும் பால் கொடுப்பதும் இடுப்பில்  (பையில்) சிறிய வெள்ளிக் கட்டியை  முடிந்து வைத்துக் கொள்வதும் கையில் வெள்ளி வளையம் அணிந்திருப்பதும் நீர் அருந்துவதற்கு வெள்ளிக் குவளைகளைப் பயன் படுத்துவதும்  சுக்ர தோஷத்தில் இருந்து காப்பாற்றும்.

உடல் ஊனமுற்றோர்க்கு  இனிப்புகள் வழங்குவதும் விலங்குத் தோலில் செய்யப்பட்ட பைகளில் பணம் வைக்காமல் இருப்பதும் சனைச்சரனின் அருளைப் பெற்றுத் தரும்..

சிவாலயத்தில் வைத்து பதினாறு நாட்கள் கொள் தானம் செய்வதால் கேது தோஷ நிவர்த்தி கிடைக்கும்.. 

சிவாலயத்தில் வைத்து பதினாறு நாட்கள்
உளுந்து தானம் செய்தால் ராகு தோஷ நிவர்த்தி கிடைக்கும்..

மேலும் குறிப்புகள் அடுத்தொரு பதிவில்..


சுகம் சௌக்யம் சௌபாக்யம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. சிறுவயதிலிருந்தே பழகினால் இவற்றில் பல பழக்கங்கள் வசமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்....

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. நமது நன்மைக்காக நாம் வேண்டிக் கொள்வதை விட பிறர் நமக்காகவோ, நாம் பிறருக்கோ வேண்டிக் கொள்வது நன்றாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாய்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்....

      நலம் வாழ்க.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும் அருமை. காலை எழுந்தவுடன் சிறப்பான விநாயகப் பெருமானின் தரிசனம் மனதிற்கு சந்தோஷத்தை அளித்தது. எனக்குப் பிடித்தமான விநாயகரை கண் குளிர கண்டு வணங்கிக் கொண்டேன். நவகிரஹ தோஷங்களை நிவர்த்தி செய்யும் முறைகளை படித்து தெரிந்து கொண்டேன். நவகிரஹங்களும், விநாயகரின் அருளோடு நமக்கு துணை செய்ய வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நவகிரஹங்களும், விநாயகரின் அருளோடு நமக்கு துணை செய்ய வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்... ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ....

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி....

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. சிறப்பான தகவல்கள். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்....

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பல விஷயங்கள் அறிந்தோம்.
    இன்பமே சூழ எல்லோரும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள். எந்த எதிர்பார்ப்பும் - அது நல்வினை தரும் நல்லது என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதே சிறப்பு என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் - அது நல்வினை தரும் புண்ணியம் என்ற எதிர்பார்ப்பும் கூட இல்லாமல் செய்வது சிறப்பு என்பது என் தனிப்பட்ட எண்ணம்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. குறிப்புகள் அனைத்தும் அறிந்தவையே எனினும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..