நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 12, 2023

நவநீதசேவை 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 29
திங்கட் கிழமை

தஞ்சை மாநகரில் வெள்ளியன்று
இருபத்து நான்கு கருட சேவையை நடந்ததைத் தொடர்ந்து சனிக் கிழமை பதினைந்து திருக்கோயில்களில் இருந்து நவநீத சேவை நடைபெற்றது..

நிகழ்வின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..














திமிர் பிடித்த சிலர் - தரிசனத்துக்கு இடையூறாக வாகனங்களை இயக்கி வந்ததைப் படங்களில் காணலாம..














தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடி வா.. 62
-: பெரியாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

9 கருத்துகள்:

  1. முதல் படத்தில் பின்னால் தெரியும் மதில் சிவகங்கைப் பூங்கா மதிலா?  பின்னர் வரும் வெங்கடேச பெருமாள் கோவில் எந்த இடத்தில் இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  2. படங்கள் சிறப்போ சிறப்பு.  க்ளோஸப் செய்து எடுக்கப் பட்டிருக்கும் ஒரு படம் மட்டும் கொஞ்சம் தெளிவில்லாமல்... 

    படங்களை பெரிதாக்கிப் பார்க்கும்போது பின்னால் தெரியும் கடைகளில் தெருவின் பெயர் தெரிகிறதா என்று தேடிப்பார்த்தேன்!!

    பதிலளிநீக்கு
  3. குறுக்கே வண்டி ஒட்டிச் செல்லும் வாகனாவாதிகளை மன்னித்து விடுவோம்..  என்ன அவசரத்தில் செல்கிறார்களோ அவர்கள்..

    பதிலளிநீக்கு
  4. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  5. நல்ல தரிசனம். முன்பெல்லாம் பல்லக்கைச் சுமக்க அடியார்கள் உண்டு. இப்போல்லாம் மோட்டார் வண்டிதான் போலிருக்கு (பல இடங்களிலும் அப்படித்தான். கல்கருட சேவை போன்ற சமயங்களில் அப்படி இல்லை)

    பதிலளிநீக்கு
  6. மதுரையில் எப்போவோ மோட்டார் வண்டியில் பல்லக்கை வைத்து இழுத்துச் செல்வது தொடங்கி விட்டது. இங்கெல்லாம் இன்னமும் பல்லக்கைத் தூக்குவதே பெரிய விஷயம். எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன ஒன்றிரண்டு தவிர்த்து. வாகன ஓட்டிகளுக்கு என்ன அவசரமோ!

    பதிலளிநீக்கு
  7. பல்லக்கு படங்கள் அழகு. நல்ல தரிசனம்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நவநீதசேவை தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..