நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 31, 2023

திருமழபாடி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ நந்தியம்பெருமான் 
திருக்கல்யாணம் 


நேற்று திருமழபாடி தரிசனம்.. 

முன்னிரவு நேரத்தில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் ஸ்ரீ சுயம்பிரகாஷிணி தேவிக்கும் திருக்கல்யாண வைபவம்.. 

கடும் வெயிலிலும்
சின்னஞ்சிறு கிராமமான திருமழபாடி விழாக் கோலம் பூண்டிருந்தது..

முற்பகல் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு நான்கு மணியளவில் திரும்பிவிட்டோம்.. காலையில் இருந்தே ஜனத்திரள்..

தமிழகத்தின் வடக்கு, மேற்கு, தெற்கு - என, எல்லா மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த அன்பர்களைக் காண முடிந்தது.. 


















திருக்கோயிலைச் சுற்றிலும் வீட்டுக்கு 
வீடு - இலையிட்டு விருந்து உபசரிப்பு.

 பந்தலில் நீரும் மோரும் பானகமும் 
வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்..

மாப்பிள்ளை அழைப்பு









மாலை நான்கு மணிக்குப் பிறகு இங்கிருந்து செல்லும் பேருந்துகள் எல்லாம் தொலைவிலேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன..  

இரண்டரை கிமீ தூரம் நடப்பதற்கு சிரமம்.. கூட்டமும் நெரிசலும் ஒத்துக் கொள்வது இல்லை..

எனவே தான் முன்னதாகவே புறப்பட்டு விட்டோம்..

ஸ்ரீ நந்தியம்பெருமான் 
சுயம்பிரகாஷிணி தேவி 
நல்லருளால் 
அனைவரது வாழ்விலும் 
மங்கலங்கள் நிறையட்டும்..

ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய
வைத்யநாதர் அனைவரையும் காத்தருளட்டும்..

கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.. 7/24
(சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. இங்கெல்லாம் சென்று எப்போது தரிசனம் செய்யப் போகிறேன்?  உங்கள் தயவில் படங்களும் விவரங்களும் கிடைத்தன.  சென்ற வருடமும் சென்று வந்தீர்கள் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் இருந்து ஏழு மணி நேரப் பயணம் அரியலூர்.. அங்கிருந்து 25 கி.மீ.திருமழபாடி..

      தக்க ஏற்பாட்டுடன் வந்தால் அன்றைக்கு மாலையே சென்னைக்கு திரும்பி விடலாம்..

      சென்னையின் அடைசலில் இருந்து வெளியில் வாருங்கள்..

      நல்லதே நடக்கும்..

      ஓம் நம சிவாய...
      மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
    2. ஒரு நாள் பயணம் சாத்தியமா, தெரியவில்லை. கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

      நீக்கு
    3. முயற்சி செய்யுங்கள்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருமழபாடி ஏதோ ஒரு பிரபலத்தின் ஊரும் கூட இல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலஞ்சென்ற வலைப் பதிவர் திரு. தமிழ் இளங்கோ அவர்களது சொந்த ஊர்..

      நீக்கு
    2. ஆமாம். நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  3. நல்லதொரு தரிசனம் திருமழம்பாடி பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் ஊர்.

    பதிலளிநீக்கு
  4. நேரில் பார்த்த உணர்வை படங்கள் தந்தன.
    மிக அருமையாக இருக்கிறது படங்கள்.
    வைத்யநாதரிடம் உடல்நலத்தை வேண்டிகொள்கிறேன்.
    தமிழ் இளங்கோ அவர்களை நினைத்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களை பக்தியுடன் ரசித்துப் பார்த்தேன்.கோபுர தரிசனம் கண்டு கொண்டேன். இறைவனை தரிசித்துக் கொண்டேன். உங்களால் இந்த ஊர்களைப்பற்றியும், அங்குள்ள கோவில்கள் பற்றியும், இறைவனார்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சிவாய நம ஓம்.🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கோபுர தரிசனம் கண்டு கொண்டேன். இறைவனை தரிசித்துக் கொண்டேன்.///

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. திருமளபாடி வைத்தியநாதன் படங்கள் அனைத்தும் நன்று. தரிசித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  7. திருமழபாடி படங்கள் அனைத்தும் அருமை. மாப்பிள்ளை அழைப்பு படங்கள் ஆஹா!!

    உங்கள் உடல் நலம் விரைவில் சரியாகிடும் அண்ணா.

    முன்பும் ஸ்ரீ நந்திஎம்பெருமானார் திருக்கல்யாணம் குறித்து கதையுடன் விரிவாகப் பதிவு போட்டிருந்தீர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உங்கள் உடல் நலம் விரைவில் சரியாகிடும் அண்ணா.///

      நம்பிக்கை ஒன்றே பலம்..

      அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  8. நேரில் தரிசித்ததைப் போல் இருந்தது. இதற்குத்தானே திருவையாறிலிருந்து சப்த ஸ்தான பல்லக்குகள் வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குப் பிறகு சித்ரா பௌர்ணமியை அடுத்து தான்
      திருவையாறில் சப்த ஸ்தான பல்லக்குகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி .. நன்றி..

      நீக்கு
  9. இந்த ஊர் போகலை. மழபாடியுள் மாணிக்கத்தைத் தரிசிக்கும் பேறும் கிட்டவில்லை. கூட்டமும் ஒத்துக்காது என்பதால் இப்போதெல்லாம் கோயில்னு சொல்லிப் பார்ப்பதோடு சரி!:( அரங்கன் இங்கே வந்து காட்சி கொடுத்தால் தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..