நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 15, 2023

தைப்பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஞாயிற்றுக்கிழமை
மங்கலகரமான
தை முதல் நாள்.
  
அனைவருக்கும்
அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்..















நெற்கதிர் தோரணம்

தைப்பொங்கலன்று, அறுவடை செய்த நெற் கதிர்களை வீட்டுக்கு எடுத்து வந்து  சூரியனுக்குப் படைத்து, வீட்டு வாசல் நிலைப்படியின் மேல்,
கதிர் மணிகளை பசுஞ்சாணம் கொண்டு ஒட்டி வைப்பர்.

அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டு அதைத் தோரணமாகக் கட்டி  வீட்டு வாசலில் தொங்க விடுவர்..

இன்றும் கிராமத்து  வீடுகளில் நெல்மணிக் கதிர்களால் கட்டப்பட்ட  தோரணங்களைப் பார்க்கலாம். 

அதில் இருக்கின்ற தானியங்களை  சிட்டுக் குருவிகள்  கொத்தித் தின்று மகிழும். 

குருவிகளின் சத்தம் வீடுகளில் நிறையும் பொழுது மங்கலங்கள் பெருகும் என்பது ஐதீகம்.


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே 
தலை.

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க..

அனைவருக்கும்
அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் மிக அருமை.
    குழந்தை நாற்றை கையில் வைத்து இருக்கும் படம் அழகு.வயலில் நின்று சிரிக்கும் பெண் அழகு. வயல் இருக்கும் வீடுகளில் முன்பு கதிர்களை கட்டுவார்கள், இப்போது பூம்புகாரில், மற்றும் கடைகளில் விற்கிறார்கள் அதை வாங்கி வீட்டில் கட்டுகிறார்கள். குருவிகள் சாப்பிட வருவது இல்லை.
    இனிய பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. ரசனையான படங்கள்.  அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பதில்கள்
    1. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் துரை அண்ணா!

    படங்களும் ஓவியங்களும் பழைய நினைவுகளை மீட்டன,. ஆமாம் வாயிலில் புதிய கதிரைத் தொங்கவிட்டு வீட்டு நடு ஹாலில் உத்தரத்தில் தொங்க விடுவதும் உண்டு. மத்தியில் நெல்லை போட்டு குவித்து படியால அளந்து....அது ஒரு காலம்....அதன் பின் புழுக்கி காய வைத்து மெஷினில் உமி நீக்கி என்று பல நினைவுகள் துரை அண்ணா.

    அழகான படங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

      // படங்களும் ஓவியங்களும் பழைய நினைவுகளை மீட்டன.. //

      உண்மை தான்..

      அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள். படங்கள் அனைத்தையும் ரசித்தேன். தங்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள். காலையில் வர இயலவில்லை. அதனாலென்ன..! இன்று முழுவதும் உத்தராயண புண்யகாலந்தானே என மாலை வாழ்த்துரைக்க வந்துள்ளேன். தங்களது வாழ்த்துக்களும் நன்றி சகோதரரே.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // இன்று முழுவதும் உத்தராயண புண்ய காலந்தானே என மாலையில் வாழ்த்துரைக்க வந்துள்ளேன்.. //

      அன்பின் வருகையும் கருத்தும் உத்தராயண புண்ணிய கால வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. தை முதல் நாளில் பசுமை கொஞ்சும் கிராமத்து வயல் காட்சிகள் மனதுக்கு நிறைவு செழிக்கட்டும் கிராமங்கள்.

    உங்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பசுமை கொஞ்சும் கிராமத்து வயல் காட்சிகள் மனதுக்கு நிறைவு.. //

      அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..