நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 25, 2022

சஷ்டி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 8
செவ்வாய்க்கிழமை
ஸ்ரீ கந்தசஷ்டி விரதத்தின்
முதல் நாள்


திருக்கயிலைத் திருப்புகழ்

தனதனனத் ... தனதான
தனதனனத் ... தனதான

புமியதனிற் ... ப்ரபுவான 
புகலியில்வித் ... தகர்போல

அமிர்தகவித் ... தொடைபாட 
அடிமைதனக் ... கருள்வாயே

சமரிலெதிர்த் ... தசுர்மாளத் 
தனியயில்விட் ... டருள்வோனே..

நமசிவயப் ... பொருளானே 
ரசதகிரிப் ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-
நன்றி: கௌமாரம்


இப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும்,

சீர்காழிப் பதியில் அவதரித்தவருமான
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல

மரணமிலா வாழ்வினைத் தரவல்ல திருப் பதிகங்களைப் பாடுதற்கு

இந்த அடிமைக்கும் அருள் புரிவாயாக.

போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டு ஒழிவதற்காக

ஒப்பற்ற வேலாயுதத்தை 
செலுத்தியவனே,

நமசிவாய என்ற ஐந்தெழுத்தின்
உட்பொருளானவனே,

வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) திகழும்
பெருமாளே..

முருகா சரணம் அழகா சரணம்
முத்துக் குமரா சரணம் சரணம்
***

13 கருத்துகள்:

  1. சஷ்டி முதல் நாள். முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முருகன் சிறு பாலகனாக தாய், தந்தையுடன் இருக்கும் படங்கள் மிக அருமையாக உள்ளது.பால முருகனை தரிசித்துக் கொண்டேன். அருணகிரி நாதர் அருளிய பாடலும், விளக்கமும் அருமை. கந்த சஷ்டி விழா தொடக்க நாளான இன்று முருகனை பக்தியுடன் வணங்கி துதிப்போம். அவனருள் என்றும் கிடைத்திட வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கந்த சஷ்டி விழா தொடக்க நாளான இன்று முருகனை பக்தியுடன் வணங்கி துதிப்போம்.//

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சஷ்டி முதல் நாள் முருகன் தாய் தந்தையருடன் மகிழ்ந்து இருக்கும் படம் அருமை.திருப்புகழை பாடி மனதாற வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // படம் அருமை. திருப்புகழை பாடி மனதாற வேண்டிக் கொண்டேன்...//

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. நெல்லை..
      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. முருகன் அருள்முன்னிற்கட்டும். அம்மை அப்பனும் சோமாஸ்கந்தனாக நடுவில் வீற்றிருக்கும் குமரக்கடவுள் அனைவரையும் காத்து ரக்ஷிப்பானாக. வேலும் மயிலும் துணை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..