நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2022

அறம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
சதுரங்கம் பதிவில் சொல்லப்பட்ட அறம் இன்றைய பதிவில் தொடர்கின்றது..

மஹாபாரதம்.com எனும் தளத்திலிருந்து 
(வண்ணங்களுடன் கூடியவை) பெறப்பட்ட
விஷயங்களை வாக்கிய திருத்தங்கள் சிலவற்றுடன் சமர்ப்பிக்கின்றேன்..


வேட்டைக்காக காட்டுக்குச் சென்ற ஹஸ்தினாபுரத்தின் மன்னன் பரீக்ஷித் -  விதி வசத்தால் அங்கு நிஷ்டையில் இருந்த முனிவரின் கழுத்தில் செத்துப் போன பாம்பைப் போட்டு அவமரியாதை செய்து விட்டு வந்தார்..

இவர் அர்ச்சுனனின் பேரன்.. அபிமன்யு - உத்தரை தம்பதியரின் மகன்..

ஆசிரமத்துக்குத் திரும்பி வந்த ரிஷி குமாரன் இதைக் கண்டு கோபம் கொண்டு சாபம் இடுகின்றான்.. 

இதைக் கேட்டு மனம் வருந்திய மன்னன் பரீக்ஷித் தன் மகன் ஜனமேஜயனுக்கு 
முடி சூட்டி விட்டு அரியணையைத் துறந்து சுக முனிவரிடம் பாகவதம் கேட்கின்றார்..

எவ்வளவோ முயன்றும் பயனில்லாமல் ஏழாம் நாள் சாபத்தின்படி நாகராஜனாகிய தட்சகனால் தீண்டப்பட்டு மாண்டு போகின்றார்..

ஜனமேஜயன் தனது தந்தை பரீக்ஷித்துவின் இறப்புக்குத் தட்சகன்  காரணமாக இருந்ததால், நாக இனத்தையே அழிப்பதில்    
குறியாக இருந்தான்.

மேலும் உத்தங்கர் தூண்டுதல் காரணமாக சர்ப்ப சத்ரா எனும் வேள்வியை நடத்துகின்றான். 

நாக அரசன் தட்சகன் அந்த வேள்வியில் விழுந்து இறக்கும் தருவாயில், நாககன்னி ஜரத்காருவுக்குப் பிறந்த ஆஸ்திகர் என்பவர் அவனது நாக அழிப்பு வேள்வியை தடுக்கின்றார்.

அப்போது அங்கு வந்த வேதவியாசர் சாபம் ஒன்று நிறைவேற வேண்டி ஒருவர் செய்த செயலுக்காக, அந்த இனத்தவரையே அழிப்பது அறமாகாது. பாண்டவ குலத்தின் வழித்தோன்றலுக்கு இது அழகல்ல என்று எடுத்துக் கூறினார்..

இதன்படி அவரது சொல்லுக்கு மதிப்பு கொடுத்த ஜனமேஜயன் நாக வேள்வியைக் கைவிட்டு விட்டு தனது மூதாதையர்கள் பற்றி அறிய விரும்புகின்றான்..

வேதவியாசர் தனது சீடராகிய வைசம்பாயனரை நோக்கி ஜனமேஜயனுக்கு மகாபாரதக் கதையை விவரித்துச் சொல்லும்படி பணிக்கின்றார்.

அதன்படி, 
நாக வேள்வி நடந்த அந்த இடத்தில் ஜெயம் என்னும் மகாபாரத்தை எடுத்துச் சொல்கின்றார்..

பல பர்வங்களைக் கடந்த நிலையில் 
பீஷ்ம பர்வத்தில் யுத்த பகுதி..


தொடர்ந்து வைசம்பாயனர் சொல்கின்றார்..

ஓ... குரு குலத்தின் காளையே.. ஜனமேஜயா!..

குருக்ஷேத்திரத்தில் மகாயுத்தத்தைத் தொடங்கும் முன்பாக -

கௌரவர்களும் பாண்டவர்கள் மற்றும் சோமகர்களும் சேர்ந்து யுத்தம் சம்பந்தமாக சில  உடன்படிக்கைகளையும், பல்வேறு விதமான
விதிகளையும் தங்களுக்குள் நிர்ணயித்துக் கொண்டனர். அவையாவன -

சமமான சூழலில் சமமானவர்கள் மட்டுமே தங்களுக்குள் போரிட வேண்டும்.  

துன்பத்தைக் கண்டு அஞ்சாமல் போரிட்ட பிறகு போராளிகள் விலகினாலும், அதுவும் நமக்கு நிறைவையே தர வேண்டும். {போர் முடிந்த பிறகு, ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளல் வேண்டும்}. 

வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடுபவர்கள் அந்நிலையிலேயே இருக்க வேண்டும். 

படையணியை விட்டு விலகியவர்களைக் தாக்கக் கூடாது. 

தேர் வீரனாகிய ஒருவன் மற்றொரு தேர் வீரனையே எதிராளியாகக் கொள்ள வேண்டும். யானையின் கழுத்தில் இருப்பவன், அதே நிலையில் இருக்கும் போராளியையே தனது எதிரியாகக் கொள்ள வேண்டும். 

ஒரு குதிரை மற்றொரு குதிரையையே சந்திக்க வேண்டும்.

ஓ.. பாரதா!.. ஜனமேஜயா.. ஒரு காலாட்படை வீரர் மற்றொரு காலாட்படை வீரரையே எதிர்கொள்ள வேண்டும். 

உடற்தகுதி விருப்பம் துணிவு பலம் ஆகிய கருதுகோள்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒருவன் மற்றவனுக்கு அறிவிப்பைச் செய்துவிட்டுத் தான் தாக்குதலைத் தொடங்க வேண்டும். 

தாக்குதலுக்குத் தயாராக இல்லாதவனையோ அச்சப்பட்டவனையோ யாரும் தாக்கக்கூடாது.

வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒருவன், இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன், பின்வாங்கும் ஒருவன், ஆயுதம் தகுதியற்று விட்டதாகக் காண்பிக்கும் ஒருவன், கவசம் தரிக்காதவன் ஆகியோர் ஒருபோதும் தாக்கப்படக் கூடாது.  

தேரோட்டிகள், (தேரில் பூட்டப்பட்ட அல்லது ஆயுதங்களைச் சுமந்து வரும்) விலங்குகள், ஆயுதங்களைச் சுமந்து வருவதில் ஈடுபடும் மனிதர்கள், பேரிகை அடிப்பவர்கள் மற்றும் சங்கு முழக்குபவர்கள் மற்றும் போர்க் களத்தில் இதர பணிகளைச் செய்பவர்கள் -  ஆகியோரை ஒருபோதும் தாக்கக்கூடாது. 

தனியாக விடப்பட்டவனத் தாக்கக் கூடாது.. கொல்லவும் கூடாது.

உண்மையில், "நம்பிக்கைக்கு உரித்தான" என்பதே இங்கு பொருள். அதாவது இப்போது தாக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன் ஆயத்தமில்லாமல் இருக்கும் ஒருவனைத் தாக்கக்கூடாது என்பதே இங்கு அர்த்தம்.

இப்படியான விஷயங்களைப் பேசி உடன்படிக்கை செய்து கொண்ட கௌரவர்கள் பாண்டவர்கள் மற்றும் சோமகர்கள் மிகுந்த வேகத்துடன் ஒருவருக்கொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்..


இப்படியாக வகுத்துக் கொள்ளப்பட்ட அறம் யுத்த களத்தில் மீறப்பட்டதே இல்லையா?..

மஹாபாரத யுத்தத்தின் பதின்மூன்றாம் நாள் 
அபிமன்யுவுடன் அறமும் சேர்த்தே வீழ்த்தப்பட்டது..

யுத்தம் முடிந்த பிறகு அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தின் மீது அஸ்வத்தாமன் அஸ்திரத்தை வீசியது வரைக்கும் நடந்ததெல்லாம் விதி மீறல்கள் தான்..

அவற்றுக்கெல்லாம் காரணம்
துரியோதனாதிகளின் பிழைகளே..
***

பாரதப் போர் முடிந்த பிறகு -
யாதவக் குலத்தைப் புகழடையச் செய்த ஸ்ரீகிருஷ்ணன் - 
" பாண்டவர்களின் சார்பில் இருந்து, பாரதப் போர் முடிந்த பிறகு, உன் மகன்களிடம் அரசை மீட்டுக் கொடுப்பேன்.. " - என்று, குந்தி தேவியிடம் முன்பு உறுதி 
அளித்திருந்தபடிக்கு ஆட்சியைக் கொடுத்து அருளினான்..


வனமாலி கதீ சார்ங்கி
சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமந் நாராயணோ விஷ்ணுர்
வாசுதேவோபிரக்ஷது
*
ஓம் ஹரி ஓம்
***

16 கருத்துகள்:

  1. அறிந்ததுதான். எத்தனை முறை படித்தாலும் புதிதாகத் தோன்றும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் .. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தோன்றும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. போரின் விதிமுறைகள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  3. படிக்கப் படிக்கச் சுவை கூட்டும் பாரதம். அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி
      தனபாலன்..

      நீக்கு
  5. நல்ல பகிர்வு. அறத்தை கைக்கொள்ளாது புறமுதுகில் குத்துவதே வழக்கமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அப்படித் தான் நடக்கின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. நாக சதுர்த்தி நேற்று , சிலர் இன்று நாகர்சதுர்த்தி கொண்டாடுகிறார்கள். நாக வேள்வி நிகழத்திய பாரத கதை பகிர்வு.

    கருட பஞ்சமி நாளில் கருடன் மீது அன்புடன் வந்து உதவும் யாதவ பெருமாள் தரிசனம் அருமை.
    அனைவருக்கும் அன்புடன் அருள் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாக சதுர்த்தியும் கருட பஞ்சமியும் இணையும் நாளில் பதிவு வெளியாகி உள்ளது..
      இதை நான் திட்டமிட வில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. சென்ற பதிவும் ஆடிப்பூர பதிவு வாசித்துவிட்டேன்.

    இக்கதையை இப்போதுதான் அறிகிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா எனக்கு ஒரு கேள்வி வருகிறது. தவறாக நினைக்காதீங்க.

    சிலவற்றை விதி என்கிறோம். சிலவற்றைத் தவறு என்கிறோம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். தெரியாமல் செய்வது விதி (இக்கதையில்கூட முதலில் 'விதிவசத்தால்' என்று சொல்லப்படுகிறது.) அறிந்து செய்வது தவறு (இது அஸ்வத்தாமன் கர்ப்பிணியான உத்தரையின் மீது அம்பு எய்தது)

    துரியோதனாதிகளின் தவறுகளே என்று...

    அப்படி அவர்கள் பிறப்பதும் தவறு செய்வதும் கூட விதி எனலாம்தானே? அப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் அப்படித்தானே நடக்கும்? எனக்கு இப்படிப் பல கேள்விகள் எழும் அதனால் வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு விளக்கம் கொடுப்பதற்கு ஞானிகளால் தான் ஆகும்.. இருந்தாலும் இது பற்றி வரும் வாரங்களில் நமக்குள்ளாகப் பேசுவோம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அதர்மத்தை வெல்லும் போராட்டந்தானே மஹாபாரதக்கதை. எவ்வளவு முறை தெளிவாக படித்தாலும், சூழ்ச்சியில் பிறக்கும் அதர்மத்தை கண்டு மனம் கோபத்துடன் வருத்தம் கொள்ளும். ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ தந்திரம் அதை வென்று விடும் போதினில் எல்லாம் அவன் துணை எப்போதும் நம்மருகில்தான் தர்மம் வெல்வதற்காக இருப்பதை உணரும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? நேற்று நாகசதுர்த்தி, இன்று கருடபஞ்சமி விழாவின் தொடர்பாக நாகம் பற்றிய கதை, மற்றும் பதிவில் கருடவாகனம் ஏறி வந்த நாராயணனையும் கண்டு மனம் குளிர தரிசித்துக் கொண்டேன். பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..