நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 13, 2018

மறக்கவும் கூடுமோ!..


மார்பில் அணிவதற்கே உன்னைப் போல்
வைர மணிகள் உண்டோ?..
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல்
செல்வம் பிறிதும் உண்டோ?..
***

பாரதி.. பாரதி.. பாரதி...
உன்னையும் மறப்பதுண்டோ!..
***

மார்கழி நெருங்கி விட்டது..
மகாகவியை வாழ்த்தவும்
மார்கழியை வரவேற்கவும்
மனதுக்கினிய பாடல் ஒன்று..


காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!..
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா - நின்றன் 
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா!..

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா!..
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!..
***

வாழ்க பாரதி!..
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  "உன்னையும் மறப்பதுண்டோ" வரிகள் எனக்குள் டி எம் எஸ் குரலாய் ஒலிக்கிறது! தொடர்ந்து "முருகா..." என்னும் வார்த்தையும் வருகிறது!!

  பதிலளிநீக்கு
 2. முதல் கவிதை அருமை. ராதை கண்ணனைப் பார்த்தும் சொல்லலாம், கண்ணன் ராதையைப் பார்த்தும் சொல்லலாம்!

  பதிலளிநீக்கு
 3. காக்கைச் சிறகினிலே...

  சூலமங்கலம் குரலில் ஒரு காதிலும்,யேசுதாஸ் குரலில் இன்னொருகாதிலும் ஒலிக்கிறதே....!!

  பாரதி நினைவைப் போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சேஷுவின் காக்கைச்சிறகினிலே பிருந்தாவன சாரங்காவில் கேட்டதில்லையோ??

   கீதா

   நீக்கு
  2. முன்பு சிலோன் வானொலியில் இது காப் ஃபில்லிங்காக போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதுவும் ஜோன்புரி பாடலான ராம மந்த்ரவ பாடலும்...

   கீதா

   நீக்கு
 4. எனக்குக் "காக்கைச் சிறகினிலே" பாடல் எப்போதும் டி.என்.சேஷகோபாலனை நினைவூட்டும். அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. பாரதியின் இப்பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியது எனக்கு மிகவும் பிடிக்கும் ஜி

  பதிலளிநீக்கு
 6. பாரதியை போற்றுவோம்...

  பதிலளிநீக்கு
 7. "உன்னையும் மறப்பதுண்டோ" என்று எனக்கும் டி.எம்.எஸ் அவரகள் பாடல்தான் நினைவுக்கு வந்தது.
  காக்கை சிறகினிலே பிடித்த பாடல். நேற்று
  கடையநல்லூரில் இருக்கும் போது பாரதியின் நினைவுதான்.
  பதிவும் படமும் , அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. அத்தனையும் அருமை...
  மறக்க முடியவில்லை... சில சினிமாப் படல்கள் நினைவுக்கு வருது...

  பதிலளிநீக்கு
 9. அருமை ஐயா. உங்கள் கவிதை மிக மிக அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 10. அண்ணா உங்கள் கவிதை கலக்கல்! நீங்க எழுதறதைப் பத்தி சொல்லணுமா என்ன..!!!!!

  அண்ணா காக்கைச் சிறகினிலே பாடல் தாஸேட்டன் படத்தில் பாடியதும் அப்புறம் சேஷகோபாலன் அவர்கள் கர்நாடக இசையாக பிருந்தாவனச் சாரங்கா ராகத்தில் பாடியதும் நினைவுக்கு வருது...

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..