உலகின் மிகப் பழைமையான பழங்களுள் இதுவும் ஒன்று..
50 மில்லியன் ஆண்டுகளாக
இது பூமியில் நின்று விளங்குவதாக விக்கிபீடியா சொல்கின்றது...
இது - பேரீச்சம்பழம்..
பாலை வனங்களின் - குறிப்பாக
அரபு நாடுகளின் முக்கியமான அடையாளம் - பேரீச்சம்பழம் தான்..
நான் கூட நினைத்திருந்தேன் -
பேரீச்சம்பழ விளைச்சலில் சவுதி அரேபியா தான் முதலிடம் என்று..
விக்கிபீடியா வழங்கும் தகவலின்படி
எகிப்து தான் முதலிடம்.. சவூதிக்கு நான்காமிடம் தான்...
அப்போ - குவைத்?..
முதல் பத்து இடங்களில் கூட இல்லை!...
அதெல்லாம் போகட்டும்...
சென்ற ஆண்டே நினைத்திருந்தேன் -
இப்படி ஒரு பதிவினை வழங்க வேண்டும் என்று...
இப்போது தான் வேளை கூடி வந்தது....
நான் பணி செய்யும் சமையற்கூடத்தின் வாசலில் உள்ள
பேரீச்சை மரத்தின் குலைகள் இன்றைய பதிவில்...
பாளை பிடித்த மூன்று மாதங்களுக்குள்
பிஞ்சுகள் கனிகளாகின்றன...
அரபு வெளியில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நிலவும்
புழுக்கமான சூழ்நிலையில் தானாகப் பழுத்து விடுகின்றன...
நமது கலாச்சாரத்துக்கு அரபுகளின் பேரீச்சை உகந்தது அல்ல...
முன்பெல்லாம் திருவிழாப் பந்தல்களில் ஈச்சங்குலைகளைக் கட்டுவது மரபு..
கொள்ளிடக் கரையில் ஈச்சை மரங்கள் காணப்படுகின்றன...
அவை குலைகளை ஈன்றாலும் அவற்றைப் பழுக்க விடுவதில்லை - நம்மவர்கள்...
பனையைப் போலவே
ஈச்சையிலும் தூக்கணாங்குருவிக் கூடுகளைக் காணலாம்...
நமது ஊர்ப்புறங்களில்
தப்பித் தவறிக் காணப்படும் ஈச்சைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன..
ஆனாலும் அவை அழிவின் விளிம்பினில் உள்ளன...
தஞ்சைக்கு வடக்கே
கணபதி அக்ரஹாரம் செல்லும் வழியில் ஈச்சங்குடி என்றும்
தஞ்சைக்கு தெற்கே
ஒரத்தநாட்டிற்கு அருகே ஈச்சங்கோட்டை என்றும் ஊர்கள் உள்ளன..
அவை
ஈசன் குடி, ஈசன் கோட்டைஎன்றிருந்து மருவியவை என்கிறார்கள்..
இவற்றுள் -
திருஐயாற்றினை அடுத்துள்ள
திங்களூர் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலில்
ஈச்சை தலமரமாக இருந்திருக்கின்றது...
இப்போது அங்கே வில்வம் தலமரம்...

![]() |
| ஈச்சம் பாளை |
![]() |
| ஈச்சம் பூக்கள் |
பிஞ்சுகள் கனிகளாகின்றன...
அரபு வெளியில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நிலவும்
புழுக்கமான சூழ்நிலையில் தானாகப் பழுத்து விடுகின்றன...
![]() |
| பூக்கள் பிஞ்சுகளாகி விட்டன.. |
![]() |
| நிறை நிலையில் காய்கள்.. |
பேரீச்சம்பழம் நார்ச்சத்து மிக்கது...
பலவிதமான வைட்டமின்களும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சல்ஃபர், மக்னீசியம் இவற்றோடு தாமிரம் மற்றும் இரும்புச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன...
இரத்தச் சோகை உள்ளவர்களுக்கு பேரீச்சை நல்லது..
![]() |
| செம்பழம் |
பேரீச்சங்காய் கடுந்துவர்ப்பு உடையது..
செம்பழத்தைத் தின்றால் தேங்காய்த் துண்டுகளைப் போலிருக்கும்...
தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில் அபிஷேக மற்றும் யாகசாலைப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் உலர்ந்த பேரீச்சம்பழங்கள் கிடைக்கின்றன...செம்பழத்தைத் தின்றால் தேங்காய்த் துண்டுகளைப் போலிருக்கும்...
![]() |
| செம்பழங்கள்.. |
மேலும் பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால்
நரம்பு மண்டலம் நலம் பெறும் என்கின்றார்கள்...
பசும்பாலும் பேரீச்சம் பழமும் பொதுவாக நல்லது
என்றாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததல்ல...
பேரீச்சம்பழம் பாலியல் வேட்கையைத் தூண்டுகின்றது...
எனவே,
இளந்தம்பதியர்க்கு பாலுடன் தரப்படும் மும்மூர்த்திகளுள் இதுவும் ஒன்று...
ஆனாலும் -
முரட்டுத் தனமான குணத்தை வளர்க்கின்றது என்று சொல்லப்படுகின்றது...
பாலைவன நாடுகளில் - அந்தந்த நாடுகளின் இயல்புக்கேற்ப
பலரகமான பேரீச்சைகள் விளைவிக்கப்படுகின்றன...
முதிர்ந்த பழங்களை அப்படியே கனிந்த தன்மையுடன் பாதுகாத்து உண்பதைப் போலவே உலர வைத்தும் பயன்படுக்கிறார்கள்...
இப்போதெல்லாம்
நமது ஊர்களில் அரபு நாட்டுப் பேரீச்சம் பழம் என்று
ஈரப் பதமான பழங்களை விற்கின்றார்கள்..
அவற்றின் தரத்துக்கு உத்தரவாதம் இல்லை...
![]() |
| கனிந்த பழங்கள் |
நமது கலாச்சாரத்துக்கு அரபுகளின் பேரீச்சை உகந்தது அல்ல...
முன்பெல்லாம் திருவிழாப் பந்தல்களில் ஈச்சங்குலைகளைக் கட்டுவது மரபு..
கொள்ளிடக் கரையில் ஈச்சை மரங்கள் காணப்படுகின்றன...
அவை குலைகளை ஈன்றாலும் அவற்றைப் பழுக்க விடுவதில்லை - நம்மவர்கள்...
பனையைப் போலவே
ஈச்சையிலும் தூக்கணாங்குருவிக் கூடுகளைக் காணலாம்...
நமது ஊர்ப்புறங்களில்
தப்பித் தவறிக் காணப்படும் ஈச்சைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன..
ஆனாலும் அவை அழிவின் விளிம்பினில் உள்ளன...
தஞ்சைக்கு வடக்கே
கணபதி அக்ரஹாரம் செல்லும் வழியில் ஈச்சங்குடி என்றும்
தஞ்சைக்கு தெற்கே
ஒரத்தநாட்டிற்கு அருகே ஈச்சங்கோட்டை என்றும் ஊர்கள் உள்ளன..
அவை
ஈசன் குடி, ஈசன் கோட்டைஎன்றிருந்து மருவியவை என்கிறார்கள்..
![]() |
| குருவடி போற்றி |
இவற்றுள் -
தஞ்சைக்கு வடக்கே உள்ள ஈச்சங்குடி கிராமம் தான்
காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அவதார ஸ்தலம்.
இத்தலத்தில்
ஸ்ரீ காருண்யவல்லி உடனுறை ஸ்ரீ கர்ஜூரபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது..
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் - ஈச்சை மரம்...
கர்ஜூர (kharjura) என்றால் - ஈச்சை...
ஈச்சை மரங்கள் நிறைந்த வனத்தில் விளங்கும் ஈசன் என்பது பொருள்...
எனவே ஈச்சை வனத்து ஈசன் .. ஈச்சங்குடி என்பது நிதர்சனம்...
ஆக -
ஈசன்குடி என்பது தான்
ஈச்சங்குடி என மருவி வந்தது என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது..
திங்களூர் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலில்
ஈச்சை தலமரமாக இருந்திருக்கின்றது...
இப்போது அங்கே வில்வம் தலமரம்...
இன்றைய பதிவின் படங்கள் தங்களைக் கவரும் என, நம்புகின்றேன்...
வாழ்க நலம்...
ஃஃஃ