நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 04, 2015

தைப்பூசத் திருவிழா - 1

நேற்று தைப் பூசத் திருவிழா.

தமிழகத்தில் முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சிவாலயங்களிலும் முருகன் கோயில்களிலும் பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டு மகிழ்ந்தனர்.


பழனி, திருச்செந்தூர் - என முருகன் திருக்கோயில்கள் தோறும் மகிழ்ச்சிப் பெருக்குடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் மட்டுமின்றி - மலேஷியா சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நேற்று மதுரையம்பதியில் தைப்பூசத் தெப்பத் திருவிழா சிறப்புடன் நிகழ்ந்தது.

அதிகாலை திருக்கோயிலில் இருந்து பரிவாரங்களுடன் இனிதே புறப்பட்ட
ஸ்ரீ மீனாட்சியும் சுந்தரேசரும், பிரியாவிடையும் காலையில் வண்டியூர் வந்தடைந்தனர்.

வண்டியூர் தெப்பக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மனும் ஸ்ரீ சுந்தரேஸ்வரரும் பிரியா விடையுடன் தெப்பத் திருவிழா கண்டருளினர்.

ஸ்வாமி எப்போ வருவாரோ!..
ஸ்வாமிக்காகக் காத்திருக்கும் அலங்காரத் தெப்பம்
பச்சைப் பட்டுடுத்தி பைங்கிளியுடன் வருகின்றாள்
அங்கயற்கண்ணியுடன் ஐயன் சுந்தரேசன்






நீராழி மண்டபத்தில் திருக்காட்சி
அன்னையின் பெயர் சொல்லும் அகல் விளக்கு
கரை சேர்க்கும் அம்பிகைக்கு கரையெல்லாம் திருவிளக்கு
அரசாளும் அம்பிகைக்கு அலங்கார திருவிளக்கு
திசை ஆளும் தேவிக்கு திசை எங்கும் திருவிளக்கு
தேனார்மொழி மீனாட்சிக்கு தீபங்களால் ஆராதனை
திருவிழா காண வந்த தைப் பூச வெண்ணிலா
அலங்காரத் தெப்பத்தில் அரசாளும் மீனாட்சி
காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் என இருமுறை தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தது.

தெப்பக் குளத்தைச் சுற்றிலும் பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

தெப்பத் திருவிழாவின் இனிய காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்..

அழகிய படங்களை தமது தளத்தில் வழங்கிய அன்பின் குணா அமுதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!..

திரு. குணா அமுதன்
நண்பர் குணா அமுதன் அவர்களின் கை வண்ணங்களைக் காண -

https://www.facebook.com/GunaAmuthanPhotography


வாழ்க வளமுடன்!.. வாழ்க நலமுடன்!..  
* * *