நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தைப்பூசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தைப்பூசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 05, 2026

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை

திரு இடைமருதூர் தரிசனம் தொடர்கின்றது


தமிழகத்தில் காசிக்குச் சமமான தலங்கள் என்று சொல்லப்படுபவை ஆறு..

ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம் அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்..

இவற்றுள் அர்ஜூனம் எனப்படும் இடைமருதூரும் ஒன்று..



குளக்கரையில் சின்னதொரு சிவாலயம்





ஸ்ரீ பட்டினத்தார்












பெருங்கூட்டத்தின் இடையே இயன்ற வரை படங்கள் எடுத்துள்ளேன்...


திருக்கோயிலின் உள்ளே படம் எடுப்பதற்குத் தடை செய்யப்பட்டு உள்ளது..

அந்த அளவில் பிரார்த்தனைகளுடன் முன்னிரவுப் போதில் ரயில் மூலம் தஞ்சை திரும்பினோம்..

ஜோதி மகாலிங்கம் போற்றி ஓம் 
பெருநல மாமுலையாளே 
போற்றி ஓம் 
***

புதன், பிப்ரவரி 04, 2026

தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 புதன் கிழமை


தைப்பூசத்திற்கு
கோயிலுக்குச் செல்லலாம் என,  ஞாயிறன்று தஞ்சையில் இருந்து ரயில் வழியே திரு இடைமருதூரைச் சென்றடைந்தோம்... 

திருத்தேர்கள் அனைத்தும் நிலையில் நின்றிருந்தன..

முதல் நாள்  தேரோட்டம் நடந்திருந்தும் கூட்டம் குறையாதிருந்தது..

தஞ்சை மாவட்டத்தின் சீர் பெரும் விழாக்களில் திரு இடைமருதூர் தீர்த்தவாரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது...

பஞ்ச மூர்த்திகளும் சிறப்புற வீதியுலா எழுந்தருள ஆயிரக் கணக்கான மக்கள் இரண்டு கிமீ தொலைவில் உள்ள காவிரிக் கரையைச் சென்றடைந்தனர்...

மூட்டு வலியினால் நான் திருக் கோயிலிலேயே இருந்து கொண்டேன்.. மனைவியும் மகனும் சென்று வந்தனர்...

இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தார் அவர்களின் சீரிய பராமரிப்பில் உள்ளது..



பெரிய தேர்





 காணொளிகளுக்கு  நன்றி
சிவஸ்ரீகாந்த்

ஓம் நம சிவாய
***

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026

தைப்பூசம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
ஞாயிற்றுக்கிழமை

இன்று தைப்பூசம்.,

சிவ வைபவமாகிய 
இந்நாள் 
சிவாம்சமாகிய முருகப்பெருமானுக்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது..

இந்நாளில்
காவிரியில் நீராடி ஈசனை வழிபடுதல் சிறப்பு...

அந்த வகையில் புகழ் பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் எனப்படும் திரு இடைமருதூர்..

வரகுண பாண்டியனின் பிரம்ம ஹத்தி தோஷம் விலகிய தலம்...

பட்டினத்து அடிகளும் பத்திரகிரியாரும் பல காலம் தங்கியிருந்ததும் இங்கேதான்..

மூலஸ்தானத்திற்கு வலப்புறத்தில் தெற்கு முகமாக கணபதி விளங்குகின்றார்...

நால்வராலும் பாடல் பெற்ற திருவூர்..


இறைவன்
ஸ்ரீ ஜோதி மகாலிங்கம்
அம்பிகை
ஸ்ரீ பிரகத்குஜாம்பிகை

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசன்உறை கின்ற இடைமரு தீதோ.. 1/32/5
- திருஞானசம்பந்தர் -

முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார் சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடங்கொண் டாரே.
4/35/2
- திருநாவுக்கரசர் -

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கு ஒன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக் குய்வகை யருளாய்
இடைமருதுறை எந்தைபிரானே
7/60/4
- சுந்தரர் -
 
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி 
- மாணிக்கவாசகர் -
 
நன்றி 
பன்னிரு திருமுறை


பழனிமலைத் திருப்புகழ்

தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ... தனதான

வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
     வயிறில்நெடு நாள லைந்து ... புவிமீதே

மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
     வயதுபதி னாறு சென்று ... வடிவாகிக்

கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
     கனிவதுட னேய ணைந்து ... பொருள்தேடிக்

கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
     கசடனெனை யாள வுன்ற ... னருள்தாராய்...

புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
     புதல்வியித ழூற லுண்ட ... புலவோனே

பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
     புதியமயி லேறு கந்த ... வடிவேலா

பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
     பரமகலி யாணி தந்த ... பெருவாழ்வே

பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
     பழநிமலை மீதி னின்ற .... பெருமாளே..
- அருணகிரி நாதர் - 

 நன்றி கௌமாரம்
**

தைப்பூச
நல்வாழ்த்துகள்

ஓம் நம சிவாய
***

ஞாயிறு, பிப்ரவரி 05, 2023

தைப்பூசம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 22
  ஞாயிற்றுக்கிழமை

தைப்பூசம் எனும் புண்ணிய நாள்

இடைமருது ஈசன்
வாசங் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டியொர் செம்மை உடைத்தாய்ப்
பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடை மருது ஈதோ.. 1/32/5

வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப்
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே... 2/56/5


என்று,
ஞானசம்பந்தப் பெருமான் போற்றுகின்ற நாள்..

பூச நீர் பொழியும் புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி.. (2/2/6)

- என்று மேலும் புகழ்கின்றார்..


தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாள்..

தமிழகத்தின் சிவாலயங்களில் - குறிப்பாக திரு இடைமருதூரில்  சிறப்பாக நடத்தப் பெற்ற - நடைபெறுகின்ற தொன்மையான விழா தைப்பூசத் திருநாள்..

முருகப் பெருமானின் திருக்கோயில்களில் சிறப்பாக அனுசரிக்கப்படும்  நாள் தைப்பூசம்..

மயிலாப்பூரில் அரவந்தீண்டி இறந்து குடத்துக்குள் சாம்பலாகிக் கிடந்த பூம்பாவையை - திருஞானசம்பந்தர்
உயிர்ப்பிக்கும் போது -


நெய்ப்பூசும்  ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.. 2/47

நெய் விளங்கும் பொங்கலுடன் உன்னைப் போன்ற இளம் பெண்கள் கொண்டாடுகின்ற தைப்பூச விழாவினைக் காணாமல் நீ போகலாமா? - என்று அழைக்கின்றார்..



உலகில் சிவநேசச் செல்வர்களாகிய செந்தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம்  - பால் குடங்கள்,  காவடிகள் - என, வெகு சிறப்பாக அனுசரிக்கப்படுவது தைப்பூசம்..


வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் சித்தி வளாக திரு அறையில் ஜோதி  வடிவாகியதும்  இந்நாளில் தான்..


பாசம் ஒன்றிலராய்ப் பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈசன் எம்பெருமான் இடை மருதினில்
பூச நாம் புகுதும் புனலாடவே.. 5/14/1
-: திருநாவுக்கரசர் :-

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திரு ஆலங்காடுறையும் செல்வர் தாமே.. (6/78/1)

என்று குறிப்பிடுகின்ற அப்பர் ஸ்வாமிகள் , 

புனல் பொன்னித் தீர்த்தன் 
(6/14/4) 

என்றும் - இறைவனை சிறப்பிக்கின்றார்..

அவ்வண்ணமே நாமும் கருத்தில் கொண்டு இந்நாளில் நன்னீராடி ஈசன் எம்பெருமானையும் திருக்குமரனையும் தொழுது வணங்குவோம்..


 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு அரோகரா..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, பிப்ரவரி 08, 2020

தைப் பூசம்

பழந்தமிழரது திருநாட்கள் இன்னமும்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன..

அவற்றுள் தைப் பூச நன்னாளும் ஒன்று..

திருஞானசம்பந்தப் பெருமான் - திருமயிலையில்
சிவனேசஞ்செட்டியாரது திருமகளாகிய பூம்பாவையை
சாம்பற்குடத்திலிருந்து உயிர்ப்பிக்கும் போது -

மா மயிலைக் கபாலீச்சரத்தானும்
கற்பகவல்லி அம்பிகையும் 
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.. (2/47)


தைப்பூச நன்னாளைக் காணாமல் போகலாமா!.. - என்று வினவுகின்றார்...

மேலும் காவிரிக்குத் தென்கரைத் தலமாகிய
திருவலஞ்சுழியில் திருப்பதிகம் அருளும்போது -

பூசநீர் பொழியும் புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர் திரு நீர் சிறுமான் மறியீர் சொலீர்
ஏச வெண்தலை யிற்பலி கொள்வதி லாமையே..(2/2) 

- என்று பரவுகின்றார்...

இத்திருப்பாடலில் திகழ்ந்து வரும்
தேச நீர் திரு நீர் - என்ற திருவாக்கிற்கு
இந்தத் தேசமும் நீர், திருவாகிய பெருஞ் செல்வமும் நீர் -
என்பதாக தருமபுர ஆதீனத்தார் உரை செய்கின்றனர்...

பூச நன்னாளுக்குரிய திருத்தலமாகிய திருஇடைமருதூருக்கு
திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளும்போது -

ஸ்ரீ மகாலிங்கப்பெருமான் - திரு இடைமருதூர் 
வாசங் கமழ் மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்தீண்டி யொர்செம்மை யுடைத்தாய்ப் 
பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ..(1/32)

- என்று புகழ்ந்துரைக்கின்றார்...

அப்படியான பெருமையுடையது தைப் பூச நன்னாள்...
அப்பர் ஸ்வாமிகளும் திரு இடைமருதூரில் தரிசனம் செய்யும் போது -

திருவிடைமருதூர் தரிசனம் 
அன்ன வாகனத்தில் அம்பிகை
பாசம் ஒன்றி லராய்ப் பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
இசன் எம்பெருமான் இடைமருதினிற்
பூச நாம் புகுதும் புனலாடவே//(5/14)

- என்று திருப்பதிகம் செய்தருள்கின்றார்...

இப்படியாகத்
திருஇடைமருதூரில் நிகழும் தைப் பூச வைபவத்தினை
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
குறித்தருள்கின்றனர் எனில் தைப் பூசத்தின் பெருமை தான் என்னே!..

தை மாதத்தின் பௌர்ணமி பூச நட்சத்திரத்தை ஒன்றி அமையும்...


இடைமருதுறையும் எந்தை 
இந்நாளில் திருவிடைமருதூரிலிருந்து
எம்பெருமான் தீர்த்தவாரிக்கு காவிரிக்கு எழுந்தருள்வார்

காவிரி நதியில் நீராடுவது சிறப்பு - என்றாலும்

எங்கும் விளங்கும் நீர்நிலைகளில் மூழ்கிக் குளித்து
சிவ தரிசனம் செய்தல் சிறப்பு!.. - என்றே கொள்ளலாம்...

இதன் உட்பொருள்
நீர்நிலைகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே!..

ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பதைப் போல -

சிவபெருமானுக்குரிய தைப் பூசம்
செந்தமிழ்க் குமரனுக்கும் ஆகி வருவது பெருஞ்சிறப்பு..

தென்பழனித் திருக்குமரன் 
திருப்பரங்குன்றத் திருக்கோலம் 
இன்றைய நாளில் முருகன் திருக்கோயில்களில்
சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன என்றாலும்

பழனியம்பதியில் பெருந்திருவிழா நடைபெறுகின்றது...


தைப்பூச நாளில் தான்
வள்ளலார் பெருமான் 
ஜோதியாக நிறைந்தார்...


பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் 
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்து ஓங்கும் 
நமசிவாயத்தை நான் மறவேனே.. 
-: வள்ளலார் :- 
 ***
இன்றைய பதிவில்
தஞ்சைப் பெருங்கோயிலில்
திருக்குட முழுக்கினை அடுத்து
ஈசன் எம்பெருமானுக்கு நிகழ்த்தப்பெற்ற
திருமுழுக்கு தரிசனம்..

முதலாவது காணொளி திருமுழுக்கு..
இரண்டாவது தீப ஆராதனை..




அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசா யினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே...
-: திருமூலர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

புதன், ஜனவரி 23, 2019

தைப்பூச தரிசனம் 3

தைப்பூசத் திருநாளில்
தமிழகத்தின் ஆலயங்கள் பலவற்றிலும் நிகழ்ந்த
கோலாகலத் திருக்காட்சிகள் இன்றைய பதிவிலும் தொடர்கின்றன...

படங்களை வழங்கிய
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு மனமார்ந்த நன்றி...

தைப்பூசத் திருநாள் கோலாகலம்

ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயில்
தருமபுரி







வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே செந்திநகர்ச்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..
-: பழம் பாடல் :- 

ஸ்ரீ சிங்காரவேலன் - சிக்கல்..
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி - சுவாமிமலை..
அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.. 
-: திருமுருகாற்றுப்படை :- 

திருப்பரங்குன்றம்..
தைப் பூசத் திருத்தேர்
பழனியம்பதி..
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி - தஞ்சை பெரியகோயில்.. 
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
,ஆறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்..
-: கந்த புராணம் :-

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர்வேல் அழகா சரணம்.. சரணம்..
ஃஃஃ