தீபாவளியைத் தொடர்ந்து
சூர சம்ஹாரப் பெருவிழா தமிழகத்தின் திருக்கோயில்கள்
பலவற்றிலும் சிறப்புடன் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது...
மாமன் அன்று நரகாசுர வதம் நிகழ்த்தினான்...
அவனது அன்பு மருமகன் இன்று பத்மாசுரனை வதைக்கின்றான்...
இன்று நிறைவான கந்தசஷ்டி..
ஆணவம் மாயா கன்மம் எனும் மும்மலங்களும்
வீழ்த்தப்படுவதே சூர சங்காரத்தின் தத்துவம்...
மும்மலங்களாகிய காரிருளை
ஞானம் எனும் பேரொளியாகிய வேல் கொண்டு வீழ்த்தினான் திருக்குமரன்...
சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் பகை முடித்தான்!.. - என்பர் ஆன்றோர்...
வெற்றி வேல்!.. வீர வேல்!.. -
என்பது மெய்த் தமிழருடைய வீரமுழக்கம்...
நம்மைச் சூழ்ந்திருக்கும் மாயைகளை
முருகனின் வேல் கொண்டு - அவனது பேர் கொண்டு வீழ்த்துவோம்...
அது அவ்வளவு எளிதாக ஆகாது என்பதால்
சூர சங்காரம் செய்திட்ட சுப்ரமண்யப் பெருமானைச் சரணடைந்து
எம்முள் ஞானம் எனும் பேரொளி பெருகிட அருள்வாய் முருகா!..
என்று வேண்டிக் கொள்வோம்...
இன்றைய பதிவில்
திருக்கோயில்கள் பலவற்றிலும் நிகழ்ந்த
கந்த சஷ்டித் திருவிழாவின் சில காட்சிகள்...
நிகழ்வுகளை வலைப்படுத்திய
சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றி..

![]() |
| திருப்பரங்குன்றம் |
![]() |
| திருப்பரங்குன்றம் |
![]() |
| திருப்பரங்குன்றம் |
![]() |
| சுவாமிமலை |
![]() |
| சுவாமிமலை |
நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசரிரு
தாளும் சிலம்புஞ் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே...
-: கந்தரலங்காரம் :-
![]() |
| குமரகோட்டம் - காஞ்சி |
![]() |
| மஞ்சக்கொல்லை - நாகை |
![]() |
| குமார வயலூர் |
![]() |
| குமார வயலூர் |
ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை அகிலம்உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந்துழாய் மயிலேறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியுங் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே..
-: கந்தரலங்காரம் :-
![]() |
| ஸ்ரீ சிங்கார வேலவன் சிக்கல் |
![]() |
| சிக்கல் |
![]() |
| சிக்கல் |
![]() |
| சிக்கல் திருத்தேர் |
சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவனின் சந்நிதியில் தீப ஆராதனை...
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரங் கண் படைத்திலனே அந்த நான்முகனே..
-: கந்தரலங்காரம் :-
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு அரோஹரா!...
ஃஃஃ