நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 21
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
கதிர்காமம்
தானதன தானத் ... தனதான
மாதர்வச மாயுற் ... றுழல்வாரும்
மாதவமெ ணாமற் ... றிரிவாரும்
தீதகல வோதிப் ... பணியாரும்
தீநரக மீதிற் .. றிகழ்வாரே
நாதவொளி யேநற் ... குணசீலா
நாரியிரு வோரைப் ... புணர்வேலா
சோதிசிவ ஞானக் ... குமரேசா
தோமில் கதிர்காமப் ... பெருமாளே...
-: அருணகிரிநாதர்:-
பெண்களின் வசப்பட்டு
உழல்பவர்களும், சிறந்த தவ வழியை
நினைக்காமல் வீணே திரிபவர்களும்,
தீமை விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும்,
கொடிய நரகத்திலே
கிடப்பவர் ஆவார்கள்.
ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே,
நற்குண சீலனே
தேவயானை வள்ளி என இரு
தேவியரை மணந்த வேலவனே
சிவஞான ஜோதியைத்
தந்திடும் குமரேசனே..
குற்றமற்ற கதிர்காமத்தில்
உறைகின்ற பெருமாளே..
முருகா
முருகா
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கண்டி கதிர்காமப் பெருமானைத் தொழுது உய்வோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
திருப்புகழ்பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஓம் கதிர்காமக் கந்தா சரணம்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி