நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 06, 2026

மார்கழி 22

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 22

குறளமுதம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.. 392

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.. 22
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.. 12

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த 
தேவாரம்

திருநாவலூர்

கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.. 7/17/1
**
நன்றி
பன்னிரு திருமுறை
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

7 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்...

      மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்

      நீக்கு
  2. மார்கழி 22 ம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. திருப்பாவை மட்டுமே எல்லா இடங்களிலும் தென்படும்போது திருவெம்பாவையையும் வெளியிடுபவர் நீங்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவெம்பாவையும் நமது பொக்கிஷமே

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம் பாடல்கள் கண்டோம்.

    தில்லைக் கூத்தனை வணங்கி நிற்போம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..