நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 19, 2026

ஆராதனை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 5 
திங்கட்கிழமை


மார்கழி 23 புதன் கிழமை (7/1/26) அன்று திரு ஐயாற்றில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு (பகுள பஞ்சமி) ஆராதனை...

நிகழ்வு நாளின் 
மதியப் பொழுதில் சென்றேன்... 

ஸ்வாமிகளின் அதிஷ்டானத்திற்கு அருகில் காவிரியாள் மெல்ல சலசலத்துக் கொண்டிருந்தாள்..

கடுங்கூட்டம் என்று இல்லை... இருப்பினும் ஆயிரம் பேருக்கு மேல் குழுமியிருந்தனர்..

அடுத்தடுத்து இசைக் கலைஞர்கள் ஸ்வாமிகளுக்கு கீர்த்தனாஞ்சலி செய்து கொண்டிருந்தனர்...

ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் மலரஞ்சலி செய்தேன்...

ஸ்வாமிகளது அதிஷ்டானத்திற்கு சற்று முன்பாக ஸ்ரீ வேங்கட ரமண பாகவதரின் அதிஷ்டானம் உள்ளது.. 

இங்கே தரிசனம் செய்வதற்குத் தோன்றவில்லை...

ஆராதனை நிறைவுற்ற மறுநாள் தான் ஸ்ரீ வேங்கட ரமண பாகவதரைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்து கொண்டேன்... 

ஸ்ரீ வேங்கட ரமண பாகவதர் சௌராஷ்டிர சமூகத்தைச் சார்ந்தவர்...

ஸ்வாமிகள் பாடிய கீர்த்தனைகளை அவ்வப்போது எழுதி வைத்தவர் இவர் தான்...

ஸ்ரீ வேங்கட ரமண பாகவதரின் 
அதிஷ்டானத்தில் தரிசனம் செய்யாததற்கு மிகவும் வருந்துகின்றேன்..


சற்று நேரம் இசையரங்கின் நாத வெள்ளத்தில் திளைத்து விட்டு முன்னிரவுப் பொழுதில் இல்லம் திரும்பிய வேளையில் - 

அடுத்த பகுள பஞ்சமி நாளை நினைத்து மனம் ஏங்கியது..


















படங்கள் : தஞ்சையம்பதி

ஸ்ரீ ராம ராம
ஜெய ராம ராம
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..