நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை இரண்டாம் நாள்
மாட்டுப் பொங்கல்
பட்டி எங்கும் பெருகட்டும்
பால் பசுவும் வாழட்டும்..
நிலம் எல்லாம் செழிக்கட்டும்
நெற்கட்டும் நிறையட்டும்..
பவளமணி குவியட்டும்
பால் சோறு பொங்கட்டும்..
மங்கலமாய்த் திசை எட்டும்
மங்கை மனம் வாழட்டும்..
தங்க வளை பேசட்டும்
தர்மங்கள் சூழட்டும்
தன்னுயிராய் மன்னுயிரைத்
தாங்குபவர் வாழட்டும்..
படுபிணியும் கொடுவினையும்
பாதையோடு போகட்டும்..
பாதகமும் பாழ்குணமும்
பாதையின்றித் தொலையட்டும்!..
தமிழமுதம் பொங்கட்டும்
தமிழகமும் வாழட்டும்!..
**
2023 ல்
பதிவிடப் பெற்ற கவிதை
அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
ஓம் ஹரி ஓம்
நம சிவாய
**







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..