நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 14, 2026

மார்கழி 30


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 30
போகிப்பண்டிகை

குறளமுதம்

 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.. 400

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.. 30

ஆண்டாள் திருவடிகளே சரணம்
*
ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச் செய்த 
திருவெம்பாவை


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.. 20

மாணிக்க வாசகர் திருவடிகளே போற்றி

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த 
தேவாரம்

திருக்காளத்தி


செண்டா டும்விடையாய் சிவ
னேயென் செழுஞ்சுடரே
வண்டா ருங்குழலா ளுமை
பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கண
நாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.. 7/26/1

சுந்தரர்  திருவடிகளே போற்றி

நன்றி
பன்னிரு திருமுறை

அனைவருக்கும் 
 நன்றி நன்றி
நெஞ்சார்ந்த நன்றி..

நாளை
திருப்பொங்கல்

அன்பின் நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
நம  சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..