நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 18
குறளமுதம்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.. 391
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.. 21
**
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11
ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த
தேவாரம்
திருவெண்ணெய் நல்லூர்
பித்தாபிறை சூடீபெரு
மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட் துறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.. 7/1/1
*
நன்றி
பன்னிரு திருமுறை
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
மார்கழி 21 ஆம் நாள் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
ஒரு ஒளியைத் தொடர்ந்தோ அல்லது ஜஸ்ட் பார்த்தோ கண்களை மூடினாலே கண்ணுக்குள் சில வினாடிகள் வெளிச்சம் தங்குகிறது. அருள் படைத்த பேராளன் உருவாய்க்கனால் கண்டு மனதில் இருத்துவது வாய்க்கப்பெற்றோர் பாக்கியவான்கள். ஏகாக்கிர சிந்தனை.
பதிலளிநீக்குஇது முயன்றால் சித்திக்கக் கூடியதே...
நீக்குகருவறை தீபாராதனை இதற்கு உதாரணம்...
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
பதிலளிநீக்குபசுமிக நல்லதடி பாப்பா...
இந்தக் காலத்தில் அப்படிப் பாலைப் ஏற்ற தீவனம் இல்லையே... மனிதர்களுக்கும் பகவான் மேல் அப்படி பக்தி இல்லாமல் போனது.
உண்மை தான்...
நீக்குஉன் சக்தியைக் கண்டு பயந்து அல்ல,
பதிலளிநீக்குஅருளைக்கண்டு பயந்துருகி உன்னடி
தொழவந்தோம் கண்ணா..
எல்லையற்ற பேருருவமாய்
அண்டமெங்கும் வியாபித்திருக்கும்
பேரொளியாய் துலங்கும் உன் ஒளியில்
ஒரு துளி என மனதுக்குள் கொடு
பாத்திரங்கள் நிரம்பி வழிய
அரக்கரின் அராஜகம் அடக்கியது போல
எங்கள் மனதில் உள்ள
பாச மாயைகள் அகற்றி மாசுகள் களைய
பால் சொரியும் பசுக்கள் போல
நாங்கள் எங்கள் மனப்
பாத்திரம் நிரம்பி வழிய எமக்குன்
அருளைக் கொடு, கருணையைக் காட்டு என்றும்
உன்னை முழுதும் அறியும்
ஞானத்தைக் கொடு என்றும்
வேண்டுகிறோம், சரணடைகிறோம்.
அருமை
நீக்குவெகு சிறப்பு...
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்