நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 10, 2026

மார்கழி 26



நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 26

குறளமுதம்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.. 396

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.. 26
*

ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச் செய்த 
திருவெம்பாவை


முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.. 16

ஸ்ரீ சுந்தரர்  அருளிச் செய்த 
தேவாரம்

திருகற்குடி

விடையா ருங்கொடியாய்
  வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா
  பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ்
  திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான்
  அடியேனையும் அஞ்சலென்னே.  7/27/1 

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் ஹரி ஓம்
நம  சிவாய
***

4 கருத்துகள்:

  1. மார்கழி 26 ஆம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. திருப்பாவை, பொருளுடன் கீதா அக்கா தளத்தில் படித்து விடுவதால் இங்கு திருவெம்பாவையும், தேவாரமும், பன்னிரு திருமுறையும் படிப்பேன். வார்த்தைகளைப் பிரித்து படிக்க முடிகிறதா என்று பார்ப்பேன். அடுத்த முறையிலிருந்து நீங்களும் ஏன் இவற்றுக்கு பொருளும் சேர்ந்து கொடுக்கக் கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டாள் மனம் வைக்க வேண்டும்...

      சில வருடங்களுக்கு முன் என்னளவில் கருத்து சொல்லி பதிவிட்டிருக்கின்றேன்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..