நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 24, 2023

ஸ்ரீ வைத்ய நாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை 10
செவ்வாய்க்கிழமை.

இன்றைய பதிவில்
ஸ்ரீ வைத்யநாத 
 அஷ்டகம்..

இணையத்தில் இருந்து பெற்ற இதனை - பல நிலைகளில் பொருள் கண்டு பதிவு செய்துள்ளேன்..


ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம்

ஸ்ரீராம சௌமித்ரி ஜடாயு வேத
ஷடாந நாதித்ய குஜார்ச்சிதாய
ஸ்ரீ நீலகண்டாய  தயாமயாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 1

ஸ்ரீ ராம லக்ஷ்மணன்,  ஜடாயு, ஸ்ரீ சுப்ரமணியன், சூரியன், அங்காரகன் ஆகியோரால் வணங்கப்படுபவர். வேதங்களால் போற்றப்படுபவர். நீல கண்டனும்  கருணையின் வடிவமுங் கொண்டு வைத்யர்களின்  தலைவனாகவும் விளங்கும் சிவபெருமானை  வணங்குகிறேன்.. 
 
கங்கா ப்ரவாஹேந்து ஜடா தராய
த்ரிலோசநாய ஸ்மரகால ஹந்த்ரே
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 2

கங்கையுடன் சந்திரனைத் 
தலையில் அணிந்தவராகவும், மூன்று கண்களை உடையவராகவும்  காலனை  அழித்தவராகவும், சகல தேவர்களாலும் வணங்கப்படுபவராகவும் வைத்யர்களின்  தலைவனாகவும் விளங்கும் சிவபெருமானை  வணங்குகிறேன்..

பக்த ப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநே துஷ்டஹராய நித்யம்
ப்ரத்யக்ஷ லீலாய மநுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 3

தனது பக்தர்களிடம் விருப்பம் உடையவரும், திரிபுர அசுரர்களை  அழித்தவரும் பிநாகம் எனும் வில்லை ஏந்தியவரும்  தீயவர்களை  அழிப்பவரும் நாளும்
உலகில் பல திருவிளையாடல்களை நிகழ்த்துபவரும் வைத்யர்களின் தலைவனாகத் திகழ்பவரும் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..


ப்ரபூத வாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாச கர்த்ரே முநிவந்திதாய
ப்ரபாகரேந்த் வக்நி விலோச நாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 4

வாதம், மூட்டுவலி  போன்ற பெரும் நோய்களைக் குணப்படுத்துபவர் , மகா முனிவர்களால் வணங்கப்படுபவர். 
சூரிய, சந்திர, அக்னி மூன்றையும் கண்களாகக் கொண்டிருப்பவர். வைத்யர்களின் தலைவனாகத் திகழ்பவர் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..

வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ
வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி சர்வோன் னத ரோக ஹந்த்ரே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 5

பேசுதற்கு கேட்பதற்கு பார்ப்பதற்கு நடப்பதற்கு ஆசிர்வதிப்பவரும் , தொழுநோய் போன்ற பெரு நோய்களைக் குணப்படுத்துபவரும் 
வைத்யர்களின் தலைவரும் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..

வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீச்வரத்யேய பதாம்பு ஜாய
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்நே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 6

வேதங்களின் மூலம் அறியக் கூடியவர்,  
பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர்.
தாமரைப் பாதங்களை உடையவர். மகா முனிவர்களால் தியானிக்கப்படுபவர். மும்மூர்த்திகளின்
வடிவானவர். ஆயிரம் திருப்பெயர்களை உடையவர். வைத்யர்களின் தலைவர் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..

ஸ்வதீர்த்த ம்ருத் பஸ்ம ப்ருதங்க பாஜாம்
பிசாச துக்கார்தி பயாபஹாய
ஆத்மஸ்வரூபாய சரீர பாஜாம் 
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 7

 கோயிலான உடலில்
ஆத்ம ஸ்வரூபமாக குடிகொண்டிருந்து
பிசாசுகள், துன்மார்க்க துக்கங்கள் இவற்றால் ஏற்படும் பயம் மற்றும் துன்பங்களை நீக்குபவராக
விளங்கும் சிவபெருமானின்,  திருக்கோயில் புனித திருநீற்றையும்,  வேப்ப மரத்தினடியில் உள்ள மண்ணையும் வணங்குவதோடு வைத்யர்களின் தலைவர் ஆகிய சிவபெருமானையும் வணங்குகிறேன்..

ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷ த்வஜாய
ஸ்ரக் கந்த பஸ்மாத்ய பி சோபிதாய
ஸூபுத்ர தாராதி ஸூபாக்ய தாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 8

திருநீறு, நறுமணம் மிக்க மலர்களுடன் திகழும் காளைக் கொடி உடைய ஸ்ரீ நீலகண்டனாகிய வைத்யநாதர் நல்ல மனைவி, சந்ததி மற்றும் பிற பாக்கியங்களை அருள்பவர்.
வைத்யர்களின் தலைவர் ஆகிய பெருமானை எனது மனதார வணங்குகின்றேன்..


பாலாம்பிகே ஸ வைத்யே ஸ பவரோக ஹரேதி ச
ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்..

பிறவிப் பிணியைத் தீர்த்தருளும்
ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ வைத்ய நாதப் பெருமானை தினமும் மூன்று வேளையும் துதித்து வணங்குபவர் எல்லா நோய்களில் இருந்தும் நலம் பெறுவர்..

ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம் நிறைவு..
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. பதிவு சற்றே தாமதமான வெளியீடு போல... பின்னர் வந்து முழுமையாக படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வர வேண்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஓம் சிவாய நம..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ வைத்தியநாதப் பெருமானை வணங்கி துதிக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. சித்தனுக்கெல்லாம் சித்தன் அவன்! வைத்தியநாதன் -நாதன் தாள் வாழ்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தியநாதன் -நாதன் தாள் வாழ்க..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..
      நலம் வாழ்க..

      நீக்கு
  5. ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம் பாடல்களும், அதன் அர்த்தமும் அருமை.
    வைத்யநாதன் அனைவரையும் நலமோடு வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வைத்யநாதன் அனைவரையும் நலமோடு வைக்க வேண்டும்.. //

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பெயரில்லா25 ஜனவரி, 2023 19:02

    வைத்திய நாதரை நாமும் துதித்து வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வைத்ய நாதரை துதித்து வணங்குவோம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..