நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 02, 2023

மலர் 18

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 18
   திங்கட்கிழமை.

தமிழமுதம்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.. 102
*
இன்று
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

இந்நன்னாளில்
வாழ்வும் வளமும் 
தந்தருள வேணும் என
வைகுண்ட வாசனை
வேண்டிக் கொள்வோம்.


திவ்யதேச தரிசனம்
திருக்கண்ணங்குடி


 ஸ்ரீ லோகநாதப் பெருமாள்
ஸ்ரீ லோகநாயகி
ஸ்ரீ அரவிந்தவல்லி
 
வகுளம்
 ராவண புஷ்கரிணி

நின்ற திருக்கோலம் 
கிழக்கே திருமுக மண்டலம்.
உத்பல விமானம்.

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
10 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 18 


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..491
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய்  
மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழுலகும் ஈரடியாக பெருந் 
திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அன்னமென் கமலத்து அணிமலர்ப் பீடத்து  
அலைபுனல் இலைக்குடை நீழல்
செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.. 1752
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்

திருத்தலம்
திருக்கோளிலி
(திருக்குவளை)

கோள் வினை நீக்கும் திருத்தலம்

திருக்கோளிலி நாதர்

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
 கோளிலிநாதர்
ஸ்ரீ வண்டமர்பூங்குழலி

தேற்றாமரம்
பிரம்ம தீர்த்தம்

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
*

தேவாரம்

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலிஎம் பெருமானே.1/62/1
-: திருஞானசம்பந்தர் :-
*

திருவாசகம்
திருவெம்பாவை
 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.. 12
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
நேற்று ஞாயிறு காலை தஞ்சை மேலவெளியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் நாதர் தியான ஆலயத்தில் தரிசனம்.. அங்கு படங்கள் எடுக்க அனுமதி இல்லை

அடுத்து 
ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம்.. அங்கே இசை நிகழ்ச்சிகளுடன் சிறப்பு  ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அனைவருக்கும் சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன.. 

நிகழ்வின் சில காட்சிகள் இன்றைய பதிவில்!.. 






ஸ்ரீ பிருந்தாவனம்











அருகில் வடவாறு

ஸ்வாமிகள் நீராடிய படித்துறை




ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ​தமிழமுதம். மேலும் படங்களும் நிகழ்வுகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. மார்கழி தரிசனம் அருமையாக இருக்கிறது.
    திருக்கண்ணங்குடி, திருக்குவளை கோவில் தரிசனம் கிடைத்தது.
    மற்றும் ராகவேந்திரர் பிருந்தவன சிறப்பு ஆரதனை படங்கள் செய்திகள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. இன்றைய மலரின் விவரித்தலும், ராகவேந்திரர் பிருந்தாவன ஆராதனை படங்களும் நிகழ்வும் சிறப்பு....

    இன்றைய திருப்பாவை - பாடலின் ராகம் எனக்கு மிகவும் பிடித்த ராகம், சாவேரி....அழுத்தமான கனமான ராகம்...இந்த ராகம் கேட்க நேர்ந்தால் உடனே நினைவுக்கு வரும் பாடல் முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம் பாடல்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. படங்களின் தரிசனம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. சிறப்பான வைகுண்ட ஏகாதசி நாளில் திவ்விய தரிசனம்
    கண்டு வாங்கினோம். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் தரிசனமும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..