நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

யாவர்க்குமாம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...
***

இன்றைய பதிவில்
நவக்ரஹ காயத்ரிகளும்
ஸ்லோகங்களும்...

ஸ்ரீ ஷண்முகமூர்த்தி - விராலிமலை 
நாளென் செயும் வினைதான் என்செயும் எனைநாடி வந்த
கோளென் செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. (38)
-: கந்தரலங்காரம் :-

அருணகிரிப்பெருமானின் திருவாக்கு அதுவாயினும்
நம்முடைய முந்தைய பாவக் கணக்குகளைப் பரிபாலிப்பவர்கள்
நவக்ரக அதிபதிகளே!...

நம்முடைய முந்தைய கர்மாவினால்
நாம் இப்போது அனுபவிக்கின்ற
இன்ப துன்பங்கள் அத்தனையையும் கணக்கிட்டு
வழங்குகின்ற பொறுப்பு நவக்ரஹ அதிபதிகளிடமே
வழங்கப்பட்டுள்ளது..

பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!..
என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு..

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!..
என்று உருகுகின்றாள் கோதை...

சைவ வைணவ சம்பிரதாயங்களின்படி
ஈசன் எம்பெருமானும் ஸ்ரீஹரி பரந்தாமனுமே
மிக உயர்ந்தவர்கள்...

மயிலேறும் ஐயன் காலுக்கு அணிகலன்
வானோர் முடித் தலை!..
என்று போற்றுபவர் அருணகிரிநாதர்...

வானோரும் அவர்களோடு கூடிய ஏனோரும்
தம்முடைய தலைகளில் தாங்கிக் கொள்வது
முருகப்பெருமானுடைய திருவடித் தாமரைகளையே!..
என்பது அவருடைய திருவாக்கு...

எமது அன்பர்களுக்கு இடையூறு விளைக்காமல் 
நலமே செய்வாயாக!.. - என்று ஆணை பிறப்பித்து
அங்காரகனை தனது பொறுப்பில் வைத்துக் கொள்கிறான்
அறுமுகச் செவ்வேள்...

செவ்வாய் எனப்படும் அங்காரகன் நமக்கு நல்லது செய்ய
வேண்டுமெனில் அவனது கையில் இருக்கும் நமது பாவக் கணக்கு
நேர் ஆகவேண்டும்..
அப்போது தான் தடையில்லாச் சான்றிதழ்
அவனிடமிருந்து கிடைக்கும்...

முந்தைய பிறப்பில்
அடுத்தவனது வீட்டை வயலை வரப்பை 
ஆக்ரமித்துக் கொண்டதும்
குருதி கொப்பளிக்கக் கோபங் கொண்டு
கோடாலியால் அவனது மண்டையைப் பிளந்ததும்
ஆகிய பாவங்கள் எல்லாம் அங்காரகனது
கணக்கு ஏட்டில் இடம் பெற்றிருக்கும்...

இது நேர் செய்யப்பட வேண்டும்...
எப்படி?...

யாராவது ஏழையொருவனின் குடிலுக்கு 
நாலு தென்னங்கீற்று வாங்கித் தருவதும்

மழைக்கு வீட்டு வாசலில் ஒதுங்கும்
ஏழையை விரட்டியடிக்காமல்
முன் வாசலில் இருந்து கொள்!..
என்று இடம் தருவதும்

கண்ணில் பட்டவர்களை எல்லாம்
குதறி எடுக்காமல்
காயம் பட்ட இதயங்களுக்கு
களிம்பு தருவது போல
கனிவுடன் பேசுவதும்..
அங்காரகனை அமைதிப்படுத்துவன...

ஏழைப் பிள்ளைகளுக்கு
புத்தகங்களைக் கொடுப்பதனாலும்
அது இயலாதெனின் - குறைந்த பட்சம்
எழுது பொருட்கள் வழங்குவதனாலும்
 புதன் சந்தோஷமடைகின்றான்...

பிறருக்கு நல்லுரையாக இன்மொழி பேசி 
நல்வழிப்படுத்துவோமாகில்
குருவாகிய பிரஹஸ்பதியின்
நல்லருள் கிடைக்கின்றது...

கூடிக் களிக்கும் தம்பதியரிடையே 
குறுக்கே புகுந்து கெடுத்த பாவம் எல்லாம் சுக்ரனின்
கைக்கு வந்து விடுகின்றது....

அது நேர் செய்யப்பட வில்லையாயின்
பூரிக் கட்டையில் தொடங்கி
அம்மிக் குழவியில் வந்து முடியலாம்!...

சென்ற பிறவியில்
பிடித்த தராசும் அளந்த படியும்
சரியில்லை எனில்
இப்பிறவியில் அதை நேர் செய்பவன்
சனைச்சரன்...

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.. 
என்பது ஐயன் வள்ளுவப்பெருமானின் திருவாக்கு.


கருங்கல்லை விழுங்கி விட்டு
கஷாயத்தைக் குடிக்கலாமா!..

இந்தக் கணக்குகள் எல்லாம்  
ஸ்லோக பாராயணங்களாலும் 
ஜோதிட பரிகாரங்களாலும் சரியாகி விடுமா?..

என்ற கேள்விகள் வழக்கம் போல
நமக்கு முன்பாக!...

ஆகாது!.. என்பதே உண்மை..
என்றாலும்,

இப்படியான காயத்ரிகளும் ஸ்லோகங்களும்
நம் மனதை ஒழுங்கு செய்வன...

குடையைப் பிடித்துக் கொண்டு
மழையைக் கடப்பது போல!..

போனது போகட்டும் இனியாகிலும்
நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே!..
என்பது தான் விடை...

நவக்ரஹ நாயகர்களிடம் இருந்து
தடையில்லாச் சான்றிதழை 
நாம் பெற்றே ஆகவேண்டும்...

அதற்கு என்ன செய்ய வேண்டும்?..

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!..
-: திருமூலர் :-

பிறருடன் இனிமையாகப் பேசுவது..
எளியவர்க்கு இயன்ற வரையில் அன்னமளிப்பது..
பசு முதலான எளிய உயிர்கட்கு உண்ணக் கொடுப்பது...

இவற்றைச் செய்து விட்டாலே
இறைவனுக்கான பச்சிலை நம் கைகளுக்கு வந்து சேரும்...

தேடிப் போன மூலிகை
தெருவில் கிடைத்த மாதிரி.. 
என்றொரு சொல்வழக்கு இருக்கிறதே
அது இது தான்!.....

பச்சிலை - இன்னல் எல்லாம் தீர்த்து
இன்பத்தைச் சேர்க்கும்..
இறைவனிடத்தும் சேர்க்கும்!..
***
ஸ்ரீ சிவசூர்யப்பெருமான் - சூரியனார்கோயில்..
காயத்ரி 
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
த்ந்நோ சூர்ய ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
ஓம் ஜபாகுஷும சங்காசம் காச்யபேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

ஸ்ரீ சந்திரன் 
காயத்ரி 
ஓம் பத்ம த்வஜாய விதமஹே
ஹேம ரூபாய தீமஹி
த்ந்நோ சந்த்ர ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
ஓம் ததி ஷங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ சம்பவம்
நமாமி சசினம் சோமம் சம்போர் மகுட பூஷணம்

ஸ்ரீ அங்காரகன் 
காயத்ரி  
ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
ஓம் தரணி கர்ப்ப சம்பூதம் வித்யுத் காந்தி சமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்

ஸ்ரீ புதன் 
காயத்ரி  
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
ஓம் பிரியங்கு கலிகா ச்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம்
சௌம்யம் சௌம்ய குணோ பேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் 

ஸ்ரீ ப்ரஹஸ்பதி 
காயத்ரி 
ஓம் வ்ருஷ்ப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
ஓம் தேவா நாம் ச ரிஷீனாம் ச குரும் காஞ்சன சந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ரஹஸ்பதிம்

ஸ்ரீ சுக்ரன் 
காயத்ரி 
ஓம்அஸ்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
ஓம் ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானம் பரமம் குரும்
சர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்

ஸ்ரீ சனைச்சரன் 
காயத்ரி 
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
த்ந்நோ சனி ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
நீலாஞ்சன சமாபாசம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

ஸ்ரீ ராகு 
காயத்ரி 
ஓம் நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
த்ந்நோ ராஹு ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
அர்த்த காயம் மஹா வீர்யம் சந்த் ராதித்ய விமர்த்தனம்
ஸிம்ஹிகா கர்ப சம்பூதம் தம் ராஹூம் ப்ரணமாம்யஹம்

ஸ்ரீ கேது 
காயத்ரி 
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்

ஸ்லோகம் 
பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்



நவக்ரஹ சாந்தி ஸ்லோகம் 
ஓம் ஆதித்யாய சோமாய மங்களாய புதாய ச
குரு சுக்ர சனைச்சராய ராகவே கேதவே நம:
*** 
அம்மையே... அப்பா!..  ஒப்பிலா மணியே!.. 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே...
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. மிக அருமையான பதிவு. எனக்கும் இதில் ஒரு பாடம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. அன்பின் ஜி...

    வாழ்க வையகம்...
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      காலியாக இருந்த தங்களது குறிப்பை நீக்கினேன்.. அப்போது தாங்கள் எழுதிய கருத்தும் நீங்கி விட்டது...

      பிழையெனக் கொள்ள வேண்டாம்...

      நீக்கு
  3. கர்மா, வீடுபேறு, இன்னும் பிற, குறள்களில் இல்லை ஐயா... நன்றி...

    மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      கர்மா வீடுபேறு - இவை குறளில் இருப்பதாக நான் இந்தப் பதிவில் சொல்ல வில்லையே...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. பதிவு மிக அருமை.
    பாடல்களை படித்து தரிசனம் செய்து கொண்டேன்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

      நீக்கு
  5. அருமையான பதிவு. என்னுடைய ராசிப்படியும் செவ்வாயின் ஆதிக்கமே! முருகனையே சரண் என அடைய வேண்டும். எந்நாளும் சஷ்டி கவசம் ஓத வேண்டும். அவன் அருளாலே அனைத்தும் சரியாகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      அவனருளால் அனைத்தும் நலமாக வேண்டுவோம்..

      நீக்கு
  6. எல்லா விளக்கங்களும் மிக அழகாய்ச் சொல்லி இருப்பதோடு நவகிரஹ காயத்ரியும், கோளறு பதிகமும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> எல்லா விளக்கங்களும் மிக அழகாய்ச் சொல்லி இருப்பதோடு..<<<

      ஏதோ என்மனதுக்குத் தெரிந்தவற்றைச் சொன்னேன்...

      தங்களன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  7. காலத்துக்கேற்ற பதிவு. இறைவழிபாடும் நவக்கோள்களின் வழிபாடும் நிச்சயம் இன்னல்களிடமிருந்து நம்மைக் காக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      இறை வழிபாடும் நம்பிக்கையும் நம்மை நிச்சயம் காக்கும்....

      நன்றி ஐயா....

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..