நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 28, 2020

தேடி உன்னை..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... 
*** 
இன்றைய பதிவில்
மகாகவியின்
திருப்பாடல்...


தேடி உன்னைச் சரணடைந்தேன் தேசமுத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய்... கேட்ட வரந் தருவாய்..

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்
கோடிநலஞ் செய்திடுவாய் குறைகளெல்லாந் தீர்ப்பாய்..

எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
ஒப்பியுன தேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்..

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும்..


ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்..

துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்...

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்..


ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ  

19 கருத்துகள்:

 1. அருமையான பாடல் பகிர்வு. அன்னை காக்கட்டும் அனைவரையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   அன்னை அனைவரையும் காத்தருள்வாள்...
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அம்பிகைதான் அனைவரையும் காத்து ரக்ஷிக்க வேண்டும்.அவள் பாதாரவிந்தங்களே துணை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

   அம்பாள் அனைவரையும் காத்தருள்வாள்...
   மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. தலைப்பைப் பார்த்த உடனே பாடல் மனதில் விரிந்தது.

  தேசமுத்து மாரியைச் சரண்டைந்தால் தீராத வியாதி உண்டோ?

  இன்று காலை மனதில் தோன்றியது. அவ்வளவு பேரும் பிரார்த்திக்கிறோமே.. உடனே இறைவன், பிரச்சனையைத் தீர்க்க வேண்டாமா? என பலர் நினைப்பர். அவ்வை எப்போதோ சொல்லிவிட்டுப் போனதை நாம் மறந்ததால்தான் இத்தகைய நினைப்பு நமக்கு வருகிறது.

  அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
  எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
  உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
  பருவத்தால் அன்றிப் பழா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை...

   எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கின்றது..
   ஆனால் அது யாருக்கும் தெரிவதில்லை.. புரிவதில்லை..
   தவிர - புரிய வேண்டியதும் இல்லை..

   உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் பருவத்தில் அன்றிப் பழா..
   ஔவையின் அமுதமொழி இனிது...

   ஆனால் மனுக்குலம் தான் பருவம் வரும் வரைக்கும் பொறுத்திருப்பதில்லையே...

   யோசித்துப் பாருங்கள்... புரியும்!...

   அன்னை அவளல்லால் ஏது கதி!....

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பிணி தொலையும். நம் அன்னை நம்மைக் காப்பாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   பிணி பகை எனும் அனைத்துத் தொல்லைகளில் இருந்தும்
   அம்பிகை காத்தருள்வாள்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. சிறப்பான பாடல் தேர்வு.

  அன்னை அனைவரையும் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   அம்பிகை அனைவரையும் காத்தருள்வாள்...
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...

   எல்லாம் நலமாகவே அமையட்டும்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. புன்னைநல்லூர் மாரியம்மா எங்கள் குறைகள் எல்லாம் தீரும் அம்மா.
  அன்னையின் அருள்வேண்டித்தொழுவோம்.
  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

   அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
   வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..

   நீக்கு
 9. மாரியம்மன் உலகைக் காத்து அருள் நல்கிட வேண்டும்.

  துளசிதரன்

  துரை அண்ணா தலைப்பைப் பார்த்ததுமே ஆஹா பாரதியின் பாடலா இருக்குமோ என்று நினைத்தேன் உள்ளே வந்தால் அதே.

  அருமையான பாடல் பகிர்வு

  நலமே விளைந்திட வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

   மகாகவியின் பாடல்கள் மக்கள் துயர் தீர்க்க வல்லவை...
   அம்பிகையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

   வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..

   நீக்கு