நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 09, 2020

சிவமே சரணம் 10

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பிணியும் பகையும் விலகிட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 63

திருத்தலம் - திரு அண்ணாமலை


இறைவன் - ஸ்ரீ அண்ணாமலையார்
அம்பிகை - ஸ்ரீ உண்ணாமுலையாள்..



தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழ மரம்

ஸ்ரீ அண்ணாமலையார் 
ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணிஅணா மலையுளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவிலேனே.. 1

பண்தனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணிஅணா மலையுளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லிலேனே.. 2

ஸ்ரீ உண்ணாமுலையாள்
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான் மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை யுளாயண்டர் கோவே
மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே.. 3

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் நீறா
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணிஅணா மலையுளானே
என்பொனே உன்னை அல்லால் ஏதுநான் நினைவிலேனே.. 4


பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமரர் ஏத்தும் அணிஅணா மலையுளானே
இறைவனே உன்னை அல்லால் யாதுநான் நினைவிலேனே.. 5

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்து
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டுபண் செய் பாதநான் மறப்பிலேனே.. 6


இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டும் திசையொளி உருவம் ஆனாய்
அரவுமிழ் மணிகொள்சோதி அணிஅணா மலையுளானே
பரவுநின் பாதம் அல்லால் பரம நான் பற்றிலேனே.. 7

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல் அணிஅணா மலையுளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமிலேனே.. 8


பாலு நெய் முதலா மிக்க பசுவில் ஐந்தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம் அணிஅணா மலையுளானே
வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே..9

இரக்கம் ஒன்றியாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க ஒருவிரல் நுதியினாலே
அரக்கனை நெரித்த அண்ணா மலையுளாய் அமரர் ஏறே
சிரத்தினால் வணங்கியேத்தித் திருவடி மறப்பிலேனே.. 10


-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. அண்ணாமலையாரை தரிசித்து பதிகம் படித்தேன். வணங்கிச் சரணடைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      சிவமே சரணம்... சரணம்..
      நன்றி..

      நீக்கு
  3. அண்ணாமலையாருக்கு அரோகரா
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அண்ணாமலைக்கு அரோகரா.... அனைவருக்கும் அவரருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      அனைவரையும் அண்ணாமலையார் காத்து அருளட்டும்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் நம சிவாய நம ஓம்

      நீக்கு
  7. பதிகம் பாடினேன். அண்ணாமலையானை கண்டு தரிசனம் செய்தேன்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..

      நீக்கு
  8. பட்ங்கள் வழி தரிசனம். முதல் வரிகளை அப்படியே பிரார்த்திக்கிறேன்...பதிகம் வாசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மாரியம்மன் 1 எங்கே எனத் தேடினேன். சிவத்தை இப்போத் தான் பார்த்தேன். அருமை. அண்ணாமலையானைத் தரிசிக்கும் பேறு கிட்டியது. ஒரு முறை தான் சென்றோம். ஆனாலும் உண்ணாமுலை அம்மன் கண்ணெதிரே நிற்கிறாள் இன்னமும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..