நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 04, 2020

வருவாய்.. வருவாய்..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
நோயும் பகையும் விலகிட வேண்டும்!... 
***

இன்றைய பதிவில்
மகாகவி இயற்றிய
கண்ணன் பாட்டு..


வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்..

உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா
உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா...

குன்றம் எடுத்தாய்.. கோகுலம் காத்தாய்..
கொடுநோய் இதனில் குவலயம் மீட்பாய்...
இணைவாய் எனதா வியிலே கண்ணா
இதயத் தினிலே அமர்வாய் கண்ணா...
கணைவாய சுரர்தலைகள் சிதறக்
கடையூ ழியிலேபடையோ டெழுவாய்...


எழுவாய் கடல் மீதினிலே எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா
துணையே அமரர் தொழும் வானவனே..

வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்!..
***

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகளின் அருளுரை


வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் வந்தே க்ருஷ்ணம் ஜகத் குரும்.. 

ஸ்ரீ க்ருஷ்ண.. க்ருஷ்ண..
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. சீர்காழி குரலில் வருவாய் வருவாய் கண்ணா பாடல் கேட்டிருக்கிறேன்.

  க்ருஷ்ண...க்ருஷ்ண... க்ருஷ்ண..க்ருஷ்ண...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்புன் ஐயா...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

   தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்கவும்...

   நலமே விளைய வேண்டிக் கொள்கிறேன்..

   நீக்கு
 3. நோயும் பகையும் விலகிட வேண்டும்
  வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   வாழ்க வையகம்...

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. இன்று பேரன் காலையில் குன்றம் ஏந்தி குளிர் மழைக் காத்தவனை காட்டினான். அவன் பார்க்கும் ""கிருஷ்ணா கிருஷ்ணா "சிறுவர் கார்டூன் கதையில் காட்டினான்.
  இங்கு உங்கள் பதிவிலும் அவர் இடம் பெற்று இருக்கிறார். பார்த்து கண் குளிர தரிசனம் செய்தேன்.

  உலக மக்களை காக்க வேண்டும்.
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   எல்லாரையும் இறைவன் காத்தருள வேண்டும்....

   வாழ்க வையகம்...

   நீக்கு
 6. நலமே விளையட்டும். இந்தப் பேரிடரிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பாற்றட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
   எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காக்கட்டும்...

   நீக்கு