நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 23, 2020

வருவாய் முருகா..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவினில்
மகாகவி இயற்றிய
முருகன் திருப்பாடல்


முருகா முருகா முருகா

வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்..

அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடியா மறையின் முடிவே அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே!..


சுருதிப் பொருளே வருக
துணிவே கனலே வருக..
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்..

அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய் சரணம் சரணம்
குமரா பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே சரணம்..


அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய் அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்..

குருவே பரமன் மகனே
குகையில் வளருங் கனலே
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே சரணம்.. சரணம்!..

முருகா முருகா முருகா
 ஃஃஃ

16 கருத்துகள்:

 1. முருகா.. அனைவரையும் காத்தருள்வாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. முருகா சரணம் வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்....

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   நான் நலமே... தாங்களும் தங்கள் முடும்பத்தினரும் நலம் தானே..

   நலமே நிறைக... மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. வருவாய் வருவாய் முருகா!
  உலக மக்கள் நைவரையும் காப்பாய் முருகா.
  வேலுண்டு, வினையில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   வேலுண்டு வினையில்லை..
   மயிலுண்டு பயமில்லை...

   வாழ்க நலம்.. மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. இப்போதைய நிலைக்கு இதுதான் ஆகச் சிறந்த மருந்து. இறையருள் உலகைக் காத்திடட்டும்.

  துளசிதரன்

  இன்றைய பதிவைப் பார்த்ததும் இப்பாடல் நினைவுக்கு வர...ஒரே ஒரு சொல்லை மாற்றி

  கா வா வா கந்தா வாவா உலகை காவா வேலவா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

   கந்தா வா வா...

   இனிமை...
   அப்படியே கவிதையாக்குங்களேன்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அந்த முருகன் தான் காப்பாற்றணும் எல்லோரையும். உலக நாடுகள் நிலை கவலையைக் கொடுத்தது எனில் அமெரிக்காவின் நிலை அடிவயிற்றில் கலக்கத்தைக் கொடுக்கிறது. இதெல்லாம் எப்போ முடியுமோ? வேலை எடுத்துக் கொண்டு கந்தன் வந்தால் தான் சரியா இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்காவின் நிலைமை...

   மனம் கலங்குகின்ற்து...

   எங்கள் வீட்டுச் சொந்தம் இருவர் அமெரிக்காவிலும் ஒருவர் கனடாவிலும் இருக்கின்றனர்....

   கந்தன் தான் காத்தருள வேண்டும்....

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றியக்கா...

   நீக்கு
 7. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

  எல்லோருடைய பிரச்சனைகளையும் எம்பெருமான் முருகன் தீர்த்து வைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு