நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 14, 2020

புத்தொளியே வருக

அனைவருக்கும் அன்பின் இனிய 
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..


பூத்து வரும் நலங்களுடன்
புத்தாண்டே வருக என வரவேற்போம்..
***
நாடும் வீடும் நலம் பெறட்டும்
பகையும் பிணியும் விடை பெறட்டும்!..

இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் செய்தருளிய
திருப்புகழ் பாடலொன்றும்
வேல் விருத்தத்தின் பாடலும்...

கணபதி திருப்புகழ்
குமார வயலூரில் அருளப்பெற்றது..

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை இட்டநடை
பட்சியெனும் உக்ரதுர ... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியும் முற்றியப ... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை ... மறவேனே...

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடன் நெய்
எட்பொரிய வற்றுவரை ... இளநீர்வண்

டெச்சில்பய றப்ப வகை பச்சரிசி பிட்டுவெள்
ளரிப்பழமி டிப்பல்வகை ... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெனக் கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தக மருப்புடைய ... பெருமாளே!..

***

வேல் விருத்தம்

அருணகிரிப்பெருமான் செய்தருளிய
வேல் விருத்தம் மயில் விருத்தம் சேவல் விருத்தம்
ஆகிய பனுவல்கள் மிகுந்த சக்தியுடையவை என்பர் ..

அதிலும் குறிப்பாக 
சேவல் விருத்தம் மந்திரக் கட்டுகளை உடையது..
தகுந்த ஆசானிடம் உபதேசம் பெற்று
பாராயணம் செய்தல் வேண்டும் என்பர் ஆன்றோர்...


வெங்காள கண்டர் கைச்சசூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லாதெனக் கருதியே

சங்க்ராம நீசயித்தருள் எனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமுடன் சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக் 
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கௌரிகா மாக்ஷிசைவ

சிங்காரி யாமளை பவநிகார்த் திகைகொற்றி
த்ரயம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே!..(2/10)

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
குகனுண்டு குறைவில்லை மனமே!..

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கார்த்திகை மைந்தா சரணம். சரணம்!..
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. திருப்பகழைப் பாடிப்பாடி வாய் மணக்கட்டும்.. நோய் பறக்கட்டும்.

  ஓம் முருகா...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   தங்களுக்கு நல்வரவு...
   அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன்....

   நீக்கு
 3. சிறப்பான பதிவு. காணொளி வழி திருப்புகழ் பாடலைக் கேட்டு ரசித்தேன்.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தங்களது குடும்பத்தினருக்கும், தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் வாழ்த்துகளும் மகிழ்ச்சி.. நன்றி..

   அன்பின் ந்ல்வாழ்த்துகளுடன்....

   நீக்கு
 5. இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   அன்பின் நல்வாழ்த்துகளுடன்....

   நீக்கு
 6. திருப்புகழ் பாடல் மிகவும் பிடித்த பாடல். டி.எம். எஸ் பாடல் பிடித்த பாடல்.இன்றைய தரிசனம் அருமை.
  உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு வாழ்த்துகள் துரை அண்ணா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்

  உலகம் நலமுடன் வாழ்ந்திட நல்வழி பிறக்கட்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   அன்பின் நல்வாழ்த்துகளுடன்...

   நீக்கு
 8. திருப்புகழ் - படிப்பதற்குள் பல் போய்விட்டது. எத்தகைய மேதமை அதை எழுதினவருக்கு. அருணகிரிநாதரின் பாடலைப் பகிர்ந்தது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை...

   மணிப்ரவாளமாக கார்மேகம் பொல் பொழியப்பட்டதல்லவா திருப்புகழ்...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..