நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 25, 2019

பரிதியப்பர் தரிசனம் 2

சூரியனின் திருப்பெயர்களுள் ஒன்று பரிதி...

சிவபெருமானை வழிபட்டு சூரியன் பழி நீங்கப்பெற்றதால்,
சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் திருப்பெயர்கள். 

பரிதியப்பர் - என்ற பெயரை பருத்தியப்பர் என்றும் சொல்கிறார்கள்... 


அழகின் வடிவாகிய அம்பிகை
மாங்கல்ய பாக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் அருளுகின்றாள்.  

பங்குனி உத்திரத்தன்று நூற்றுக்கணக்கான
பால் குடங்கள் பால் காவடிகள் - என, பெருந்திருவிழா நிகழ்கின்றது..

அன்றைய தினம் வரப்பிரசாத மூர்த்தியாக எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுக்கு, குளிரக் குளிர அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகின்றது..


ஸ்வாமி, அம்பாள், முருகன் என மூவரும் சிறப்புற்று விளங்குவதனால் இத்திருத்தலம் சோமாஸ்கந்த ஷேத்திரம் என்றும் புகழப்படுகின்றது.

தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சூரிய புஷ்கரணியில் நீராடி - பரிதியப்பர், மங்கலநாயகி, முருகப்பெருமான், சூரியன் ஆகியோரை வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் நீங்குகின்றது. 



கோயிலுக்குள் நுழைந்ததுமே பெரிய எழுத்துக்களால்
எழுதிக் கிடக்கின்றது - புகைப்படம் எடுக்காதீர்கள் என்று...

அதைப் பார்த்ததும் நமக்கே ஒரு மாதிரி ஆகி விடுகின்றது...
கோயில் பணியாளர்கள் பல வேலைகளாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கின்றனர்...






கோயில் வளாகத்தில் விளங்கும் கொன்றை  

இருந்தும் -
அப்படி இப்படி எடுத்த படங்கள் இன்றைய பதிவில்!... 

முருகன் சந்நிதி விமானத்தின் பின் அழகு  
ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடி வழிபட்டத் திருத்தலம். 
திருநாவுக்கரசர் திருவூர்த் திருத்தொகையுள் போற்றிப் பாடுகின்றனர்...


பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே!.. (3/104) 
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

23 கருத்துகள்:

  1. குட் மார்னிங்.

    கோவிலின் பழமை படங்களில்- கோவில் சுவர்களில்- தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படம் எடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்தான். ஆனால் நமக்கும் அங்கு சென்றுவந்த நினைவுகள் வேண்டியிருக்கிறது. பார்க்காதவர்களுக்கும் பார்க்கக்கிடைக்க பகிரும் வாய்ப்பும் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. புகைப்படம் எடுக்கும்போது தடுக்காமல் இருந்தால், பிறரும் அதனைப் பார்க்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எப்படியோ எல்லோரும் படங்கள் எடுக்கின்றனர். ஒரு சிலரே (என்னை மாதிரி அசடுகள்) மாட்டிக் கொள்வோம். என்றாலும் நாங்களும் அவசரக் கோலத்தில் எடுத்த படங்கள் உண்டு. :))) அருமையான தகவல்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி. படங்கள் எல்லாமும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா..
      தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படங்களும், பாடலும் அருமை.
    படங்களைப் பார்த்து மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன்.
    நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. புகைப்படங்கள் அழகிய கோணங்களில் எடுத்த விதம் அழகு ஜி

    தரிசித்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நல்ல தரிசனம் ...


    முருகன் சன்னதி கோபுர படம் வெகு அழகு ..

    படம் எடுக்க கூடாது என்று போட்டு இருந்தால் ஏதும் எடுக்க மாட்டேன் ...மனம் நோக ஏதும் கூறி விட்டால் என்ன செய்வது என்ற பயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. படங்கள் அருமை.

    பறையொலி சங்கொலியால் - அப்போ பறை முக்கிய வாத்தியமாக இருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தேவாரத்தில் பல பதிகங்களில் பறையொலி பயின்று வருகின்றது..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் துரை , நீங்கள் படங்கள் எடுத்ததால் தான் எனக்கெல்லாம் கோவில் சிறப்பை
      உணர முடிகிறது.
      எத்தனை பழமையான கோவில். இறை அருள் நிறைகிறது.
      முருகனின் கோபுரம் மிகப் பளிச்சென்று மனதைக் கவர்கிறது.
      நன்றி மா.

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      பழைய பதிவுகளில் சொரிமுத்து ஐயனார், பாபநாசம், நெல்லை, உவரி, திருமலை,திருஐயாறு, திருக்காட்டுப் பள்ளி, சப்த ஸ்தான தலங்கள், குடந்தை, வைத்தீஸ்வரன்கோயில், திருக்கடவூர் - என நிறைய படங்களை வெளியிட்டுள்ளேன்..

      அவற்றைத் தேடி எடுக்க இயலவில்லை எனில்
      அவற்றின் இணைப்புகளைத் தொகுத்துத் தருகிறேன்...

      தங்கள் அன்பும் ஆசியும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. அழகான படங்கள். நீங்கள் எடுத்ததால் நாங்களும் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வெங்கட்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..