நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 06, 2019

அன்பினில் வாழ்க 3

அந்த வாரத்தின் இறுதியில்
அபுதாபி கடற்கரையில் உள்ள Heritage Island 
என்ற இடத்துக்குச் சென்றிருந்தோம்...

மாலை மயங்கி இருள் சூழ்கின்ற நேரம்...
அங்குள்ள விளையாட்டு அரங்குகள் 8:30 மணிக்குத் தான் திறக்கப்படும் என்றார்கள்...

அங்கே கடற்கரையில்
சில படங்களை எடுப்பதற்குள் முற்றாக இருள் சூழ்ந்து விட்டது...

அடுத்த நாள் குவைத்திற்குப் புறப்பட வேண்டும்...

தாத்தா ஊருக்குப் புறப்படுவதில் பேத்திக்கு இஷ்டமில்லை..
இறுக்கமாக இருந்தாள்...

அவள் குழந்தையா.. நான் குழந்தையா.. தெரியவில்லை..

விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன்...

துபாய் விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது மதியம் 2:30..

மாலைப் பொழுதில் குவைத்திற்கு வந்து சேர்ந்தது விமானம்...

மாலை வேளையிலும் சுட்டெரிக்கும் வெயில்.. சூழ்ந்து பறக்கின்ற புழுதி...

ஆயினும்
உள்ளத்தின் தகிப்பை விட
வெயிலின் வெப்பம் குறைவாகத் தான் இருந்தது...

படங்கள் தங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்...


வாழ்க நலம்..
ஃஃஃ

29 கருத்துகள்:

 1. அருமை ஜி
  விடுமுறையை ஆனந்தமாக கழித்ததில் மகிழ்ச்சி படங்கள் அழகிய காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. குட்மார்னிங்.

  மங்கிய மாலையில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. இரவு நெருங்குகிறது என்றதும் பூனையாருக்கு தூக்கம் கண்களை சுழற்றுகிறது. கொடுத்து வைத்த பிறவிகள். எங்கு அமர்ந்தாலும் தூங்கி விடுகின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூனையை நாம் ரசிக்கின்றோம்..

   ஆனால் அது நம்மை ரசித்திருக்குமா?...

   (என்ன ஒரு அறிவு..)

   நீக்கு
  2. ஸ்ரீராம் பூனையார் கண்ணை மூடினால் அம்புட்டுத்தான்...நாம் பக்கத்துல போனாக் கூட பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு (என்னை ஏன் டிஸ்டர்ப் பண்ணுற என்ற தொனியில்!!!!!!) மீண்டும் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்கு நேரெதிர் நம்ம பைரவ/விகள். பழகியவை என்றால் பூஸார் போலத்தான். இல்லை என்றால் எழுந்து வாலாட்டிவிட்டு அல்லது வாலை விரைப்பாகவோ பயந்துகொண்டோ வைத்துக் கொண்டு அலர்ட்டாக இருக்கும்...!!!!கூடவே பயமும் இருக்கும்.

   பூஸார் பயப்படவே மாட்டார்..

   கீதா

   நீக்கு
 4. விளக்கேற்றி வைத்திருக்கும் மிதவுந்தின் _ஹிஹிஹி.... தமிழை கவனிக்கவும்) படமும் அழகு.

  //உள்ளத்தின் தகிப்பைவிட வெயிலின் வெப்பம் குறைவாகத்தான் இருந்தது//

  நன்றாகச் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   அதுதான் தமிழில் கட்டுமரம் தொடங்கி மிதவை, புணை, தெப்பம், படகு, தோணி, மரக்கலம், நாவாய் என்று பல சொற்கள் இருக்கின்றனவே...

   இறைவனுக்கே தோணியப்பன் என்ற பெயர் சூட்டியிருக்கின்றோமே...

   அருவி என்பதனை WATER FALLS என்று சொல்லி அதையும் நீர் வீழ்ச்சி என்று ஆனந்தப்படும் கல்வியாயிற்று..

   ஆனாலும் தங்களது ஆர்வம் வாழ்க...
   மகிழ்ச்சி.. நன்றி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அவள் குழந்தையா, நான் குழந்தையா....நம்மில் பலர் அனுபவித்து வருவதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   என்ன வாழ்க்கை முறை இது.. சமயங்களில் மனம் மிகவும் சோர்ந்து விடுகின்றது..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. படங்கள் நன்றாக இருக்கிறது. அபுதாபியில் இருந்த ஃபீல் வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அனைத்து படங்களும் அழகு.
  பேரனுடன் பேசும் போது யார் குழந்தை என்று தெரிவது இல்லைதான், அப்படி ஆகிவிடுகிறோம்.
  குழந்தை தாத்தா , ஆச்சியுடன் இவ்வளவு நாள் சந்தோஷமாக இருந்தாள், இருவரையும் தேடுவாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   இன்னும் சில மாதங்கள் கழித்து வருவார்கள் என்றிருக்கின்றாள்...
   அன்பின் நன்றி..

   நீக்கு
 8. எத்தனை அழகான படங்கள். துபாயில் இந்தப் படகுகள் ஆப்ரா என்பார்கள்.
  மிதவுந்து .நல்ல பெயர் ஸ்ரீராம்.

  பிரியமானவர்களைப் பிரியும் போது சிரமம் தான் அன்பு துரை.
  அதுவும் தனியாக இருக்கும்போது ஏக்கம் கூடிவிடும்.
  கடற்கரைக் காட்சிகள் வெகு அருமை.
  பூனையாரின் சொகுசை என்ன வென்பது .சுகமாகத் தூங்குகிறார்.
  வியாழன் இரவு ஆரம்பிக்கும் இந்தக் கோலாஹலங்கள் இரவில் நீளும். வெய்யில் இல்லாமல் இரவை அனுபவிக்கத் தெரிந்த மனிதர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   வெயில் குறைந்த பின் கடற்கரைக் காற்றில் சுற்றிக் கொண்டிருப்பதும் இங்கு வழக்கமே...

   அன்பின் நன்றி..

   நீக்கு
 9. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. படங்கள் அத்தனையும் அப்படியே மனதை மயக்குகிறது துரை அண்ணா. செமையா இருக்கு. அதுவும் அந்த இரவில் எடுத்து எல்லாம் விளக்குடன் ஒளிர்தல் செமையா இருக்கு.

  பூஸார் எப்படிப் பயமில்லாமல் இந்த ஒற்றைப் பெஞ்சில் படுத்து உறங்குகிறார். ஹிஹிஹி நான் சொன்னது நம்ம பூஸார். இந்த மாதிரி ஒரு பெஞ்ச் படம் ஒன்றை அவர் தளத்தில் போட்டு அதில் ஏதோ அமானுஷ்யம் எல்லாம் சொல்லிருந்தாரே!! ஹா ஹா ...அதான்

  படங்கள் அனைத்தையும் மிகவும் ரசித்தேன் துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   பூஸாருக்கு என்ன பயம்.. எதற்குப் பயம்...

   கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 12. தங்கள் அன்பின் வருகையும்
  கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 13. படங்கள் அத்தனையும் அழகோ அழகு! அதிலும் அந்தப் பூஸார்! நம்ம பூஸார் தான் தூங்கறார்னு நினைக்கிறேன். அதான் அவர் இந்தப் பதிவைப் பார்க்கலை போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நம்ம பூஸாருக்கு இன்னமும் தெரியாது என்றே நினைக்கிறேன்...
   அதிராவின் தளத்திற்குச் சென்றால் indliy.com என்று ஒரு திரை தடுக்கிறது.. படிக்க முடிவதில்லை.. இதை முன்பே சொல்லியிருக்கிறேன்..

   தங்கள் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 14. நம் அன்புக்குரியவர்களைப் பிரிவதே கஷ்டம் தான். அதிலும் பேரன், பேத்தி போன்றோரைப் பிரிவது எனில்! நமக்கு என்னவோ ஒரு வெறுமை சூழ்ந்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் .. மனம் சோர்ந்து இருக்கிறது...

   அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு