நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 04, 2019

அன்பினில் வாழ்க 2இன்றைய பதிவிலும் சில படங்கள்...

அபுதாபி பேருந்து நிலையம்...
மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றது.. 

பேருந்துகள் குறிக்கப்பட்ட நேரத்தில் வருகின்றன.. செல்கின்றன..

பேருந்துகளில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை...

பயணத்திற்காக பல்வேறு மதிப்புகளில் வழங்கப்படும் மின்னணு அட்டைகளை முன்னதாகவே வாங்கிக் கொள்ள வேண்டும்.. 

குறிக்கப்பட்ட கட்டணம் என்பதால் -
எந்தப் பேருந்திலும் எவ்வளவு தூரமும் பயணிக்கலாம்...

இரண்டு வாசல்களிலும் மின்னணு அட்டையைப் பதிவு செய்து கொள்வதற்கான தொடுகைப் பேழைகள் உள்ளன (Sensor Box/Bio Metric)...

அட்டையின் மதிப்பு தீர்ந்து விட்டால் -
மீண்டும் அதில் பண மதிப்பை ஏற்றிக் கொள்ளலாம்...

பேருந்துகளின் சுத்தம் சொல்லத்தக்கது...


பேருந்து நிலையத்தின் வாசலில் மட்டுமல்லாது
நகரின் பல இடங்களிலும் வேப்ப மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன..
  வழித்தடம் குறித்த விவரங்கள்  நகரில் எல்லா இடங்களிலும் நெருங்கி வரும் பெருநாளை நோக்கி
மின்னலங்காரம் செய்யப்பட்டிருந்தது....

அதீத வெளிச்சத்தில் சில படங்கள் சரியாக அமையவில்லை..
இருப்பினும் ஒரு சில...


களைப்பு மேலிட்டாலும்
காசு போட்டால் தான் குடிநீர்..
இன்று அரபு நாடெங்கும்
ஈகைத்திருநாள் கொண்டாடப்படுகின்றது...

Sheikh Zayed Grand Mosque., AbuDhabi.. (Thanks - Google)
அன்பும் அறநெறியும் எங்கெங்கும்
தழைத்து ஓங்குவதாக..

வாழ்க நலம்..
ஃஃஃ

24 கருத்துகள்:

 1. பேருந்து நிலையம் தொடங்கி ஊரை சுற்றிக்காண்பித்துவிட்டீர்கள். நேர்த்தியான பராமரிப்பு வியக்க வைக்கிறது. தொடுகைப்பேழைகள்..சொல்லை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அழகான படங்கள். வியக்க வைக்கும் சுத்தம். வழித்தடங்களுக்கான விபரங்கள் எல்லாம் அருமை! நம் நாட்டிலும் என்னும் எண்ணம் மனதில் வரத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. ஈகைத்திருநாள் கொண்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நல்வாழ்த்துகள்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இனிய ஈத் முபாரக் ஜி
  அழகிய படங்கள் வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஈகைத்திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்!

  நேற்று எங்களுக்கு இஃப்தார் கிஃப்ட் பாக்ஸ் நாங்கக் இப்போது இருக்கும் வீட்டின் பின் வீட்டைத் தொட்டுக் கொண்டிருக்கும் மசூதியிலிருந்து அன்பர்கள் கொடுத்தார்கள். மென்மையான பேரீச்சம்பழம் பாக்ஸ் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில்.

  படங்கள் எல்லாம் வெகு அழகு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. சுத்தம் சோறு போடும் நு ஒரு வழக்கு மொழி உண்டு இல்லையா அண்ணா அது அங்கு நன்றாகவே பிரதிபலிக்கிறது.

  பேருந்து இங்குள்ள மெட்ரோ போன்று செயல்படுகிறது...பேருந்தே அழகா இருக்கு. எப்படிப் பராமரிக்கிறாங்க...பாட்டா குடை ஆஹா எனக்கு மிகவும் பிடித்த குடை.

  இப்படியான மால்கள் இங்கும் வந்தாச்சே நிறைய...

  அங்கு எல்லாமே பளிச் பளிச் தான். பேருந்து நிலையம் கூட என்ன சுத்தம்!!

  கடைசிப் படம் அட்டகாசம் துரை அண்ணா...மிகவும் ரசித்தேன்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு துப்புரவுப் பணிக்காக பெரும் தொகையை செலவிடுகின்றார்கள்..
   பகலும் இரவுமாக நடந்து கொண்டிருக்கும் பணி அது..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ஈத் பண்டிகை வாழ்த்துகள்.

  என்ன... ஒரு வாரம் லீவா? எஞ்சாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. ஆஹா...என்ன அழகு ..

  நம் ஊரையும் இப்படி காண ஆசை வருதே ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..

   நம்ம ஊர்களையும் இப்படிக் காண்பதற்கு ஆசைதான்..
   மக்களும் அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்கமாட்டார்கள்..

   நீக்கு
 10. படங்கள் மிகவும் கவர்கின்றன. அந்த சுத்தத்தையும், பேருந்துகளின் நேர்த்தியையும் நம் நாட்டில் காணும் நாள் என்று?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

   நம் நாட்டில் இப்படிக் காண்பதற்கு ஒருநாளும் முடியாது...

   நீக்கு
 11. நம்மூரில் நாளைதான் ஈகைத்திருநாள். அங்கு இன்றே கொண்டாடி விட்டார்களா? ஈகைத்திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமாவாசை முடிந்த மறுநாள் பிரதமையிலேயே பண்டிகை..
   அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. அன்பின் துரை செல்வராஜு,
  அபுதாபி மிக சுத்தமாக இருக்கிறது.
  திருனாளை ஒட்டிய வெளிச்சங்கள் ஒரு உத்சாகமே.

  எல்லாமே சீறாக இயங்கும்போது கவலைக்கேது இடம்.
  அரபு அரசர் வாழும் இடம். அரண்மனை பக்கம் போக முடிந்தததா.
  மகன் அங்கே போனபோது உணவகங்களை வெகுவாக மெச்சிக்கொண்டான்.
  அங்கு இந்துக் கோவில் கூட வரப்போவதாகக் கேள்விப்பட்டேனே.

  மால் படங்கள் அருமை. சஹாரா மால் போக முடிந்ததா. அந்தப் பிரம்மாண்டங்களைப்
  பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   அபுதாபியில் கோயில் கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள்..
   இன்னும் முழுமையாக வேலை ஆரம்பிக்கவில்லை...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு