நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 17, 2019

கலை விருந்து 7

தஞ்சை பெரிய கோயிலின் படங்கள்
இன்றைய பதிவிலும் தொடர்கின்றன!..

மேற்குத் திருமாளிகைப் பத்தியில் இருந்து கிழக்கு கோபுரங்கள்  
முந்தைய பதிவுகள்...

மேற்குத் திருமாளிகைப் பத்தியின் மண்டபங்களில்
நாயக்கர் காலத்தில் வரையப்பட்ட சித்திரங்கள்
திருவிளையாடற் புராணத்தைக் காட்டுகின்றன...

ஸ்ரீ மீனாட்சி திரு அவதாரம் 
இந்த சித்திரங்கள் பலவாறாக சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன...

அவற்றின் பழைமை மாறாமல் மீட்டெடுக்கலாம்...

ஆனாலும் தொல்லியல் துறை மௌனம் காக்கின்றது...


ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்  
குண்டோதரனுக்கு அன்னம் பாலிப்பு  
தாகம் அடங்க வைகை நீரை அருந்துதல்
தில்லைத் திருக்கூத்து  
காஞ்சனமாலைக்காக எழுகடலை வரவழைத்தல்  
மாமியார் மெச்சிய மருமகன்  
கடல் வற்றுவதற்கு வேல் எறிந்த லீலை 

கல்யானையை கரும்பு உண்ணச் செய்த லீலை 
கால் மாறி ஆடிய லீலை 
மாய நாகம் வதைத்தது 
துஷ்டனின் அங்கம் வெட்டிய லீலை 
குருவின் மனைவி என்றும் பாராமல் அவள் மீது
மோகம் கொண்ட காமுகனை வதைத்தருளிய காட்சியை மேலே காணலாம்..

துஷ்டனின் தலை வெட்டுவது ஒரு காட்சியாகவும்
வெட்டுப்பட்ட தலை கீழே விழுவது மறுகாட்சியாகவும்
ஒரே சித்திரத்தில் காட்டப்பட்டுள்ளதைக் கண்டு மகிழ்க...

இந்திரனின் பிரம்மஹத்தி தீர்த்த லீலை  

மேலே உள்ள சிற்பத் தொகுப்பு -
ஸ்ரீ சுப்ரமண்யர் கோட்டத்தின் வடபால் உள்ளதாகும்..

கோமுகத்தின் மேல் இருபுறமும்
கயற்கண்ணியின் கரம் பிடிக்க வந்த மீனவனும்
மீனாட்சி அம்பிகையும் அதிகார நந்தியும் காட்டப்பட்டுள்ளனர்...

மீண்டும் அடுத்த பதிவினில் சந்திப்போம்..
படங்கள் அனைத்தும் தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன்...


நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகின் நோக்கி நீ அருள் செய்வாயே!..(4/76)
-: அப்பர் பெருமான் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ  

20 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  தொல்லியல் துறை (பழமைப் பொக்கிஷங்களை) கொல்லியல் துறையாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 2. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். படங்களுக்கு விளக்கங்களும் நன்றாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. அனைத்து படங்களும் மிக அழகு.
  கோபுரத்தை சுற்றி வரும் உள் வழியில் சுவரில் அழகிய சித்திரங்கள் உள்ளன. மிகவும் அழகான சித்திரங்கள் மூலிகை வர்ணத்தால் வரைய பட்டதை (சோழர் காலத்து ) மாராட்டியர் காலத்தில் மாற்றி அமைக்க முயன்று பாதியில் நின்று இருக்கும். சிறப்பு பார்வையாளர்கள் உயர் அதிகாரிகள் சாரின் சகோதரார்கள் மூலம் பார்த்து இருக்கிறோம். இப்போது தடை. கோபுரத்தின் கீழ் பகுதியில் இருந்து மேல் புறத்தை பார்க்க அழகாய் இருக்கும்.

  கலைபொக்கிஷங்கள் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   உட்பிரகாரம் பார்த்தாயிற்றா?... கொடுத்து வைத்தவர் தாங்கள்..
   இப்போது மேலிடப் பார்வையாளர்களுக்குத் தான்...

   நீக்கு
 4. அருமை...ஆனால் ஓவியங்கள் எங்கன்னுதான் தெரியலை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   இந்தச் சித்திரங்கள் எல்லாம் மேற்குத் திருமாளிகைப் பத்தியில் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறேனே...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. ஓவியங்களை குறிப்புகளோடு தொகுத்து தந்தமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. இதனை பார்க்க, ரசிக்க, அனுபவிக்க வாழ்நாள் போதாது.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் ஐயா..

  தாங்கள் சொல்வது போல பார்க்க ரசிக்க அனுபவிக்க வாழ்நாள் போதாது...
  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 8. அழகான ஓவியங்கள். மீட்டு எடுக்கப்பட்டால் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. அருமையான படங்கள், ஓவியங்கள் அதற்கான விளக்கங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன ஐயா/ அண்ணா

  கோயில் சென்றதுண்டு என்றாலும் இதை எல்லாம் பார்த்ததில்லை..

  மிக்க நன்றி.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்/கீதா..

   மறுமுறை செல்லும்போது அவசியம் இந்தச் சித்திரங்களையும் கண்டு மகிழுங்கள்....

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி...

   நீக்கு
 10. பல முறை தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்றிருந்தாலும் ஓவியங்களை பார்த்ததில்லை அது பற்றி தெரிந்திருக்கவும் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   மறுமுறை செல்லும்போது அவசியம் இந்தச் சித்திரங்களையும் கண்டு மகிழுங்கள்....

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி...

   நீக்கு
 11. கண் கவரும் ஓவியங்கள் ...அனைத்தும் மிக சிறப்பு

  பதிலளிநீக்கு
 12. வருக..வருக..
  தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு