நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 13, 2019

கலை விருந்து 6

இதற்கு முந்தைய பதிவினைக் கண்டு
அனைவருமே மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள்...

அதைக் கண்டு மனதில் இன்னும் ஆர்வம் மேலோங்குகின்றது...

மறுமுறை ஊருக்குச் செல்லும் போது
இன்னும் பல படங்களை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது...

அனைத்து நலங்களுக்கும் ஐயனே துணை...

தஞ்சை பெரிய கோயிலில் குரு வாரம் சிறப்பு...
காரணம் இங்கு சித்தர் பெருமானாக கருவூரார் அருளாட்சி செய்வதால்!..


ஏனைய பதிவுகள்...


ஸ்ரீ சொக்கநாதர்
கிழக்கு திருமாளிகைப் பத்தியிலுள்ள ஸ்ரீ சொக்கநாத லிங்கம்...
இந்த இடத்திலே அதிர்வுகளை உணரலாம்..

திருஞானசம்பந்தர் - அப்பர் பெருமான்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் - மாணிக்கவாசகப் பெருந்தகை
 

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி 
ஸ்ரீ வருண மூர்த்தி 
எண் திசை நாயகர்களையும் இங்கு தனித்தனிச் சந்நிதிகளில்
எழுந்தருளச் செய்திருக்கின்றான் - மாமன்னன் ராஜராஜன்..

மேற்குத் திருமாளிகைப் பத்தியில் தனி சந்நிதி ஒன்றில்
மேற்குத் திசைக்குரிய ஸ்ரீ வருணன் திகழ்கின்றான்...

இரண்டாவதாக விளங்கும் ராஜராஜன் திருவாயிலின்
வடபுறத்தில் இந்திரன் சந்நிதி.. தென் புறத்தில் நாகராஜன் சந்நிதி...

தென் கிழக்கு மூலையில் அக்னி தேவன்.. மடப்பள்ளி..
தென் திசையில் யமன்.. கன்னி மூலையில் நிருதி.. மேற்காக வருணன்...
வடமேற்கு மூலையில் வாயு.. தெற்காக குபேரன்..
தென் கிழக்கில் ஈசான மூர்த்தி...

இவற்றுள் நாகராஜன், வருணன்,
சிதைந்த மேனியாக வாயு மற்றும் ஈசானன் - தவிர்த்து
ஏனைய சந்நிதிகளின் திருமேனிகள் பகைவர்களால்
முற்றாக சிதைக்கப்பட்டு விட்டன..

ஸ்ரீ லோகேஸ்வரர்
ஸ்ரீ லோகநாயகி
மேற்கு மற்றும் வடக்குத் திருமாளிகைப் பத்திகளில்
காணப்படும் லிங்கங்களுள்
மேற்குத் திருமாளிகைப் பத்தியின் நடுவில் 
அம்பிகையுடன் கூடிய சிவலிங்கம் விளங்குகின்றது..

இந்த சிவலிங்கம் தான் அப்பர் ஸ்வாமிகளால் பாடப் பெற்ற
தஞ்சைத் தளிக்குளத்தார்!...

இத்தகவல் உபாசனாமூர்த்தியால் அளிக்கப்பட்டதாகும்..

தற்போது ஸ்வாமி - ஸ்ரீ லோகேஸ்வரர் என்றும்
அம்பிகை - ஸ்ரீ லோகநாயகி என்றும் வழங்கப்படுகின்றனர்...
ஸ்ரீ சித்தர் பீடத்திற்குப் பின்னுள்ள மரங்கள்
சித்தர் பீடத்துக்குப் பின்னால் ஒருசேர மூன்று மரங்கள் அமைந்துள்ளன..
வேப்ப மரமும், புங்க மரமும் தான் நினைவிலுள்ளன..
மற்றதன் பெயர் நினைவில் இல்லை..

இங்கே மாலை வேளைகளில் பல்லி தரிசனத்துக்குக்
காத்துக் கிடப்பார்கள்...

கீழாக உள்ள கிளைகளில் நேர்ச்சை முடிச்சு இடுவதும்,
பிள்ளைத் தொட்டில் கட்டுவதும் வழக்கம்...

மேற்குத் திருமாளிகைப் பத்தியில்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கங்களுக்குப்
பின்னால் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள்...
ஸ்ரீ தியாகராஜர் - அல்லியங்கோதை அம்பிகை 
நாயக்க மன்னர் காலத்தில் தீட்டப்பட்ட
இவை மதுரையம்பதியின் தலவரலாற்றைக் காட்டுகின்றன...

சிவ பூஜை செய்யும் ஐராவதம்
இந்திரனின் சிவபூஜை 
 புலித்தோல் ஆடையுடன் எல்லாம் வல்ல சித்தராக எம்பெருமான்
மேலும் சில படங்களுடன்
அடுத்த பதிவினில் சந்திப்போம்...

படங்கள் தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்..


காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே!.. (4/76) 
-: அப்பர் பெருமான் :-

வாழ்க நலம்
ஓம் நம சிவாய நம சிவாய ஓம் 
ஃஃஃ 

26 கருத்துகள்:

 1. Good Morning.

  சிவனாரின் PA வை முதல் படத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. எனது வேண்டுகோளை ஏற்க அவருக்கு இவர் சிபாரிசு செய்யட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஆமாம் ஆமாம். அவர் காதுக்குள் ரகசியமாகச் சொல்லணுமாமே. சொன்னால் அவர் தருணம் பார்த்து சிவனாரிடம் சொல்லுவார்! நீங்க கோயிலுக்குப் போகும் போது பி ஏ வின் காதில் போட்டு வையுங்கள்! அவரைக் கண்டாலே மகிழ்ச்சிதான் ஸ்ரீராம். அழகு இல்லையா?!!

   கீதா

   நீக்கு
  2. நானும் போட்டு வைக்கிறேன் ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 2. அனைத்துப்படங்களும் அருமை. சுகதரிசனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வழக்கம் போல் தரிசனப்படங்கள் அழகு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. படங்கள் எல்லாம் அழகு.
  தஞ்சை கோவிலை நன்றாக தரிசனம் செய்ய முடிகிறது.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. மாலை என்று இல்லை எப்போது போனாலும் நாங்கள் அந்த பல்லியை பார்ப்போம், நீ எத்தனை பார்த்தாய் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வோம். சில நேரம் இரண்டு தெரியும், சில நேரம் மூன்று, சில நேரம் ஒன்று தான் தெரியும் . பார்ப்பதால் என்ன பலன்கள் என்று தெரியாது அதை தேடிபார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்...

   பல்லியைப் பார்ப்பதால் என்ன பலன் என்று தெரியவில்லை...என்றாலும் அதைக் கண்டு பிடிப்பதில் ஒரு சந்தோஷம்..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மிக மகிழ்ச்சி ...

  எத்துனை முறை கண்டாலும் போதும் என்னும் எண்ணமே தோன்றாமல் மீண்டும் மீண்டும் நம்மை அவற்றுள் இழுப்பதே நம் கோவில்களின் தனி சிறப்பு....

  பல பல புதிய செய்திகள் ....மிகவும் நன்றி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் மீண்டும் தம்முள் இழுப்பதே தமிழகத்துக் கோயில்களின் சிறப்பு...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. இந்தப் பல்லி பார்க்கும் விஷயம் முற்றிலும் புதிது. மற்றபடி தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலும் இங்கே அடக்கம் என்பதை இப்போதே அறிந்தேன். இதை நினைக்கையிலேயே அந்தக் கோயிலுக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்த சேந்தன் அமுதனும் அவன் வளர்ப்புத் தாய் வாணி அம்மையும் நினைவில் வருகின்றனர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்னியின் செல்வனை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 8. இத்தனை விரிவாக இந்தக் கோயிலைப் பார்க்கும் பேறு கிட்டவில்லை. நாயக்கர் காலத்து ஓவியங்களைப் பார்த்ததும் மதுரைக் கோயிலில் பொற்றாமரையைச் சுற்றி வரையப்பட்டிருந்த விலை மதிப்பில்லா பொக்கிஷங்களான நாயக்கர் காலத்து ஓவியங்களும் அவை இப்போது முற்றிலும் அழிக்கப்பட்டுப் புதிய பாணியில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் நினைவில் வந்தன! பழமை என்பதைப் போற்றும் எண்ணமே நம்மவர்களுக்குக் கிடையாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைமையைப் போற்றும் எண்ணம் நம்மவர்களுக்குக் கிடையாது தான்..
   கூடவே அவற்றின் மீது சேற்றை வாரி இறைக்கும் பழக்கமும் சேர்ந்து கொண்டது...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 9. மிக மிக அருமையான நந்தி தரிசனம்.
  படங்கள் பொக்கிஷமாக வந்தடைந்தன.
  இவ்வளவு விரிவாகத் தஞ்சைக் கோவிலை யாரும் தந்த நினைவில்லை.
  சித்திரங்களும் ,கருவூரார் சன்னிதியும் கண்டது மிக மகிழ்ச்சி.

  இத்தனை பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னன் ராஜராஜன் வாழ்க.
  அந்தப் பல்லிகள் என்ன விசேஷம் என்று தெரியவில்லை.
  எண் திசை மூர்த்திகளுக்கும் சன்னிதி அமைத்தது அதிசயமாக இருக்கிறது.

  மாபெரும் சரித்திரம் உங்கள் வழியாகப் படங்களாக வந்திருப்பது
  மனத்திற்கு நிம்மதி. என்றும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா..

   இங்கு நான் தந்திருப்பவை கொஞ்சமே...
   இனியும் நல்ல படங்களைத் தரவேண்டும் என ஆர்வம் எழுகின்றது...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும்
   மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 10. இந்தப் படங்கள் எங்க இருக்கு?

  கருவூர்ச்சித்தர் படங்கள் இன்னும் போட்டிருக்கலாம்.

  /அதிர்வுகளை உணரலாம்/- இது லட்சத்தில் ஒரு சிலருக்கே சாத்தியம் (எனக்கு அப்படிப்பட்ட அதிர்வுகள் உணரமுடியாது). உங்களுக்கு உணர முடிவதால் நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேறியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///அதிர்வுகளை உணரலாம்/-

   இது லட்சத்தில் ஒரு சிலருக்கே சாத்தியம்//

   எனக்கும் அப்படித் தோன்றியது. எனக்கும் அதிர்வுகளை உணரமுடியுமா என்று தெரியவில்லை. நான் எங்கோ தெருவில் இருக்கிறேன்!

   நீக்கு
  2. அன்பின் நெல்லை...

   ஸ்ரீ சொக்கநாத லிங்கம் மேற்குத் திருமாளிகையில் உள்ளது...
   அந்தப் பக்கம் செல்பவர்கள் வெகு சிலரே!...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 11. அழகான படங்கள். தஞ்சை பெரிய கோயில் சென்றபோது நான் எடுத்த படங்களை என் பக்கத்தில் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 12. புகைப்படங்கள் அருமை .... சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு படங்களும் நேரில் தரிசிப்பது போல தத்ரூபமாக உள்ளது....அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சிவா..
   தங்களுக்கு நல்வரவு..
   முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 13. அத்தனைப் படங்களும் அருமை ஐயா.

  துளசிதரன்

  அண்ணா முதல் படமே சூப்பராக இருக்கு...அந்த ஓவியங்கள் அனைத்தும் அட்டகாசமான படங்கள் உங்கள் விளக்கங்களும் அறிந்து கொண்டோம்

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..