தஞ்சையை அடுத்துள்ள
ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயிலைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றோம்...
மிகப் பழைமையான கிழக்கு நோக்கிய கோயில்...
நூற்றெட்டு தாமரை மலர்கள் என்றால் இன்னும் சிறப்பு..
இத்திருக்காட்சியினைக் காண்பதற்குத் தவம் செய்திருக்கவேண்டும்..
ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயிலைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றோம்...
மிகப் பழைமையான கிழக்கு நோக்கிய கோயில்...
திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம். வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி.
உள்பிரகாரம் வெளிப் பிரகாரம் என இரண்டு உள்ளன...
மூன்று நிலைகளையுடைய இரண்டாம் ராஜகோபுர வாயிலை அடுத்து -
உள் பிரகாரத்தில் வழக்கமான சந்நிதிகள்...
மூன்று நிலைகளையுடைய இரண்டாம் ராஜகோபுர வாயிலை அடுத்து -
உள் பிரகாரத்தில் வழக்கமான சந்நிதிகள்...
சிவகாமசுந்தரி அம்பிகையுடன் நடராஜ சபை உள்ளது...
அருகில் ஸ்ரீபைரவர், சூரியன், சந்திரன்..
நவக்கிரக மண்டலமும் உண்டு..
துவார விநாயகரையும் துவார பாலகர்களையும் தொழுது உட்சென்றால் கருணையே வடிவான மூலவரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்..
ஸ்ரீ பரிதியப்பருக்கு முன்னால் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ சூர்ய மூர்த்தி...
ஸ்ரீ பரிதியப்பருக்கு முன்னால் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ சூர்ய மூர்த்தி...
ஞாயிற்றுக் கிழமைகளில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து,
அருள்தரும் பரிதியப்பரை வணங்கினால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பர்..
நூற்றெட்டு தாமரை மலர்கள் என்றால் இன்னும் சிறப்பு..
வருடம் தோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் சுயம்பு லிங்கமாகிய பரிதியப்பருக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களுடன் சூரிய பூஜை நிகழும்..
காலை 6.30 மணியளவில் உதித்தெழுகின்ற
சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்கின்றன..
காலை 6.30 மணியளவில் உதித்தெழுகின்ற
சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்கின்றன..
இத்திருக்காட்சியினைக் காண்பதற்குத் தவம் செய்திருக்கவேண்டும்..
வரும் பங்குனியில் வாய்ப்புள்ளோர் அவசியம் தரிசனம் செய்க..
மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறந்து விளங்கும் இத்தலம் -
பிதுர் தோஷத்தினை நீக்கும் பரிகார தலமாகவும்
குறைவற்ற கண்ணொளி வழங்கும் தலமாகவும் சிறந்து விளங்குகிறது.
எந்தத் துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான தொல்லைகளும் தீர்வதற்காக,
இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்...
சென்ற பதிவில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற இருந்த அறிவிப்பைச் சொல்லியிருந்தேன்..
உள்பிரகாரம் சுற்றி வரும் போது சந்நிதி விமானங்களுடன்
ராஜகோபுரமும் சேர்ந்து விளங்கிய காட்சியைத் தவிர வேறெதுவும் எடுக்கவில்லை...
பதிவிலுள்ள படங்கள் அனைத்தும் வெளிப்பிரகாரத்தில் எடுக்கப்பட்டவை...
நண்பர்கள் பலரும் இதைப் பற்றி சொல்லியிருந்தார்கள்...
படம் எடுக்கக்கூடாது - என்றால், கொடிமரத்தைக் கடந்து மூலஸ்தானத்தை எடுக்கக் கூடாது என்பதாகத் தான் அர்த்தம்...
எவருக்கும் அனுமதி இல்லையென்றால்
மேலே காணும் சூரியனின் படம் Fb ல் வந்தது எப்படி?...
கோயில் பணியாளர்கள் எவர் துணையும் இல்லாமல்
சிவலிங்கத்தையும் மூலஸ்தானத்துக்கு முன்னாலும் படம் எடுக்க இயலுமா!...
சில வினாக்களுக்கு விடை காண்பது கடினம்...
இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்...
![]() |
| ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் |
![]() |
| ஸ்ரீ இடும்பன் கோயில் |
திருக்கோயிலுக்குத் தென்புறம் பிடாரியம்மனுக்கும்,
திருக்கோயிலருகில் இடும்பனும் சந்நிதி கொண்டுள்ளனர்...
திருக்கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தம், பின்புறத்தில் சந்திர தீர்த்தம் ..
சென்ற பதிவில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற இருந்த அறிவிப்பைச் சொல்லியிருந்தேன்..
உள்பிரகாரம் சுற்றி வரும் போது சந்நிதி விமானங்களுடன்
ராஜகோபுரமும் சேர்ந்து விளங்கிய காட்சியைத் தவிர வேறெதுவும் எடுக்கவில்லை...
பதிவிலுள்ள படங்கள் அனைத்தும் வெளிப்பிரகாரத்தில் எடுக்கப்பட்டவை...
நண்பர்கள் பலரும் இதைப் பற்றி சொல்லியிருந்தார்கள்...
படம் எடுக்கக்கூடாது - என்றால், கொடிமரத்தைக் கடந்து மூலஸ்தானத்தை எடுக்கக் கூடாது என்பதாகத் தான் அர்த்தம்...
எவருக்கும் அனுமதி இல்லையென்றால்
மேலே காணும் சூரியனின் படம் Fb ல் வந்தது எப்படி?...
கோயில் பணியாளர்கள் எவர் துணையும் இல்லாமல்
சிவலிங்கத்தையும் மூலஸ்தானத்துக்கு முன்னாலும் படம் எடுக்க இயலுமா!...
சில வினாக்களுக்கு விடை காண்பது கடினம்...
இந்தத் திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள உழூர் கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பரிதியப்பர் கோயில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..
இருந்தாலும் கோயில் வழியாகச் செல்லும் பேருந்துகள்
மணிக்கு ஒருதரம் தான்...
பழைய பேருந்து நிலையத்திலிருந்து
ஒரத்தநாடு செல்லும் நகரப் பேருந்துகளும்
இருந்தாலும் கோயில் வழியாகச் செல்லும் பேருந்துகள்
மணிக்கு ஒருதரம் தான்...
பழைய பேருந்து நிலையத்திலிருந்து
ஒரத்தநாடு செல்லும் நகரப் பேருந்துகளும்
புதிய பேருந்து நிலையத்திலிருந்து
பட்டுக்கோட்டை செல்லும் புறநகர்ப் பேருந்துகளும்
உழூர் வழியாகத் தான் செல்கின்றன...
ஆனாலும் -
உழூரில் இருந்து பரிதியப்பர் கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் அரிது...
ராஜகோபுரத்தின் தென்புற நாசித்தலை
நுணுக்கமான வேலைப்பாடுகள் சுதை சிற்பங்களில் காணப்படுகின்றது...
ஏதோ காரணத்தால் சிதைந்துள்ளது..
திருக்கோயில் திருப்பணியை நோக்கியுள்ளது - நிதர்சனம்...
கூடிய விரைவில் - திருப்பணிகள் தொடங்குவதற்குப்
பிரார்த்தனை செய்து கொள்வோம்...
கூடுதலாக ஒரு செய்தி - இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் உருவான சிறுகதை தான் - மறுபடியும் அம்மா.. (டீச்சர் - கல்பனா)
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண்மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் நீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார்புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதிந் நியமமே.. (3/104)
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ