நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 18, 2018

தினைப் பாயசம்

நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை விடியற்காலையில்
எங்கள் பிளாக்கில் -

இன்னைக்கு வெள்ளிக் கிழமை..
பால் பாயசம் வைக்கலாம்..

- என்று எழுதியிருந்தேன்..


அதற்கு திரு ஸ்ரீராம் அவர்கள் -

தை வெள்ளிகளில் பாஸ் ச.பொ. செய்து தந்தார்..
பால் பாயசம்.. கேட்டுப் பார்க்கிறேன்!..

என்று எழுதியிருந்தார்..

மதியப் பொழுதில் தளத்திற்கு வருகை தந்த
அதிரடி அதிரா அவர்கள்

கர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்..))
ஆர் என்ன சொன்னாலும்
உடனே தனக்குத்தான் என முடிவெடுத்திடுறது:)..
துரை அண்ணன் சொன்னது:).. இங்கு வரும் நமக்கு
பால் பாஆஆஆஆஆஆஅயாசம் செய்து தரலாம் என:)

- என பொங்கியிருந்தார்..

அடுத்து வருகையளித்த 
கீதா சாம்பசிவம் அவர்கள்

இன்னிக்கு வெள்ளிக் கிழமை. பால் பாயசம் வைக்கலாம்!..
- அப்படின்னு துரை சொன்னது எனக்காக்கும்!.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஸ்ரீரம் பாட்டுக்கு அவரை நினைச்சுண்டால் இங்கே அதிரடி வந்து
எல்லோருக்கும் பால் பாயசம் வேணும்னு சொல்லிட்டு இருக்காங்க..

நான் முதல்லே வந்ததுக்குப் பால் பாயசம் வைக்கச் சொல்லி
துரை சொல்லி இருக்கார்...

- என்று பால் பாயசப் புதிரை மிகச் சரியாகக் கணித்திருந்தார்கள்..

பால் பாயசம் வைக்கச் சொல்லி நான் எழுதியது
கீதா சாம்பசிவம் அவர்களுக்குத் தான்!..

இதைக் கடந்து மீண்டும் தளத்திற்கு வருகை தந்த
அதிரடி அதிரா அவர்கள்

கீசாக்கா இது ரொம்ம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊ:))..
உங்களுக்கு பால் பாயசம் ஆகாது:)
இப்போ ஸ்ரீராம் பொஸ் இடம் டொல்லியிருப்பார்:)
எதுக்கும் சேமியாப் பாயாசமாகவே செய்யச் சொல்லுங்கோ:)

- என்று மீண்டும் சலங்கை கட்டியிருந்தார்..

வேடிக்கை அப்படியே போக - இன்று காலையில்,

பால் பாயசம் இன்றைக்கு யார் செய்கிறார்களோ தெரியவில்லை..
- என்று எழுதியிருந்தேன்..

உடனே அதற்கு மறுமொழி வந்தது - ஸ்ரீராம் அவர்களிடமிருந்து..

பால் பாயசமா?.. கஞ்சி கொடுக்கும் ஆளைக் கூடக் காணோம் ஸார்!.. 

அடப் பாவமே.!. - என்றிருந்தது..

அடுத்து வந்த தில்லையகத்து கீதா அவர்கள் -

ஆ!.. கஞ்சியா!.. இதோ கொடுக்க வந்துட்டேன்!..

- என்று காய்ச்சியிருந்தார்..

அதனைத் தொடர்ந்து ஒரே களேபரம்..

கீதா அக்கா மாமாவுக்கு கஞ்சி கொடுத்து விட்டு வருவார்..
இப்போ இன்னும் கஞ்சியே கொடுக்கலை போல.. பாவம் மாமா!..

- என்றும்

கீதா அக்கா வெங்கட் தளத்தில் இட்லி சுட்டுகிட்டு இருக்காங்க!...

என்றும் உளவுத் துறை தகவல்கள் வெளியாகின..

அந்தப் பக்கத்தில் -

காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணி ஆயிடுச்சு..

- என்று கீதா சாம்பசிவம் அவர்கள் விளக்கினாலும் நிலைமை சீராகவில்லை.

உடனடியாக -

காஃபி ஆத்தாம எப்படிக் கடமை ஆத்தறது?.. ஹா..ஹா...ஹா...

- என்று அடுத்த அஸ்திரம்..

படங்களைப் பற்றிய பேச்சை விட
சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலாக இருக்கு!..

- என்று நெல்லை அவர்கள் சொல்லும் அளவுக்கு ஆனது..

சரி.. இனிமே விடக்கூடாது..
பாயசம் செய்து விடவேண்டியது தான்!.. 

- என்று, உடனடியாகக் களத்தில் இறங்கினேன்...

பால் பாயசமா.. தினைப் பாயசமா?.. - கேள்விக்குறி முன்னே நின்றது..

இந்தா.. பிடி தினை!.. - என்றது அசரீரி..

இதற்குப் பின்னும் காத்திருக்க முடியுமா!..

சற்று நேரத்தில் -
கொழுக்கட்டையும் தினைப்பாயசமும் தயாராகின...

இதோ - உங்களுக்காகப் பதிவில்!..


கொழுக்கட்டையில்
அரிசி மாவுடன் சிறிதளவு பயற்றம் மாவும்
Bleach செய்யப்படாத பழுப்பு ஜீனியும் ( இந்தோனேஷியா)...


தினைப் பாயசத்தில் 2:1:2:1  என்ற விகிதத்தில்
ஜவ்வரிசியும் தினையும் வெல்லமும் பாலும்..

அத்துடன் வழக்கம் போல
சிறிதளவு உலர் திராட்சையும் முந்திரியும் நெய்யும்!..

எளிமையான உணவு..
என்றும் மகிழட்டும் மனது..

வாழ்க வளமுடன்.. 
***  

25 கருத்துகள்:

 1. இந்த வகைக் கொழுக்கட்டைகள் அலுவலகம் மூலம் பெறுவேன்! அதாவது அலுவலக நண்பர்கள் மூலம். அது ஒரு ருசி.

  பதிலளிநீக்கு
 2. தினைப் பாயாசம் சாப்பிட்டேன் திவ்யமாய் இருந்தது ஜி

  பதிலளிநீக்கு
 3. அங்கேயிருந்து சுவையான உரையாடல்களை இங்கு கடத்தியது(ம்) சுவாரஸ்யம். ஒரு வார்த்தை ஒவ்வொருவர் மனதிலும் எப்படி வெவ்வேறு சிந்தனைகளை விதைக்கிறது பாருங்கள்!

  பதிலளிநீக்கு
 4. எனக்கு இன்று பாயசம் கிடைக்கவில்லை! இன்று வெங்காய சாம்பாரும் பீன்ஸ் உசிலியும் உசிலி எனக்குப் பிடிக்காது என்று பாஸ் எனக்கு வடாம் வருத்துத் தந்தார்கள். அதுவும் வேறு விஷயம். சாம்பார் மட்டும் நன்றாயிருந்ததால் எல்லை மீறி மூன்று முறை சாசா சாப்பிட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்காய சாம்பாரும், உசிலியும் சேருமா? சாப்பாட்டு நேரத்தில் வெங்காய சாம்பாரை நினைவுபடுத்திவிட்டீர்கள். ம்ம்ம்.

   நீக்கு
  2. சாதாரணமா உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வாங்க... இன்று மருத்துவ காரணங்களால் ( !!! ) உசிலி. உசிலியிலும் அதே மருத்துவ காரணங்கள் இருக்கே என்ற என் ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டதற்குக் காரணம் நேற்று வந்து இன்று கிளம்பும் ஒரு உறவினப் பையனுக்கு பிடித்த ஐட்டம் அது என்பதால்!

   நீக்கு
 5. அருமையான தினைப்பாயசம். கொழுக்கட்டையும் அருமை! நானும் வெல்லம் சேர்த்து இப்படி அரிசிமாவில் கொழுக்கட்டை செய்வேன். போணி ஆகாது. நான் மட்டும் சாப்பிடணும்! பூரணக் கொழுக்கட்டை தான் போணி ஆகும்! :)

  பதிலளிநீக்கு
 6. பாயசம் குடிக்க ஆசை. படத்திலிருந்து இழுக்கிறது!

  பதிலளிநீக்கு
 7. அதிரடி, பாயாசப் புதிரை நான் சரியாத் தான் சொல்லி இருக்கேன், வந்து பாருங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  2. கீசாக்கா இப்பகூட உங்களுக்குப் பால் பாயாசம் நஹி:).. தினைப் பாயாசமாமே:)...

   நீக்கு
  3. ஹா... ஹா... ஹா... எங்க சான்ஸ்னு....!

   நீக்கு
 8. தினைப் பாயசம், வெல்லம் இல்லாமல். நன்றாக இருந்ததா?

  கொழுக்கட்டை நன்றாக வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
 9. ஆஹா இங்கே தினைப்பாயசமும் கொழுக்கட்டையும் கிடைக்கிறது. நான் என்னடாவென்றால் இட்லியைப் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டேன்!

  தினையில் பாயசம் - கேட்கவே நல்லா இருக்கே... அடுத்த தமிழகத்தில் வீட்டில் செய்ய சொல்ல வேண்டியது தான்.

  இப்பதான் காஃபியும் கொஞ்சம் நொறுக்ஸ்-உம் ஆச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாயிறு கொஞ்சம் நெட் வந்ததும் நானும் எபியில் ஸ்ரீராம் கீ சா அக்கா இட்லி சுடறாங்க என்றதும் மதியம் ஓடி வந்து நானும் சொல்லிக் கொண்டிருட்நிருக்கேன் அப்ப இங்க துரை அண்ணாவின் பதிவு...உங்கள் தளமும் துரை அண்ணா தளம் இன்னும் சில தளங்கள் திறக்கவே அடம் பிடிக்கும்.....சமீபத்தில் எபி தளமும்...

   இன்று துரை அண்ணா தளம் செக் பண்ணிய போது திறந்தே விட்டது!!!!! பார்த்தால் ஆஹா உணவுகள்!!!

   கீதா

   நீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. ஆஹா பாயாசம் படுத்தியிருக்கும் பாடு:) துரை அண்ணனைப் பாயாசம் குடிக்க வச்சிட்டுதே:). நான் வெள்ளி இரவே சொன்னபடி பாயாசம் செய்தேனே ஆனா சேமியாவில் அல்ல.. சவ்வரிசியில்தான்.

  பதிலளிநீக்கு
 12. தினைப் பாயாசம் புதுசா இருக்கு ஒருதடவை செய்து பார்த்திடலாம். நாம் சாமை இல் இப்படி பிடிக் கொழுக்கட்டை செய்திருக்கிறேன்.. சூப்பராகத்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா தினைப்பாயாசம் நன்றாக இருக்கும்....செய்து பாருங்கள்...தினை சாமை, வரகு குதிரைவாலி இப்படியான சிறு தானியத்தில் கொழுக்கட்டை, பாயாஸம் எல்லாமே நன்றாக இருக்கும்...சீனி போட்டு செஞ்சாலும் நன்றாக இருக்கும் என்றாலும் வெல்லம் போட்டு அல்லது நாட்டுச்சர்க்கரை, போட்டுச் செய்தால் நன்றாகவே இருக்கும்...

   கீதா

   நீக்கு
 13. கொழுக்கட்டை பிடித்து
  பாயாசம் செய்து
  ஆஹா அசத்தல் ஐயா...

  பதிலளிநீக்கு
 14. இப்போதுதான் தினைப்பாயாசம் பற்றி அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 15. மணக்கும் உணவு வகைகள்.....

  பதிலளிநீக்கு
 16. கொழுக்கட்டை அழகாய் பிடித்து இருக்கிறீர்கள் . தினைப்பாயாசம் அருமை.  பதிலளிநீக்கு
 17. ஆ!! ஆ!! துரை அண்ணா இவ்வளவு நடந்திருக்கு...எனக்குப் பாயாஸம் கொழுக்கட்டை கிடைக்கலை!!! ஒரு வார்த்தை அங்கிட்டு சொல்லிருந்தா நான் எப்படியாவது அட்லீஸ்ட் மொபைல் வழி வந்து படத்தைப் பார்த்து ஜொள்ளு விட்டாவது போயிருப்பேன்....காலையில் அப்புறம் அர்த்த ராத்திரியில் தான் நம்ம இணையம் வேலை செய்யும்...ஞாயிறு வந்திருக்கு பாருங்கோ...

  எனக்கும் சூடாக வேண்டும் இனி!!! ஹா ஹா ஹா...

  இந்த இரண்டுமே வீட்டில் செய்வதுண்டு...துரை அண்ணா என்றாலும் துரை அண்ணா செய்து இங்கு கொடுத்திருப்பது ப்ரஸாதம் போன்றல்லவோ சுவை!!!

  ரசித்தேன்...அங்கிருந்து வந்த உரையாடல்களையும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 18. துரை அண்ணா இன்று உங்கள் தளம் டக்கு டக்கென்று திறந்துவிடுகிறது!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு