நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 12, 2018

ஆனந்தக் குளியல்

ஆராரைப் பத்தியெல்லாமோ எழுதறாங்க...
அதுவுங் கலர் கலரா போட்டா புடிச்சி எங்க பிளாக்....கில போடுறங்க...

பூனை போட்டாவெல்லாம் வருதுங்க!..

கொஞ்ச நாளைக்கு முன்னால
கறுப்பா இருக்கு..ன்னு காக்காயப் பத்தி பாட்டு போட்டாங்க!...

இப்போ கறுப்பா இருக்கு...ன்னு நம்மாளு எருமையப் பத்தி 
அதுவும் கலர் கலரா சட்டை போட்டுருக்குன்னு ஒரே பூரிப்பு!...

நானுந்தான் கறுப்பா இருக்கேன்!..
என்னைப் பத்தி ஏதும் எழுத மாட்டேங்கறாங்களே!..


ஏ... ஆனை.. என்னா அது புலம்பல்!.. வயத்தெரிச்சலா?...

அதெல்லாம் மனுசக் கூட்டத்துக்குத் தான்...
நாங்க...லாம் வயத்தெரிச்சல்படமாட்டோம் 
நான் வெயிலுக்காக இங்கே வந்து 
குழாய்த் தண்ணியில குளிக்கேன்!...

ஆனைக் கூட்டந்தான் அடிக்கடி குளிக்குமே...
இதுல என்ன பீத்தல் வேண்டிக் கெடக்கு!?...

உமக்குத் தெரிஞ்சது அவ்வள தான் போல!...
அந்தாக்கில ஆப்பிரிக்கா... ஆப்பிரிக்கா.. ந்னு ஒரு தேசத்தில
ஏதோ ஒரு ஊர்ல தண்ணி சுத்தமா வத்திப் போச்சாமே!...

அதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியா நீ!...

நல்ல கதை தான் போங்க...
படம் வரையற ஆளெல்லாம் நம்மோட இருக்கானுங்க.. தெரியுமா!...


ஓஹோ!...

அந்த மாதிரி நம்ம ஊர்ல...யும் தண்ணி வத்திப் போனது..ன்னா
என்னா செய்யிறது..ன்னு ஒரே கவலையா இருக்கு!..

அவன் ஊர்ல முன்ன கழுவ மாட்டான்.. பின்ன கழுவ மாட்டான்...
பேப்பரா...ல தொடச்சிக்குவான்..
கேட்டா அதான் நாகரிகம்...ன்னு சொல்லுவான்..
வால் அறுந்த நரி மாதிரி!...

ம்!...

குளிக்காம பல்லு வெளக்காம இருக்கிறதெல்லாம்
நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வருமா?...

அந்த மாதிரி தண்ணி இல்லாம போச்சு..ன்னா
நாமளும் அவங்கள மாதிரி பேப்பருக்கு மாறிட வேண்டியது தான்!..

சரி... பேப்பருக்கும் பஞ்சம் வந்துடுச்சு... என்னா செய்வீங்க!...

காட்டுமிராண்டிங்க மாதிரி ஆகிட வேண்டியது தான்!...

அதாவது காட்டுமிராண்டியில இருந்து மனுசனா வந்து
திரும்பவும் காட்டுமிரண்டியா ஆகிடலாம்..ங்கிறீங்க!.. அதானே!..

இந்தா.. ஆனை.. இப்போ உனக்கு என்ன தான் பிரச்னை?...

எனக்கு ஒன்னும் பிரச்னையில்லை...
பூமியில தண்ணி எங்கே இருக்கு..ன்னு கண்டு பிடிக்க
எங்களுக்குத் தெரியும்... நாங்க அங்கே போய்டுவோம்..
பாவம்... உங்களுக்குத் தான் அதெல்லாம் தெரியாதே!...

எங்களுக்கும் தெரியும்...

என்னா தெரியும்?..
படிச்சவனுக்கு பாட்டக் கெடுக்கத் தெரியும்...
எழுதுனவனுக்கு ஏட்டைக் கெடுக்கத் தெரியும்...

நாங்க செவ்வா கெரகத்துல இருந்து கொண்டு வருவோம்!..

ஹூம்... கூரை ஏறி கோழியப் புடிக்க முடியலை...
இதுல நீங்க வானத்துல ஏறுவீங்களாக்கும்?......
வைகுண்டம் போவீங்களாக்கும்?.... சும்மா வெட்டிப் பேச்சு!...

இப்படியே மரம் மட்டையைக் காப்பாத்தாம இருந்தா
மழை தண்ணி இல்லாம காஞ்சி கருவாடாகி
நேராவே வைகுண்டத்துக்குப் போய்ச் சேந்துடுவீங்க!...

நீ ரொம்பவே வெவரமான ஆனையா இருக்கியே!...


பாருங்க... யாரோ ஒரு புண்ணியவான்
உங்கள மாதிரி எங்களத் தெருத்தெருவா அலைய விடாம
ஆனைங்களும் சந்தோஷமா இருக்கட்டும்...ன்னு
குழாய்த் தண்ணி போட்டு விட்டிருக்கான்!...

அதான்...
முன்ன கழுவி பின்ன கழுவி
அங்கே கழுவி இங்கே கழுவி
ஒரே ஆனந்தம் தான்!..

கஜகரணம் போடலாம்....ன்னு பார்க்கிறேன் ..
முடியலை...

கஜ கர்ணமா!..
அப்படின்னா...  உன்னோட காது தானே!..

அது சரிதான்.. ஆனாலும் கஜ கரணம்... ன்னா
ஆனை குட்டிக் கரணம் போடறது..ன்னும் சொல்லுவாங்கே!..

என்னது?... நீ குட்டிக் கரணம் போடப் போறியா!...

அதான்... தமிழ் நாட்டுல.. நீங்க போடறீங்களே... அதை விடவா!...

நாங்க எங்கே கஜகர்ணம் போடறோம்...

ஏய்யா?... பஸ் டிக்கெட்டை ஏத்துனீங்கன்னு... கேட்டா
கர்நாடகா...வப் பார்... ஆந்திரா.... வப் பார்....
அங்கே பார்... இங்கே பார்... அப்படி...ங்கறானுங்க...

அவங்கள்ளாம் மழைத் தண்ணியச் சேத்து வெச்சி
நல்லபடியா சாகுபடி செய்யிறாங்க...

ஆனா, நீங்க!?... அட.. நிம்மதியா பேச முடியுதா!..
ஏ... அங்கே என்ன கெக்கெக்கே.. ந்னு சிரிப்பு?...
ஒரே சத்தம்.. சும்மா...ன்னு இருக்க மாட்டீங்களா?..

போங்க எல்லாரும் அந்தப் பக்கம்!..
குளிக்கிறத வேடிக்கை பார்த்துக்கிட்டு!..

ஆனை தான குளிக்குது?...
அனுக்கா...வா குளிக்குது!..

அனுக்கா...வா!...

ம்!?...

அது அனுக்கா இல்லே... அனுஷ்கா!...

ஏதோ.. ஒரு அக்கா!...
ஆனைக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்!..


இந்தா புள்ளே!.. குளிச்சமா முடிச்சமா...ன்னு இல்லாம
அங்கே என்ன வள.. வள..ன்னு பேச்சு!..
சீக்கிரமா கரையேறி வா.. பசிக்குது!....

அந்தா.. எம் மாமன் வந்துட்டாங்க...
நான் கிளம்பறேன்... அப்புறமா பேசுவோம்!...

சரி.. ஆனை... சந்தோஷமா போய்ட்டு வா!...
*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!..
***    

15 கருத்துகள்:

 1. ஆனையைப் பார்த்ததுமே ஓடோடி வந்துட்டேன். நல்லாவே பேசி இருக்கார் ஆனையார்! ஆனையாள்?அல்லது ரெண்டு பேரும்? இந்தக் கால நிகழ்வெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கும் ஆனையார்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி..

   ஆனையாள் தான்.. தந்தம் தான் இல்லையே..

   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. யானையின் உரையாடல் ஸூப்பர் ஜி இந்த யானையின் பூர்வீகம் தேவகோட்டை போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   ஆனைகிட்ட எல்லாம் கேட்டேன்... பூர்வீகம் கேக்க மறந்துட்டேன்...

   பூர்வீகம் - தேவகோட்டை... இருந்தாலும் இருக்கும்!..
   ஏன்னா ரொம்ப வெவரமா இருக்கே!..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. யானைக் குளியல் செமையா இருக்கு துரை அண்ணா...ஹையோ ரொம்பவே ரசித்தேன்....எல்லா விலங்குகளுமே நம்மகுத் தோழர்கள் தானே!!! ஆனை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது!!! சின்னக் குழந்தையும் கைகொட்டிச் சிரித்து மகிழும்...ஆனை ரொம்ப அழ்கா பேசுறார்...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. முதல் காணொளி பார்க்க முடியலையே கொஞ்சம் தான் வந்துச்சு...லோட் ஆகலை....

  ரெண்டாவது மீண்டும் பார்த்து ரசித்தேன் அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. யானை என்றால் குஷி ஆகாதார் யார்? மிகவும் சுவாரஸ்யம். நிஜமாகவே யானை படம் வரையுமா? வியக்க வைக்கிறது. நீரில் யானை போடும் ஆட்டம் வாட்ஸாப்பில் கண்டு களித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. இன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தி. குட்டி யானை ஒன்றை புலி ஒன்று அடித்துக் காயப்படுத்தி கொண்டு விட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த தாய் யானை அது தூங்குகிறது என்று நினைத்து நான்கைந்து நாட்களாய் அதன் அருகாமையை விட்டு நகரவில்லை. அந்தத் தாய் யானைக்குத் துணையாய் நான்கைந்து யானைகள் நிற்கின்றனவாம். இறந்த குட்டி யானையின் உடல் அழுகி நாற்றமெடுக்கிறது. மக்கள், அதிகாரிகள் அருகில் செல்ல முடியவில்லையாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதே போலவேதான் ஒரு குட்டி இறந்து விட்டது ஆனா அதை விடாமல் அது அழுகும் வரை தாய் காவிக்கொண்டே திர்ஞ்சுது பின்பு கடசியில் ஊர் மக்கள் பறிச்சு தாட்டார்கள்... கொடுமைதான் இதுதான் 5 அறிவு என்பதுபோலும்...

   நீக்கு
 7. ஹா ஹா ஹா துரை அண்ணன்... கொமெடியில் கலக்கிட்டீங்க:) அதெப்பூடி சிரிக்காமலேயே சிரிப்புக் காட்ட முடியுது உங்களால:)..

  ஒவ்வொரு லிங்கும் ஓடி ஓடிப் பார்த்தேன்ன்.. பூனையின் எபெக்ட் தான் ஆனைப்பதிவோ?:) ஹா ஹா ஹா .. ஆனையார் பெயிண்ட் பண்ணுவது ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.. குளிப்பது ஹா ஹா ஹா என்ன அழகா முன்னங்கால் பின்னங்கால் எல்லாம் கழுவுது. மனிசர்கூட இவ்ளோ சுத்தமா குளிப்பினமோ தெரியல்ல:)..

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா ஹா அனுக்கா:) ரசிகருக்கு ஓவர் ஷையாகிடிச்சு போல:)) காக்கா போயிட்டாரே:)) ஹா ஹா ஹா...

  வெள்ளையர்களின் இந்தப் பேப்பர்.. நடவடிக்கைகளால்தான் சுவிமிங் பூல் போகவே மனமில்லாமல் போகுது:).. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 9. எனக்கு ரொம்ப பிடிச்சது எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !! ஆமாம் மனுஷங்க இந்த ஜீவன்களை நிந்திக்காம அதுங்க பாட்டில் விட்டாலே அதுங்களுக்கு நலல இருக்கும் .
  மனுஷங்கதான் தானும் அழிஞ்சி இயற்கையையும் அழிச்சி இந்த வாயில்லா ஜீவன்களையும் துன்புறுத்தறாங்க :(
  அந்த தண்ணி குழாய் அமைச்சவர் வாழ்க ..என்னா சந்தோஷமா குளிக்கிறார் கஜன் .

  பதிலளிநீக்கு
 10. அருமையான காணொளிகள்.
  எங்கள் குடியிருப்பில் இப்போதே தண்ணீர் விலைக்கு வாங்கி தருகிறார்கள்.
  போக போக நிலமை எப்படியோ?
  பயமாய் இருக்கிறது.
  பதிவு மிக அருமை.

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமான பதிவு...ரசித்தேன்..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..