நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 14, 2018

ஆனந்த தரிசனம் 2

நேற்றைய பதிவில் சிவராத்திரியின்
நான்கு கால வழிபாடுகளைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன..

ஓரிரண்டு சிவ தலத்தின் மூர்த்திகளை எதிர்பார்த்தேன்..
எப்படி சிவலிங்க தரிசனத்தை விட்டு விட்டீர்கள்?..

- என, அன்பின் நெல்லைத் தமிழன் அவர்கள் கேட்டிருந்தார்கள்...

பல பதிவுகளும் சிவ தலத்தின் மூர்த்திகளுடன் தான் வெளியாகின்றன...

நேற்றைய பதிவினைக் கூட
இன்னும் முழுமையாகத் தொகுப்பதற்கு நேரம் போதுமானதாக இல்லை...

எனவே தான் சிவ தாண்டவ திருக்கோலங்கள் சிலவற்றுடன்
அவசரம் அவசரமாகப் பதிவை வழங்கினேன்...

இதோ - நேற்று நிகழ்ந்த
சிவராத்திரி வைபவத்தின் படங்கள் - தங்களுக்காக!..

கீழுள்ள நான்கு படங்களையும் WhatsApp ல் எனது பிள்ளைகள் அனுப்பியிருந்தார்கள்..

எந்த திருக்கோயில் என்பது தெரியவில்லை...

இத்துடன் நேற்று தஞ்சை மேலராஜவீதி
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் மற்றும்
ஐயன் குளம் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலில்
நிகழ்ந்த சிவராத்திரி வழிபாட்டின் படங்கள் இடம்பெற்றுள்ளன...

கீழ்க்கண்ட படங்களை வழங்கியவர் நண்பர் திரு. ஞானசேகரன், தஞ்சை...

ஸ்ரீ கொங்கணேஸ்வரர்

ஸ்ரீ கொங்கணேஸ்வரர்
ஸ்ரீ ஞானாம்பிகை
ஸ்ரீ அன்னபூரணி


ஸ்ரீ காசிவிஸ்வநாதர்
ஸ்ரீ விசாலாட்சி

மேலும் ஒரு வாரகாலமாக தஞ்சையில்
ஸ்ரீ பச்சைக் காளி ஸ்ரீ பவளக் காளி உற்சவம் நடைபெற்று வருகின்றது..

ஸ்ரீ கோடியம்மன்
இந்த வைபவம் ஸ்ரீ கோடியம்மன் கோயிலின் திருவிழாவின் ஒருபகுதியாகும்..
ஸ்ரீ கோடியம்மன் கோயில் திருவிழா மஞ்சள் நீடார்ருடன் நிறைவடைந்த பின்னரே பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றமாகும்..

பச்சைக் காளி விஷ்ணு அம்சமாகவும் பவளக் காளி ருத்ர அம்சமாகவும்
பவனி வருகின்றார்கள்..

பகல் பொழுதில் விருப்பமும் வேண்டுதலும் உள்ளவர்கள் காளியை இல்லத்திற்கு வரவழைத்து மரியாதை செய்வர்..

அச்சமயம் விரிவாக அன்னதானமும் நடைபெறும்...

இரவுப் பொழுதில் 11 மணிவரை வீதியில் காளியாட்டம் நடைபெறும்

காளியாட்ட உற்சவத்தின் கோலாகலம் - இதோ!...


மேற்கண்ட ஸ்ரீகாளியாட்ட வைபவ காணொளியை
வழங்கியவர் நண்பர் திரு. ஞானசேகரன், தஞ்சை...

இத்துடன் தஞ்சை பெரியகோயிலில்
ஸ்ரீ பிரஹதீஸ்வர ஸ்வாமிக்கு நிகழ்ந்த
மகாதீபாரதனையையும் கீழுள்ள
காணொளியில் காணலாம்...இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
*** 

12 கருத்துகள்:

 1. தஞ்சை பரமஸ்வாமி தீபாராதனை காணொளி மிக அருமை.

  லிங்க தரிசனங்கள் கண்டோம். மகிழ்ச்சி கொண்டோம்.

  முதல் படம், சந்தன அபிஷேகம்தானே. இரண்டாவது படத்தில் உள்ளதுபோல், லிங்க உருவத்தில் கண், வாய் போன்றவை வரைவது உண்டா?

  ஞானசேகரன் அவர்கள் வழங்கிய படங்களில், இரண்டாவதாக இருப்பது 'தேனாபிஷேகமா' அல்லது பஞ்சாமிருத அபிஷேகமா? எனக்கு ரொம்ப வருடங்களாக (15+) சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்யவேண்டும் என்று அவா. இன்னும் வேளை வரவில்லை, எங்கு செய்வதென்றும் தெரியவில்லை.

  படங்கள் பகிர்வுக்கும், குறிப்பாக, நான் எப்போதும் எதிர்பார்க்கும், பாடலையும் படித்தேன்.

  இல்லக விளக்கு -இல்லத்தில் இருக்கும் விளக்கு. சொல் அக விளக்கு - சொல்லுக்கெல்லாம் விளக்கு, பல் அக விளக்கு - பலருடைய-அனைவருடைய உள்ளத்தில் ஒளிருவது, நல் அக விளக்கு -நன்மைகளை எல்லாம் தரும் விளக்கு

  பதிலளிநீக்கு
 2. தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலய தீபாராதனை காணொளி கண்டு மனதில் மகிழ்ச்சி. தலைநகரில் இருந்தபடியே தஞ்சையில் நடந்த நிகழ்வு பார்க்க முடிவதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. கோடியம்மன் கோவில் திருவிழா பற்றி இதுவரை அறிந்ததில்லை. மிகவும் வித்தியாசமான தகவல்கள்! விரிவான புகைப்படங்கள், விபரங்களுக்கு இனிய‌ நன்றி!!

  பதிலளிநீக்கு
 4. ஈஷா மைய சிவராத்திரி விழாவி னை நேர் அலையில் ஒளிபரப்பினார்கள் வெகு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தோம்

  பதிலளிநீக்கு
 5. அழகிய படங்களும், காணொளியும் கண்டேன் பகிர்வுக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 6. கொங்கணேஸ்வரர் திருக்கோவில் என்றதும் பழைய நினைவுகள் முட்டுகின்றன. என் அப்பா பிரதி வெள்ளிக்கிழமை தான் கட்டியிருக்கும் தாயத்தைக் கழற்றி ​எங்களிடம் தருவார். அங்கிருக்கும் துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து திரும்புவது வழக்கம்.


  ப்ரஹதீஸ்வரா....

  பதிலளிநீக்கு
 7. விதம் விதமான லிங்க தரிசனம் கிடைக்கப்பெற்றேன் இங்கு.

  பதிலளிநீக்கு
 8. தஞ்சைப் பெருவுடையார் கோயில் தரிசனம் அற்புதம். மற்றப் படங்களும் அபிஷேஹங்களும் கண்கொள்ளாக் காட்சி. இரண்டாவது சிவலிங்கம் நேரேயே பார்க்கிறாப்போல் இருந்தது. பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்தை ஒரு முறை ஆடி மாதம் கும்பகோணம் சென்றிருந்தபோது பெரியகடைத்தெருவில் பார்த்தேன், எனக்கு அதான்முதல் முறை. நம்ம ரங்க்ஸ் நிறையப் பார்த்திருப்பதால் அவருக்கு சுவாரசியப் படலை! :)

  பதிலளிநீக்கு
 9. முதல் நான்கு படங்களும் மனதை அப்படியே ஈர்த்துக் கட்டிப் போடுகின்றன. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போன்று உள்ளன.

  கொங்கணேஸ்வர் மற்றும் விஸ்வநாதத் திருக்கோயில் சிவராத்திரி பூசைகளும் அவ்வளவு அழகாகச் சிறப்பாக உள்ளன.

  காளியாட்ட வைபவம் இதுதான் முதல் முறையாகக் காண்பது அருமை....

  அருமையான லிங்க தரிசனம் கண்டோம் தங்களின் வழி...படங்கள் அனுப்பித் தந்த அனைவருக்கும் நன்றிகள் பல

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 10. படங்கள் எல்லாம் அருமை. காணொளிகள் எல்லாம் மிக அருமை.
  நெல்லத்தமிழன் கேட்டுக் கொண்டதால் எங்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது.
  காளியாட்டம் மாயவரத்தில் பார்த்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. சிவராத்திரி சிவ தரிசங்கள் கொடுத்தமைக்கு நன்றி.

  பதிவின் இறுதிப் பகுதியில்---

  பெரிய கோயில் பிரஹதீஸ்வரர் சுவாமிக்கான மஹா தீபாரதனை காணக் கொடுத்து வைத்திருந்தது. தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு