நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 20, 2019

விருந்தினர் பக்கம் 01

நெல்லைத் தமிழனின்
தேசாந்திரக் குறிப்புகள்..




கும்பகோணத்தைச்
சுற்றியுள்ள தலங்களில் சில.. 

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் திருக்கோயில் - தாராசுரம்..
சமீபத்தில் நான் மனைவியோடு கும்பகோணம் சென்றிருந்தேன்.

கிடைத்த ஒரு நாளில், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள வைணவத் தலங்களைத் தரிசிக்கவேண்டும் என்பது அவா.. நான் மட்டும் நான்கு வாரங்களுக்கு முன்பு கும்பகோணம் சென்றிருந்தபோது இரு நாட்களில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திவ்யதேசங்களை (வைணவத் தலங்களை) தரிசனம் செய்திருந்தேன்..

அந்தப் பயணத்தின்போது, சுவாமிமலை முருகன் கோவில், திருவிடைமருதூர் மஹாலிங்கம் கோயில், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில், தஞ்சை பெருவுடையார் கோயில் போன்றவைகளையும் தரிசனம் செய்தேன். 

அப்போதே எனக்கு ராஜ ராஜ சோழனின் பத்து மனைவிகளில் முக்கியமானவரும், பட்டத்து இளவரசனான ராஜேந்திர சோழனின்
அன்பைப் பெற்றவருமான பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படையையும் பார்க்கவேண்டும் என்ற அவா.

ஸ்ரீ பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை., பழையாறை.. 
பள்ளிப்படை என்பது சைவ சமயத்தில், இறந்தவர்களின் உடல் அல்லது அஸ்தியின் மீது எழுப்பப்படும் ஆலயம். அதில் கர்ப்பக்கிருஹத்தில் அஸ்தி அல்லது உடலைப் புதைத்த இடத்தின்மீது, சிவலிங்கம் சமைத்து கோயில் எழுப்புவார்கள்.  இதனையும் மக்கள் வழிபட்டுவந்தனர்..

அதற்கும் ஆலயத்திற்கும் பெருமளவு வேறுபாடு கிடையாது என்றாலும், ஆலயங்கள் தாம் சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள், புராண இதிஹாச முக்கியத்துவம் வாய்ந்தவை ஆலயங்கள் மட்டுமே.

ஸ்ரீ உடையவர் திருவரசு - திருஅரங்கம்..
வைணவத்தில், ‘பள்ளிப்படை’ என்பது, ‘திருவரசு’ என்று சொல்லப்படுகிறது. 

அங்கும் இறந்த ஆழ்வாரின் உடல் அல்லது அஸ்தி மேலே மேடை அமைத்து அங்கு சிறிய ஆலயம் எழுப்பப்படும். இதில் அந்த ஆழ்வாரது சிலையை அமைத்து அதனை வழிபாட்டுக்குரியதாகச் சமைப்பர்.

இதில் குறிப்பிடத் தகுந்தது, திருவரங்கம் கோயிலில் உள்ள, இராமானுசர் சன்னிதி (தனிக் கோயில்). அங்குதான் இராமானுசர் மறைந்ததும் அவரது உடல் பள்ளிப்படுத்தப்பட்டது.

இதுபோலவே, திருமழிசை ஆழ்வாரின் திருவரசு கும்பகோணத்திலும், திருமங்கை ஆழ்வாரின் திருவரசு திருக்குறுங்குடியிலும், குலசேகர ஆழ்வாரின் திருவரசு திருநெல்வேலி மன்னார் கோயிலிலும் இருக்கிறது..


ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரின் திருவரசு
திருக்குறுங்குடி..
மன்னார் கோயில் - திருநெல்வேலி (மாவ)  
இது தவிர வைணவப் பெரியோர்களான பெரியவாச்சான் பிள்ளையின் சன்னிதி கும்பகோணம் அருகிலுள்ள சேங்கனூரிலும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதாரத் தலம் திருமண்டங்குடியிலும், நம்மாழ்வாரின் அவதாரத் தலம் ஆழ்வார் திருநகரியிலும் இருக்கின்றன.

இவை அனைத்தையும் முன்வினைப் பயனாக தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

பெரும்பாலும் எனது மனைவி தீவிர வைணவக் கொள்கைகளைத் தொடருபவள். அதனால் சைவ சமயக் கோயில்களுக்கு வர அவள் விருப்பம் கொள்வதில்லை. நான் எங்குமே நான் வணங்கும் தெய்வத்தையே காண்பவன். அதனால் முக்கியமான எந்தக் கோவில்களையும் தரிசனம் செய்யும் வாய்ப்பை நழுவவிடுவதில்லை.

இதில் இரண்டுவிதமான கருத்துகள் உண்டு.

எங்கள் குலப் பெரியோர்கள் பிற கோயில்களில் நுழையாதவர்களாக இருந்தனர்.

என் அப்பா என்னிடம் சொன்னது, “எந்தக் கோயிலிலும் கண்ணனையே காண்கிறேன், வணங்குகிறேன்” என்று.

அது ஒருவேளை என் ஆழ்மனத்தில் பதிந்திருக்கலாம்.
அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எந்தக் கோயிலின் தரிசனத்தையும் விட்டுவிடுவதில்லை.

நிறைய பேர்கள், ‘இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்’, அதனால் இருக்கும் இடத்திலிருந்தே இறைவனை வழிபடலாம், ஒவ்வொரு கோயிலாக அவனைத் தேடிச் செல்லவேண்டியதில்லை, “அஹம் ப்ரம்மாஸ்மி”, அதனால் நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கும் இறைவனை வழிபட்டால் போதுமானது, ‘உள்ளமே கோயில், ஊனுடம்பே ஆலயம்’  என்று ஏதேதோ சொல்வார்கள். எனக்கு இதில் அவ்வளவாகப் பற்றுதலில்லை.

கோயில்கள் என்பது அந்த அந்த இடத்தின் சமூகத்துக்காகக் கட்டப்பட்டவை. அந்த அந்த இடத்தின் புராண/இதிகாச முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அங்கு பிரசன்னமான இறைவடிவைப் போற்றும் வகையிலும் எழும்பியவை.

இவைகள் எல்லாவற்றிலும் எத்தனை பெரியோரின் பாதம் படிந்திருக்கும்? அந்த அந்தக் கோயிலில் எவ்வளவு சான்னித்தியம் நிறைந்திருக்கும்? நம்முடைய சனாதன மதத்தின் கூறுகளான இந்தக் கோயில்களை, நம்மால் முடிந்த வரையில் தரிசனம் செய்யப் போவதும், அந்த அந்தக் கோயில்களின் வழிபாடு தங்குதடையின்றி நடக்க தொடர்ந்து கடமையாற்றும் சிறு சமூகத்திற்கு நம்மால் இயன்ற அளவு உதவி செய்தலும் நமது கடமையாகும்.  

கால மாறுதல்களினால் கோயிலைச் சுற்றியுள்ள சமூகம் பெரும்பாலும் புலம் பெயர்ந்துவிட்டது. அந்த அந்த ஊரிலேயே இருந்து கோயில் பணிகளிலோ இல்லை இறை வழிபாட்டிலேயே ஈடுபடுபவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டார்கள். நான் தரிசனம் செய்த சில கோயில்களில் அப்படிப்பட்ட உள்ளூர் மனிதர்களை, அவர்களின் பக்தியைப் பார்க்கும்போது, மயிர்க்கூச்செரியும். 

ஒரு கோயில் என்பதை நாம் பெரும்பாலும், பூசை செய்பவர்கள், அவர்களுக்கு தட்டில் போடும் காசை எண்ணியே எல்லாவற்றையும் செய்பவர்கள், காசு உள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும் மற்றவர்களை மதிக்காமலும் நடந்து கொள்கின்றனர் என்று சுலபமாக எண்ணிவிடுகிறோம்.

பல புகழ்வாய்ந்த, பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் இடங்களில் இந்த மாதிரி ‘பணத்தை’வைத்து பக்தர்களை வித்தியாசப்படுத்தும் முறைமை இருப்பது உண்மைதான். ஆனால் 80 சதவிகிதத்துக்கும் மேலாக, பழைமை வாய்ந்த கோவில்களுக்கு பக்தர்கள் கூட்டம் மிகக் குறைவு.

நாங்கள் சென்றிருந்த கோயில்கள் பெரும்பாலும் பிரம்மாண்டமானவை. 

சிறிய கோயில் என்று நாம் எண்ணும் கோயில்களிலும் குறைந்தபட்சம் 5-7 சன்னிதிகள் உண்டு. ஆனால் அங்கு பூசை செய்பவர்கள் ஓரிருவர் மட்டும் தான். இவர்களைத் தவிர, கோயிலைச் சுத்தம் செய்பவர்கள், பொருட்களை எடுத்துத் தருபவர்கள்/திரும்ப அந்த இடங்களில் பொருட்களை வைத்துப் பாதுகாக்கிறவர்கள், கோயில் மெய்காவலர்கள் என்று 10 பேராவது கோயில் பணிகளில் ஈடுபட்டால்தான் கோயில் நடைமுறைகளைத் தொடர இயலும்.

ஆனால் தினம் 5-10 பேர்களாவது தரிசிக்க வருவது இத்தகைய கோயில்களில் அபூர்வம். விழா நாட்களில் மட்டும் அந்த அந்தக் கோவில்களில் சிறிது கூட்டம் வரும்.  இறைவனின் திரு உருவங்களுக்கு தினப்படி மாலை, விளக்குக்கு எண்ணெய், மற்ற சந்தனம்/திரி போன்ற பல செலவுகள், இறை உருவங்களுக்கு மூன்று வேளைகளுக்கும் தயார் செய்யவேண்டிய பிரசாதம், மாலைகளை மறுநாள் களைந்து திரும்பவும் கர்ப்பக்க்ரஹம் போன்றவற்றைச் சுத்தம் செய்வது என்று ஒரு கோயிலில் ஏகப்பட்ட பணிகள் உண்டு. 

விசுவரூபம், உச்சிகால பூஜை, சாயரட்சை,  பள்ளிகொள்ளச்செய்தல் என்று ஒவ்வொரு காலத்திலும் பூசை நடைபெறவேண்டும். ஒரு அர்ச்சகர்/பூசாரி இருக்கும் கோயில்களில், ஒரு சன்னிதியில் பூசை முடித்ததும் அடுத்த சன்னிதிக்குச் செல்லவேண்டும். அப்போது இறை உருவங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள்.

நாம் இரண்டுபேர் கோயில் தரிசனம் போனால், பிரதான தெய்வம், தாயார்/அம்பாள் சன்னிதி, மற்ற சன்னிதி என்று தரிசனம் செய்வதற்கே பலமுறை சாத்தியமில்லாமல் இருந்திருக்கின்றன..

நந்திபுர விண்ணகரம் - நாதன்கோயில்..
இந்த முறை நாதன் கோயில் என்று அழைக்கப்படும் நந்திபுர விண்ணகரக் கோவிலில் விசுவரூப தரிசனம் செய்வதற்காகச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது காலை 5 மணி. சிறிது நேரத்தில் ஒரு சைவர், அவருடைய ஸ்வரூபத்தில் (ஆரஞ்சு வண்ண உடை, விபூதிப்பட்டை போன்றவையோடு) வந்து, ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ‘திருப்பாவை’ சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் விசுவரூப தரிசனத்துக்காக அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தோம். அவர் சத்தம் போட்டுச் சொல்லும்போது, நானும் அவருடன் சேர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் ஒரு பெண்மணி வந்து இரண்டு சன்னிதிகளின் வாசல்களைச் சுத்தம் செய்து கோலமிட்டு விளக்கேறினார். இன்னும் சிறிது நேரத்தில் இன்னொருவர் அந்தக் கோயிலின் புஷ்கரணியில் குளித்துவிட்டு, ஈரம் சொட்டச் சொட்ட கோயிலுக்கு ஒரு காராம் பசுவை ஓட்டிக்கொண்டு வந்தார்.

கோயில் மண்டபத்தில் வைத்து அதற்கான அலங்காரங்களைச் செய்து முடித்தார்.  அந்தப் பெண் அவரது வேலைகளை முடித்து கொஞ்சம் பூக்களையும் சுவாமிக்காகக் கொண்டுவந்திருந்தார்.

இதற்கிடையில் அர்ச்சகர், குளித்துவிட்டு, கோயிலுக்கான பிரசாதத்தைத் தயார் செய்துவிட்டு அதோடு, கோயில் சன்னிதியைத் தயார் செய்ய ஆரம்பித்தார்.

பிறகு விசுவரூப தரிசனம் நடத்தினார்.
கோயிலுக்கான மெய்க்காவலர் அங்கேதான் இருந்தார்.

சாதாரண நாட்களில் 10-20 பேர் தரிசனத்துக்கு வருவதே அதிகம். கோயிலுக்கான எல்லா வேலைகளையும் பெரும்பாலும் தங்கள் ஆர்வத்தால் உழவாரப் பணியாகத்தான் செய்து வருகின்றனர்..

இதைவிட மிகப் பெரும் கோயிலான குடந்தை ஆராவமுதன் கோயிலில், சுமார் 10-15 பேர்கள் விசுவரூப தரிசனத்துக்கு வருகிறார்கள். அவர்கள் அனேகமாக உள்ளூர் மக்கள்.

எதற்காகச் சொல்கிறேன் என்றால், கோயில் பணி என்பது ரொம்ப கவனமாகவும் பக்தியாகவும் கஷ்டத்தோடும் கையாளவேண்டிய பணி.

தஞ்சை பெருவுடையார் திருக்கோயில்.. 
தஞ்சை, குடந்தையைச் சுற்றியுள்ள பெரும்பாலான கோயில்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை அல்லது புனரமைக்கப்பட்டவை. அப்படி கோயில்களைக் கட்டும்போதோ புனரமைக்கும்போதோ, வரலாறு வரும் தலைமுறைக்குத் தெரியவேண்டும் என்பதற்காக, நிகழ்வுகளை அந்த அந்தக் கோவில்களில் சுற்றுச் சுவர்களிலோ அல்லது முடிந்த இடங்களில் கல்வெட்டாகச் செதுக்கி உள்ளனர்..


ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் - தஞ்சை அருங்காட்சியகம்..  
அதனைப் பற்றித் தெரிந்தவர்களும் மிகக் குறைவு. கோயிலின் தொன்மையைத் தெரிந்தவர்களும் குறைந்து வருகின்றனர்..

சில இடங்களில், சிற்பங்களைப் பார்க்க, கல்வெட்டுகளைப் பார்க்க பலர் வந்துபோவதால் அங்கு இருக்கும் காவலர்களுக்கு (வாட்ச்மேன்) அல்லது பூசை செய்பவர்களுக்கு அந்த இடங்களின் வரலாற்று முக்கியத்துவம் மிகக் குறைந்த அளவில் தெரிகிறது.

குடந்தையைச் சுற்றி 60+ பாடல் பெற்ற சைவசமயக் கோயில்களும்
12+ வைணவக் கோயில்களும் (திவ்ய தேசங்கள், அதாவது ஆழ்வார்களால் பாடப் பெற்றவை) இருக்கின்றன.  இவை அனைத்தையும் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வாரமாவது கும்பகோணத்தில் தங்கியிருக்க வேண்டும்.  குடந்தையிலேயே முக்கியமான கோயில்களாக 7 கோயில்கள் இருக்கின்றன (இன்னும் நிறைய இருக்கலாம்).

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை கும்பகோணத்துக்கு கோயில் தரிசனத்துக்காகச் சென்றிருந்தேன்.  முதலில் எனக்கு இரண்டு கோயில்களைப் பற்றி எழுதவேண்டும் என்று மனதில் தோன்றியது.



ஒன்று, புள்ளமங்கையில் இருக்கும் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.
மற்றது ராஜராஜ சோழனின் மனைவியரில் ஒருவரான பஞ்சவன் மாதேவிக்கு ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் எழுப்பிய பள்ளிப்படை.

துரை செல்வராஜு சார் அவரது தளத்தில் (தஞ்சையம்பதி) பல்வேறு கோயில்களைப் பற்றி பல வருடங்களாக எழுதிக் கொண்டு வருகிறார். இதனைத் தவிர ஒவ்வொரு முக்கியமான நாட்களிலும் பக்திப் பதிவுகள் போடுகிறார். சமீபத்தில் மார்கழிக்கு நாளுக்கு ஒரு பதிவு என்று முழு மாதமும் பதிவுகள் போட்டிருந்தார். 

எங்கள் பிளாக், ஸ்ரீராம் சொல்லியிருந்து பல மாதங்களாக கதையே எழுதி அனுப்பலையே என்று தோன்றியதால் (நான் அனுப்பியிருந்த இரண்டு டிராஃப்டுகளை, கட்டுரை மாதிரி நிகழ்ச்சிகளை எழுதியிருக்கீங்க, கதை வடிவத்துக்கு மாற்றித் தாங்க என்று சொல்லியிருந்தார்) நேற்று இரவு ஒரு கதை எழுதினேன். கோயில் தரிசனம் பற்றியது அது.

அப்போ உள் மனதில் தோன்றியதால், துரை செல்வராஜு சாருக்கு, கோயிலைப் பற்றி ஒரு இடுகை எழுதி அனுப்பினால் வெளியிடுவீர்களா என்று கேட்டேன். அதற்கு, உடனே எழுதி அனுப்புங்கள் என்று encourage செய்யும் விதமாக பதிலனுப்பியதால் இதனை எழுத ஆரம்பித்தேன்.

முதலில் இரு கோயில்களைப் பற்றி மட்டுமே, அதிலும் புள்ள மங்கை கோயிலைப் பற்றி மட்டுமே எழுதவேண்டும் என்று நினைத்தேன்.

நான் பெரும்பாலும் செல்லும் இடங்களில் எல்லாம் சில படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளதால்,  நான் தரிசித்த கோயில்களைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.

தல வரலாறு என்றெல்லாம் எழுதுவதை விட,
அந்தக் கோயில்களின் நான் கண்டது என்ன என்பதை மட்டும் எழுதுவேன்.

இனி வாய்ப்பு இருக்கும்போது இரு வாரங்களில் ஒரு தடவை
‘தஞ்சையம்பதி’ தளம் மூலமாக உங்களுடன் பேசுகிறேன்...
***


பேசுங்க.. பேசுங்க...
நாங்களும் ஆவலோட காத்திருக்கோம்!...

வாழ்க நலம் 
ஃஃஃ

110 கருத்துகள்:

  1. நல்ல கருத்துகள்...

    அழகிய படங்கள்...
    தொடரட்டும் தங்களது பணி..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார்..

      சில இடங்களுக்கு, அதிலும் சரித்திர முக்கியத்துவம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் சிலிர்ப்பு இந்தமுறை பல கோவில்களுக்குச் செல்லும்போது ஏற்பட்டது. பகிர்ந்துகொள்ளும் எண்ணத்தினால் எழுதினேன்.

      நன்று

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    நெல்லைத்தமிழனின் எழுத்துக்குக் கேட்க வேண்டுமா? இங்கே எங்கள் தளத்தில் ஞாயிறு படங்கள் பகுதியில் அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். வெறும் படங்களாகப் போடாமல் விவரங்களையும் சேர்த்துக் கொடுங்கள் என்று... அவர் அதை இங்கு செய்திருக்கிறார். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஶ்ரீராம்.. நீங்கள் இடையில் சில ஞாயிறுகளை எபியில் களவு கொண்டு உங்கள் பிரயாணங்களைப் பற்றியும் எழுதணும்.

      தெரியாத அல்லது தெரிந்த இடங்களுக்கு பிரயாணம் செய்தாலும் அதுபற்றி நம் எண்ணங்களை எழுதும்போது பிறர் படிக்க இனிமை தரும்.

      நீக்கு
  3. நான் சென்ற பல பழைய கோவில்களிலும் நிறைய இடங்கள் ஆட்கள், பொருளாதாரம் குறைவாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். விளக்கேற்ற கூட வழி இல்லாத கோவில்களையும் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று ஓ எம் ஆர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெருமாள் கோவிலைக் காண்பித்து என் மனைவி 1500 ஆண்டுகளுக்குமேல் புராதானமானது என்று சொன்னாள்.

      அந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எப்போ கிடைக்குமோ.

      ஶ்ரீராம்.. இப்போ நிறைய கோவில்களில் சந்தான கோபாலகிருஷ்ணன் விக்ரஹங்களை வைத்து, அதனை வணங்கி வேண்டிக்கொண்டால் குழந்தை பிறக்கும், திருமணமாகும், இந்த கிரகத்துக்கு நல்லது என்று மார்க்கெடிங் செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?

      நீக்கு
  4. ரொம்பக் கூட்டம் இருந்தாலும் அந்த இடங்களை கோவிலாக மதிப்பதைவிட ஒரு சுற்றுலா ஸ்தலமாகத்தான் எண்ணத் தோன்றும் எனக்கு - நானு அக்கா கூட அவர் தம்பட்டம் தளத்தில் சொல்லி இருப்பது போல. கூட்டம் அதிகம் இல்லாத கோவில்கள் எனது சாய்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு அளவில் உங்கள் ஒப்பீடு சரிதான் ஶ்ரீராம். அப்படி சுற்றுலா இடமாக இருந்தாலும் அது நமக்குள் எழுப்பும் பக்தி உணர்வும் மறுக்க முடியாத்துதானே

      நீக்கு
  5. மிக அருமையான பதிவு.
    நேரில் பேசுவது போல் இருக்கிறது.
    கோவில்கள், பள்ளிபடை, திருவரசு பற்றி அருமையான விவரிப்பு.
    கோவில்களில் தொண்டு செய்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
    இங்கு பிரதோஷம் நடக்கும் கோவிலில் பெண்களின் பணி வியக்க வைக்கும்.
    அதையும் இங்கு குறிப்பிட்டது நல்ல செயல்.

    கூட்டம் வராத கோவிலில் நமக்கு மட்டும் தரிசனம் செய்து வைக்கும், பட்டர், குருக்கள், பூசாரிக்கு, அங்கு கூட்டும் பணியில் இருப்பவர், காவல் செய்பவர்களுக்கு பணம் கொடுத்து வருவோம். பூகட்ட ஆள் இருக்க மாட்டார், காவல் செய்பவரே பூக்கள் கட்டி தருவார். உள்ளூர் மக்கள் தன்னார்வ மக்கல் உழைப்பால்தான் சில கோவில்கள் இருக்கிறது.
    அதையும் விவரித்த விதம் அருமை.

    படங்கள், செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நேரம் கிடைக்கும் போது பேசுங்கள்.
    கேட்க ஆவலாக இருக்கிறோம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம்.

      கோவில் தொண்டு செய்பவர்கள் அங்கு எப்போவாவது தரிசனம் செய்யப் போகிறவர்களைக் காட்டிலும் பல மடங்கு பெரியவர்கள்.

      தன்னார்வ மக்கள் மிகப் பெரியவர்கள். திருநின்ற ஊரில் இராமர் சன்னிதியில் நாங்கள் சேவிக்கச் சென்றபோது, அங்கு எளிய பெண் குடும்பம் இறைக்கு மாலை கட்டி, உழவாரப் பணி செய்து பிறகு இராமரைப் பற்றி எளிய பக்தி பஜனை செய்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வை எழுத்தில் வடிப்பது கடினம்

      நீக்கு
  6. தன்னார்வ மக்கள் செய்யும் தொண்டால் இப்போது கோவில் குருக்களின் வேலை பளு குறைந்து இருக்கிறது. அவரும் மக்களுடன் உற்சாகமாய் பேசி விழாக்களை கொண்டாடுகிறார்.

    அபிஷேகம் என்றால் மக்கள் கொண்டு வந்து கொடுக்கும் பொருட்களை பிரித்து எடுத்து வைப்பது. பூக்கள் கொடுப்போரின் பூக்களை எல்லாம் (சரமாய் வந்தால்)
    பெரிய சிறிய மாலைகளாக செய்து விடுவார்கள்.

    உதிரி பூக்களை அர்ச்சனைக்கு எடுத்து தனியாக வைப்பார்கள்.

    பூஜை சாமாங்களை சுத்தமாக தேய்த்து அதற்கு வேண்டிய திரி எண்ணெய்களை போட்டு ரெடி செய்து அழகாய் வரிசையாக ஒன்றன் பின் ஓன்றாக எடுத்துக் கொடுப்பார்கள்.

    பிரசாதங்கள் போட மடபள்ளியில் உதவி செய்வார்கள். பிரசாதங்களை அழகாய் விநியோகிப்பார்கள்.

    இப்படி தொண்டுகள் பலவிதம்.
    உழவாரப் பணி செய்து எளிய பக்தி பஜனை செய்தது மகிழ்ச்சியை தருகிறது.
    மாயவரத்தில் இப்படி வார வழிபாடுகள் நாங்கள் ஏற்று செய்வோம். அதில் இப்படி பணிகள் செய்வோம்.
    மதுரையிலும் முன்பு இருந்த வீட்டுப்பக்கம் இருந்தது எல்லா முக்கிய தினங்களையும் கூடி செய்தோம்.

    இப்போது இருக்கும் வீட்டுக்கு அருகில் அப்படி கூட்டுவழிபாடு இல்லை.
    வெகு தூரம் போகவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட பக்த ஜனங்களின் சேவை இன்றியமையாத ஒன்று..

      சைவமும் வைணவமும்
      தழைத்து இனிதோங்கட்டும்...

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்.. நீங்கள் எழுதியதுபோல, இன்னும் பல பணிகள் கோவிலில் உண்டு. ஒரு நாள் அந்த வழிபாடுகள் முறையாக நடப்பதற்கும் நிறைய வேலைகள் உண்டு.

      நாம, பொதுமக்கள் பெரும்பாலும் கோவில் நடைமுறைகளை அறிந்திருப்பதில்லை. எப்போ பூசை செய்வார்கள், எப்போ உபகாரத்தை (கடவுளுக்கான நிவேதனத்தை) ஏற்றுக்கொள்வார்கள், எப்போது தீர்த்தம் கொடுப்பார்கள் என்பதற்கெல்லாம் நேரம் காலம் உண்டு.

      கோவிலில், தின காலண்டரில் உள்ள பேப்பர்களைக் கிழித்து அதனை, குங்குமம் எடுத்துச் செல்வதற்காக மாட்டிவைப்பதும் ஒரு பணிதான்.

      அதைவிட முக்கியமான பணி எங்கேயும் விபூதி, குங்குமம் தூணில் அப்புவது, சாப்பிட்ட பிரசாதத்தைத் துடைத்தல் போன்ற வேலைகளைச் செய்யாமை.

      நன்றி..

      நீக்கு
  7. நேரலை போன்று சொல்லி வரும் விடயங்கள் ரசித்து படிக்க வைத்த இனிப்பான (அல்வா போன்றே) செய்திகள். தொடரட்டும் தங்களது சொற்பொழிவு மழை.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி... ஆரம்பம் என்பதால் கொஞ்சம் நீளம் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். பொதுவா நான் கோவில்களையும் அதில் உள்ள சிற்பங்களையும் நம்ம பாரம்பர்யமாகத்தான் பார்க்கிறேன். தமிழுக்கு தமிழனுக்கு நெடிய வரலாறு உண்டுதானே..

      நீக்கு
  8. விருந்தினர் பக்கம் 01////

    வாவ்வ்வ்வ்வ்வ்வ் முதல் குஞ்சு பொரிச்சிட்டுதூஊஊஊஊ:))..

    ஹையோ இங்கின கும்மி எல்லாம் அடிக்கப்படாது அதிரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), நல்ல பிள்ளையாக கும்பிட்டபடி கொமெண்ட் போட்டிட்டு ஓடிடோணும் ஓகே?:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சரி சரி.. ததாஸ்து.. ததாஸ்து:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... உங்க வெளிப்படையான கருத்து வரவேற்கத் தகுந்தது. நீங்கள் கும்பிட்டபடி ஓடும் இடுகை நான் முடிந்தவரை எழுதமாட்டேன்.

      நீங்க எழுதுவது எனக்கு, நாம எல்லாரும் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போகும் சமயம், வழியில் குறுக்கிடும் பிள்ளையார் கோவிலைப் பார்த்து, தவிர்த்துவிடாமல் கன்னத்தில் போட்டுக்கொண்டே, தியேட்டர்ல படம் போட்டுடப் போறானேன்னு அவசர அவசரமா ஓடுவதை நினைவுபடுத்துது.

      நீக்கு
    2. அதிரா நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் அப்புறம் உங்களை நிறைய கருத்துகளுடன் இங்க பார்த்ததும் ஆஹா அப்ப கூட ஒரு ஆள் இருக்காங்கனு நினைச்சுட்டேன்...

      நெல்லை உங்க பதிலையும் ரசித்தேன்...

      கீதா

      நீக்கு
  9. முதலாவது மண்டபம்.. பார்க்கவே ஆசையாக இருக்கு, அதில கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு வந்தாலே மனம் இளமை ஊஞ்சல் ஆடும்.. அவ்ளோ புத்துணர்வு கிடைக்கும்.. பார்க்கவே அப்படி உணர்வு வருது. கற்கோயில் போல இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா. அது சிவன் கோவில். நீங்க படிக்காம விட்ட பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழ மன்னன் அவர்களின் பையன் ராஜேந்திர சோழனுக்கு அடுத்த தலைமுறை மன்னன் எழுப்பிய கோவில்.

      கோவிலில் சிவனைத் தொழுதுவிட்டு இந்தப் படிக்கட்டுகளில் சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு வந்திருப்பார்கள் 960 ஆண்டுகளுக்கு முன்பு

      நீக்கு
    2. //படிக்காம விட்ட பொன்னியின் செல்வன்///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  10. “பள்ளிப்படை”.. புது விசயம்.. இப்படி எழுப்பட்ட கோயில்கள் இன்னும் இருக்கோ? அப்போ நம் நாயன்மார்களில் இப்படிப் பள்ளிப்படை இருக்கோ?..

    ஆனா பள்ளிப்படைக்கும் மூலஸ்தானம் இருப்பது தெரியுதே.. விளக்கு எரியுதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நாயன்மார்களுக்குப் பள்ளிப்படை" - நிச்சயம் இருக்கும். ஆனால் அதற்கான சரித,திரச் சான்றுகள் இருக்கான்னு படிக்கணும். எனக்கு அவ்வளவு தெரியலை.

      பூசலார் நாயனார், மனதால் கட்டிய கோவில்... இதனை வரும் வாரங்களில் குறிப்பிடறேன்.

      நீக்கு
  11. நாம் வாழும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவோர் இறைவன் இருக்கும் இடத்தை மட்டும் அசுத்தபடுத்தி வருவது வருத்தபடவேண்டிய செய்தி.
    பிரதோஷம் சமயம் ஒரு அன்பர் அழகாய் கத்தரித்த தாள்களை விநியோகம் செய்வார். குங்குமம், விபூதியை எடுத்துச் செல்ல அதுவும் தொண்டுதான் நீங்கள் சொல்வது போல்.

    விபூதியை வீட்டுக் கொண்டு போக வேண்டாம் என்றாள் அங்குள்ள கிண்ணங்களில் போட்டு விடலாம் அதை விடுத்து தூண்களில் போடுவது சிலைகளின் மேல் தடவிவிட்டு வருவது வருந்த தக்கது.

    ஒறுவர் கோவிலில் சொற்பொழிவு செய்த போது விபூதிகளை வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் அது உங்களுக்கு செல்வத்தை தரும் என்றார், அப்படியாவது எடுத்து செல்வர்கள் என்று.

    எங்கள் வீடுகளில் இரண்டு விபூதி மரவை உண்டு, ஒன்றில் புதிய விபூதியும், மற்றொரு மரவையில் கோவில் விபூதிகளும் இருக்கும்.கோவில் போய் வந்தவுடன் வீட்டில் இருப்பவர்கள் அணிந்து கொண்ட பின் மீதியை மரவையில் போட்டு விடுவார்கள்.

    உடம்பு சரியில்லை என்றால் பல கோவில் விபூதிகள் பூசப்படும் முதலில் அப்புறம்தான் மருத்துவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்... நீங்கள் சொல்வது சரி.

      என் அனுபவத்தைக் குறிப்பிடறேன். விபூதி, குங்கும்ம் நம் வலது கையில் தர்றாங்க. பெருமாள் கோவிலில் அப்போதான் தீர்த்தமும் தந்திருப்பாங்க. அப்போ வலது உள்ளங்கை சிவப்பா ஆயிடும். கையை நன்கு அலம்பவும் நிறைய கோவில்களில் வாய்ப்பில்லை.

      இதற்குத் தீர்வா, ஒரு தட்டில் குங்கும்ம், விபூதி வைத்துவிட்டு தேவையான பக்தர்கள் அதனை எடுத்து எட்டுக்கொள்ளச் செய்யலாம்.

      ராஜராஜன் பெரியகோவில், தமிழர்களின் கலைப்படைப்பு, நம் பெருமிதம் எல்லாம் நாம சொல்றோம். கருவறையின் வெளிப்பகுதியில் விபூதி கையை அப்படியே சிற்பம், கற்களின்மீது பதிந்துவிட்டுச் செல்றாங்க.

      நாங்க இரண்டு பிளாஸ்டிக் கவர்ல வாய்ப்பு கிடைக்கும்போது குங்குமத்தை வாங்கிக்கொண்டோம்.

      இன்னொன்று, பூக்கள், துளசி, வில்வம்லாம் நாமே எடுத்துக்கொள்ளலாம். இல்லைனா எப்படி அவற்றை தூக்கிட்டுப் போறது, தூரப் போடுவது என்ற கன்ஃ்ப்யூஷன்

      நீக்கு
  12. வீட்டுக்கு கொண்டு போக வேண்டாம் என்றால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது சில கோவில்களில், விபூதி, குங்குமத்தைப் போட்டுச் செல்ல கிண்ணங்கள் வச்சிருக்காங்க. அதேபோல நம்மையே குங்கும்ம் விபூதி எடுத்துக்கச் சொல்றாங்க.

      நீக்கு
  13. ஓ எனக்கு வைணவத்துக்கும் சைவத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.. சாப்பாட்டு முறையில் இருக்கு ஆனா கோயில் அமைப்பிலும் இருக்கோ... எங்கள் வீட்டிலும் நாங்களும் அனைத்திலும் கடவுளைக்காணலாம் எனும் கொள்கைதான்.. மதம் வேறுபட்டால் என்ன அடிப்படைக் கடவுள் ஒன்று தானே.. ஏதோ கண்ணுக்கு தெரியாத ஒரு சக்திதானே எனத்தான் நான் நினைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பாயின்ட் சரிதான். ஆனா பொதுவாவே "மதம்" என்பது அபின் மாதிரி என்று சிலர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

      "ஆவிகள் உலகம்" என்ற பத்திரிகையில் ஆவி ஆராய்ச்சி செய்து, அவங்க ஒரு இறந்த முஸ்லீம் ஆவியிடம் பேசியபோது, அது, "இது நமாஸ் நேரம். முடித்துவிட்டு வருகிறேன்" என்றது எனப் போட்டிருந்தார்கள்.

      நீக்கு
    2. சைவம் என்பது சிவன் முழுமுதற் கடவுள் என்ற கான்சப்ட். அவங்களுக்கு விஷ்ணு, பிரம்மா, லக்ஷ்மி எல்லோரும் உண்டு. ஆனால், சிவன், பார்வதி தான் முக்கிய தெய்வங்கள்.

      வைணவத்திற்கு, விஷ்ணு, லக்ஷ்மிதான் முழு முதல் தெய்வங்கள். அவர்கள் சிவன் பார்வதியை வணங்குவதில்லை. தீவிர சைவ, வைணவர்கள் அவரவர் கோவில் தவிர மற்றவற்றிர்குச் செல்ல மாட்டார்கள், வணங்க மாட்டார்கள்.

      இதுக்கு மேல இந்த சப்ஜெக்ட் எழுதினா அதிராவுக்கு புரிவது கடினம். அதிருக்கட்டும், உங்களுக்குத் தெரியுமா? "சைவர்கள்" என்பவர்கள் மாமிச உணவு சாப்பிடாதவர்களாக இருந்தார்கள், அதனால்தான் தமிழ்நாட்டில், Veg, Non Veg Food என்பதற்கு, சைவ உணவு, அசைவ உணவு என பெயர் வந்ததென்று?

      நீக்கு
    3. உங்கள் எண்ணமும் சரிதான். அடுத்த உயிர்களிடத்தில் அன்பு செலுத்தாமல், என் கடவுள், உன் கடவுள் என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லை.

      நீக்கு
    4. இலங்கையில் வைஸ்ணவ சமயத்தவர் இல்லை என்றே நினைக்கிறேன்.. அல்லது எனக்கு தெரியாதோ தெரியவில்லை, ஆனால் விஸ்ணு கோயில்கள் இருக்கு.

      ஆனாலும் பாருங்கோ.. எங்களைப்போட்டுப் படுத்தாத பாடு படுத்தினார்கள் வைஸ்ணவர்கள் பற்றியும் சமயத்தில் கேள்விகள் வரும் கர்:)).. அதேபோல இந்திய மன்னர்கள் கோயில்கள் பற்றி எல்லாம் விழுந்து விழுந்து பாடமாக்கினோம்ம்..:) சிலபஸ் ல இருந்துது ஹையோ ஹையோ..:).

      ஓமோம் சைவர்கள் என்றால் அவர்கள் பூசை பண்ண மாட்டார்கள் ஆனா மாமீசம் உண்ணாதவர்கள்.. கதிர்காமத்தில் பூஜை செய்வது சைவர்கள் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை.. அங்குதானோ இல்லை இன்னொரு கோயிலோ தெரியவில்லை, சைவர்கள் வாயைக் கட்டிப்போட்டு பூஜை செய்வார்கள்.. அதாவது மந்திரம் சொல்லாமல்.

      நீக்கு
    5. இன்னொன்று நெல்லைத்தமிழன், சைவம்.. அசைவம்..., சைவம் எனில் மாமீசம் உண்ணப்படாது என்பதை எல்லாம் உருவாக்கியது நம் மக்கள்தானே?.. அசைவம் உண்பது பாவம் என்பதால், அப்படிக் கொண்டு வரப்பட்டதெல்லோ.. கண்ணப்ப நாயனார் எல்லாம், மற்றும் நம் மூதாதையர்கள் காட்டில் வேட்டையாடி உண்டு தானே உயிர் வாழ்ந்தார்கள்.

      நாம் அதாவது அசைவம் உண்போர்.. இந்துசமயத்தவர்கள் எனத்தான் சொல்லோணும் என நினைக்கிறேன்ன்.. சைவத்துள் வராது. ஆனாலும் பாருங்கோ.. என் மூத்த அடி சைவம்.. எங்கள் பூட்டன் பூட்டி.. மற்றும் அம்மம்மா.. அம்மப்பா அப்பப்பா எல்லோரும் சைவமாக இருந்தவர்கள்.. அசைவம் அறியாதவர்கள்... பின்பு அப்பா அம்மா வில் ஆரம்பிச்சுத்தான் நாமும் அதுக்கு அடிமையாகிட்டோம்:))

      நீக்கு
    6. உணவுக்கும் சைவத்துக்கும், மத்த்துக்கும் தற்காலங்களில் ரொம்ப சம்பந்தமில்லை.

      எனக்கு இதுபற்றி ரொம்பவும் தெரியாமல் என்னுடன் பணியாற்றிய அசைவம் உண்பவனிடம், beefஐயும் சாப்பிடுவாயல்லவா என்று கேட்டதற்கு அவனுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. மாடு தெய்வமல்லவா, எப்படி அப்படிக் கேட்டீர்கள் என்று சண்டைக்கு வந்துவிட்டான். அதனால் உணவுப் பழக்கத்தைப் பற்றி அதிகமாக நான் கேட்பதில்லை.

      நீக்கு
  14. ஆவ்வ்வ் உங்கள் அப்பா சொன்னதைப்போலவே தான்ன்... சேர்க்குப் போய் முன்னால் நின்று அப்பனே முருகா.. வைரவா எல்லோரையும் காப்பாத்துங்கோ என ஒரு கணம் சொல்லிவிட்டுப் போவேன்ன்.. அங்கு போய் ஜேசுவே எனச் சொல்ல வராது.. வேண்டுமென்றல்ல.. மனம் லயிக்கும்போது நம் பரம்பரைதானே முன்னே வரும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க உங்க எழுத்துப் பிழைக்கு விளக்கம் எழுதவேண்டாம். உங்களுக்கு சந்தேகம் வந்தால் அது என்ன வார்த்தைனு நாங்களே உங்களுக்குச் சொல்லிக்கொடுப்போம். அப்படி டிரெயினிங், உங்க இடுகைகளைப் படித்து எங்களுக்கு வந்தாச்சு.

      நீக்கு
    2. நீங்க, "எல்லாரும் காப்பாத்துங்கோ"ன்னு சொல்லிட்டு வேகமாப் போயிடுவீங்க போலிருக்கு. கொஞ்சம் நிதானிச்சு நின்றிருந்தீங்கன்னா, "எங்க எங்களுக்குத் தரவேண்டிய வைர அட்டிகை, நகை" என்ற குரலும் உங்களுக்குக் கேட்டிருக்கலாம்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நெல்லை சூப்பரா சொன்னீங்க...அதானே நமக்குப் புரியாதா என்ன!!! அதிரடியின் வார்த்தைகள் அவங்களுக்கே சில சமயம் நாம தான் சொல்லிக் கொடுக்கனுமாக்கும் ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
  15. இல்லை நெல்லைத்தமிழன், எனக்கு இதில் மாறு கருத்து உண்டு.. அதாவது பூசை செய்பவர்கள் எல்லோருமே மனதில் ஒரே விதமானவர்கள் என.. அப்படி இல்லை.. எங்கும் எதிலும் விதிவிலக்கு இருப்பதைப்போல கோயில் ஐயர் ஆட்களிலும் இந்த மாறுபாடு உண்டு...

    இதைப் பெரிய கோயில்களில் அவதானிக்க முடியாது, ஆனா சனம் குறைவான சிறிய கோயில்களில் காணலாம்.. அதாவது ஒருவர் 100 ரூபா நோட்
    வைத்துக் குடுத்தால்ல்.. 5 நிமிடம் மந்திரம் சொல்லி அழகாக தீபம் காட்டுவார்கள்..

    விரலுக்கேத்த வீக்கம் போல.. கஸ்டத்தில் இருப்பவர்.. 5..10 சில்லறை கொடுத்தால்ல்.. வாயிலே முணுமுணுத்து விட்டு மந்திரத்தை.. சும்மா டக்கெனத் தீபம் காட்டி விட்டுப் பூக் கொடுப்பார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா... நம்மகிட்டயும் நல்லவர்கள், கெட்டவர்கள், சுமாரானவர்கள்..... என்றெல்லாம் இருப்பவர்கள்போல... அவர்களிலும் சிலர் நீங்க சொல்வதுபோல ஆளைப் பொறுத்து இதனைச் செய்கிறார்கள். பெரிய கோவில்களிலும் இதனைக் காண முடியும்.

      ஆனா அதிரா, நாம தரிசிக்க வந்தது இறைவனைத்தானே... அவர் நம்மைப் பார்த்தால் போதும். இப்படித்தான் நான் நினைத்துக்கொள்வேன்.

      நீக்கு
    2. ஆனாலும் பாருங்கோ என்னால உங்கள் உள் மனதைக் கண்டு பிடிக்க முடியுது நெல்லைத்தமிழன்:)) ஹா ஹா ஹா அதாவது சுத்திச் சுத்தி ஐயரைக் குறை சொல்லிடாமல் தப்புறீங்க கர்:)).. எனக்கு எப்பவும் நீதி நேர்மை நியாயம் கடமை எருமை தான் முக்கியமாக்கும்:))..

      ஒரு உண்மை சொல்கிறேன், சில கோயிலுக்குப் போனால், எந்த ஐயர் நிற்கிறார் எனச் செக் பண்ணிவிட்டே சிலர் அர்ச்சனை செய்வதுண்டு, ஏன் தெரியுமோ.. சிலர் ஒழுங்காக தீபம் காட்டாமல் மந்திரம் சொல்லாமல் அர்ச்சனை செய்வார்கள் என்பதால்..

      அப்படி அவர்கள் செய்வதால், கும்பிடப் போனவர்களுக்கு மனம் நிம்மதியை இழந்து, மனதுள் திட்ட வேண்டிய நிலைமை வந்திடும் என்பதால்...

      கோயிலை விட்டு வெளியே வரும்போது, மனம் மகிழ்வாக இருக்கோணும்.. அதுக்கு கடவுளுக்கு அடுத்தபடியாக கோயிலில் இருக்கும் ஐயர் ஆட்களும் புன் முகத்தோடும், சிரிப்போடும்.. நல்லபடியும் இருக்கோணும் என்பது என் கருத்து..

      “கொடுமை கொடுமை எனக் கோயிலுக்குப் போனால்.. அங்கு ஒரு கொடுமை காத்திருந்ததாம்” எனும் நிலைமை வரக்கூடாது.

      நீக்கு
    3. அதிரா... அப்படி இல்லை. நானும் இத்தகையவர்களைக் கண்டிருக்கிறேன், அனுபவப்பட்டிருக்கிறேன். அவரவர் வினை அவரவர்களுக்கு. சென்டிமென்ட், பக்தி அதிகமுள்ள பணியில் இருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் பணி புரியணும். நாம், இந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கடவுள் காலடியில் வைத்துவிட்டுத் தாருங்கள் என்றால், செய்துதரலாம், இல்லைனா அப்படி வைப்பதில்லை, அந்தக் கவர் மீது குங்கும்ம் பூசிக் கொடுக்கறேன் என்றால் அது கேட்பவர்களுக்கு இனிமை. எரிந்து விழுந்தால் அது கேட்பவரின் மனதைக் கடுமையா பாதிக்கும்.

      நீக்கு
    4. அதிரா எனக்கும் பைசா வாங்கி தீபம் காட்டுவது பிடிக்காது. நான் கொடுக்கவும் மாட்டேன். ஸ்பெஷல் வழிபாடுகள் என்று (நான் தனியாகச் சென்றால் போகவே மாட்டேன்...குழுவோடு சென்றால் வேறு வழி இல்லை..நான் பெரும்பாலும் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட இடம் சொல்லிவிட்டு அந்த சன்னதியில் இல்லை அந்த இடத்தில் அமைதியாக உட்கார்ந்து விடுவேன். இறைவனைத்தானே நாம் தரிசிக்கப் போகிறோம்...ஏன் பூசாரிகளைச் சொல்ல வேண்டும் நமக்கு விருப்பம் இல்லை என்றால் விலகி வந்து விட வேண்டியதுதான். நான் கோயிலில் அர்ச்சனை வழிபாடு என்று செய்வதில்லை. ஒன்லி ப்ரேயர்...அமைதியாக தியானம்...

      இதுவும் நான் பல வருடங்களுக்கு முன்பு ஒரு மடத்தில் கற்றது. அச்சொற்கள் முதலில் என்ன இது இப்படியான பெரியவர் இபப்டிச் சொல்கிறார் என்று இருந்தாலும் அப்புறம் அது என் மனதில் மண்டையில் ஏறியதில்லை....ஒவ்வொருவரின் நம்பிக்கை செண்டிமென்ட் எனவே நெல்லை சொல்லியிருப்பது போல் சிலரின் மனதை அவர்களது சொல் பாதிக்கும்..

      கீதா

      நீக்கு
    5. கோயிலுக்குப் போய் அர்ச்சனை ரிக்கெட் வாங்காட்டில், நப்பி:) என நினைக்கிறார்கள் கீதா:), இன்னொன்று நம் பெயர் சொல்லி தீபம் காட்டும்போது.. அதிலும் ஒரு மகிழ்ச்சி வருதே......:)..

      நீக்கு
    6. எத்தனைக்குத்தான் பயப்படவேண்டிக்கிடக்கூஊஉ கர்ர்ர்:)

      நீக்கு
    7. நப்பி - இதற்கு அர்த்தம் தெரியலை.

      நானும் இத்தகைய அர்ச்சகர்களை/பூசாரிகளைக் கண்டிருக்கிறேன். அதனைக் கடந்தும் வந்திருக்கிறேன்.

      என் மனைவி சில மாதங்களாக எனக்குப் பாடம் எடுத்து, எங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வதில்லை, இறைவனுக்கே அர்ச்சனை செய்யச் சொல்லுவோம்.

      இதை எழுதும்போது இன்னொன்றையும் சொல்லத் தோணுது. நான் சென்ற மாதம் நாச்சியார் கோவிலுக்கு 'கல் கருடன்' சேவைக்குச் சென்றிருந்தேன். இரவு 10 மணிக்கு, தனி பல்லக்கில் தாயாரை ஏளச் செய்து (அதாவது பல்லக்கு தூக்கிக்கொண்டு) வருவார்கள். கொஞ்சம் பின்னால் கல்லிலே செய்த கருடனையும் அதன் மீது கடவுளையும் ஏளச் செய்துவருவார்கள். கல் கருடன் பல்லக்கை, வெளியில் 100+ பேர்கள் இருபுறமும் தோளில் தூக்கிவருவார்கள். தாயார் பல்லக்கை 40 பேர் இருபுறமும் (20 + 20) தூக்கிவருவார்கள். நான் தாயார் பல்லக்கைத் தோளில் சிறிது தூக்கிக்கொள்ளவா என்று அங்கிருந்தவரைச் சொன்னதற்கு, 'வாங்க வாங்க தாராளமா நீங்களும் தோள் கொடுங்க' என்று சொன்னார். சில அடிகளுக்குள்ளேயே எனக்கு தோளில் வலி. அப்புறம் நான் விலகிட்டேன். கல் கருடன்னா எனக்குத் தாங்காது என்று அதை முயற்சிக்கவில்லை. அப்போ நான் நினைத்துக்கொண்டேன், நான் ஆசைப்பட்டுக் கேட்டதை உடனே அவர், என் ஆர்வத்தைப் (பக்தியைப்) பார்த்து ஏற்றுக்கொண்டார். அவர் 'முடியாது, இது எங்களின் உரிமை மட்டும்தான்' என்று சொல்லியிருந்தால் அதில் தவறு கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் செய்தது, எனக்கு மிகுந்த திருப்தி. இப்படிப்பட்டவர்கள்தாம் கோவில் செல்லும் அனுபவத்தை நாம் அனுபவிக்கச் செய்கிறார்கள்.

      நீக்கு
    8. அதிரா - 'வாயைக் கட்டிப்போட்டு பூசை செய்வார்கள்' இதுவும் புரியலை.

      நீக்கு
    9. வாயைக் கட்டிக்கொண்டு பூஜை செய்யும் கோயில்// heard about it. But cannot remember now. :(

      நீக்கு
    10. நெ.தமிழன்//
      நப்பி என்றால்.. காசு செலவழிக்க யோசிப்போரைச் சொல்வோம்.. கஞ்சல்காரர்களை:)).

      வாயைக் கட்டிப்போட்டு பூசை செய்வது என்பது, வாயை சுற்றி வெள்ளைத்துணியால் கட்டிப்போட்டு, மந்திரம் எதுவும் சொல்லாமலேயே பூசை செய்வார்கள்.. இது இலங்கையில்தான் இருக்கிறது என நினைக்கிறேன்ன்.. அவர்கள் ஐயர் ஆட்கள் அல்ல.. சைவர்களாம்.

      நீக்கு
    11. அதிரா... நீங்கள் இதைப் படிக்க வாய்ப்பு குறைவு.

      ஒருவன் அவன் அளவில் சிக்கனமாக (அதாவது தேவையில்லாமல் காசு செலவழிக்காமல்) இருப்பதில் என்ன தவறு. கஞ்சத்தனமாக இருப்பது தவறுதான் என்றாலும் அவனைப் பொறுத்த அளவில் அவன் வாழ்க்கையை எஞ்சாய் செய்யவில்லை. அவ்வளவுதான்.

      ஆனால் 'காசு போடலைனா கவனிப்பு இல்லை' என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன். சிலர் என்னைப் பார்த்துவிட்டு 'காசு போடுவான்' என்று நினைத்தும் ஏமாந்திருக்கிறார்கள். (எனக்கு அந்த சமயத்தில் மனதில் தோன்றணும்).

      வாயைச் சுற்றி வெண்மைத் துணியால் கட்டுவது ஜைனர்களின் பழக்கம். அவங்க துறவிகள் எல்லாம் இப்படி கட்டியிருப்பாங்க. சைவர்களில் நான் அப்படிப் பார்த்ததில்லை.

      நீக்கு
    12. சே..சே.. ஒரு அந்தர ஆபத்துக்கு கொமெண்ட்டைக்கூட கொப்பி பண்ண முடியாதபடி லொக் போட்டு வச்சிருக்கிறார் துரை அண்ணன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நாம் என்ன அனைத்தையும் கொண்டு போகப்போகிறோமா.. எதுக்குத்தான் கில்லர்ஜியும் இவரும் லொக் போட்டிருக்கினமோ தெரியல்லியே.. ஹையோ கோபம் வந்திடப்போகுது:) சாமிப் பதிவு போடுவோர் கோபிக்கப்படாதாமே:)).. ஹா ஹா ஹா அதனால கோபிச்சிடாதீங்கோ .. சே.. சே.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

      நெல்லைத்தமிழன்.. நான் கொமெண்ட் போட்டால் நிட்சயம் பதில் வந்திருக்கோ என செக் பண்ணுவேன்ன்.. எப்பவும் மேலே சொன்னதுபோல டவுட் பட்டிட வேண்டாம்.. பதில் கிடைக்கவே கிடைக்காது எனத் தெரியும் இடங்களில்.. முக்கியமாக கரந்தை அண்ணன்.. அப்படி இடங்களுக்குத்தான் திரும்ப போய்ப் பார்ப்பதில்லை.. மற்றும்படி செக் பண்ணுவேன்ன்..

      கஞ்சல் தனம் என்பதற்கும் ஒரு அளவு இருக்குதெல்லோ.. தின்னாமல் குடிக்காமல் ஒரு நல்ல ஆடை அணியாமல், மனதைக் கல்லாக்கிப் பணம் சேர்த்துப்போட்டு.. டக்கென இடையில மேலே போய் விட்டால்ல்.. இந்த ஜென்மத்து வாழ்க்கையின் அர்த்தம் என்ன?.. ஒருவேளை அதுவும் முன்வினைப் பயனோ என்னவோ..எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)) ஹா ஹா ஹா.

      அவர்களுக்குப் புரியோணும், மனம் வைத்து, நல்லபடி பூஜை நடத்தினால் நம்மை அறியாமல் நம் கை பணம் எடுத்துப் போடும்.. இல்லை எனில் பணம் கொடுக்கவே மனம் வராது...

      இது ரெஸ்ரோரண்டுகளிலும் பொருந்தும், விழுந்து விழுந்து நம்மைக் கவனித்து உணவு பரிமாறினால்ல்.. நிறையக் காசு போடுவோம்ம்.. ஏனோ தானே என்பதுபோல கவனிச்சால்ல் பணம்[ரிப்] குடுக்கவே மனம் வராது...

      நீக்கு
    13. அதிரா... நீங்க சொல்வது உண்மைதான். அர்ச்சகர்கள் காசை மட்டும் கவனிக்கிறார்கள் என்றால் நமக்கு அதிகமாக பணம் போட மனது வராது (எனக்கு). சில கோவில்களில், வந்திருக்கும் எல்லோரையும் (யார் எவர் என்று எண்ணாது) கடவுள் தரிசனம் நிம்மதியாகச் செய்யச் சொல்லி அந்த இறையைப் பற்றி விளக்குபவர்களும் என்னை மிகவும் கவர்வார்கள்.

      நான் சமீபத்தில் சென்றிருந்த ஒரு கோவிலில் (உள்ளே செல்வதற்கு முன்பு டாக்சி டிரைவரும், அடுத்த பயணத்தில் ஆட்டோ டிரைவரும் என்னிடம், அவர் ரொம்ப நேரம் ஆக்கிவிடுவார்... நாம அடுத்த கோவில் போகணும் சட்டுனு வந்திடுங்க என்று சொல்லினர். அவர்கள், அர்ச்சகரிடத்திலும் போய் அப்படியே சொல்லினர்), அர்ச்சகர், இரண்டு முறையும் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு தெய்வத்தையும் அதற்குரிய பாடல் கொண்டு விளக்கி நிதானமாக தரிசனம் செய்துவைத்தார்... மூன்று சன்னிதிகளில். அப்படி அவர் சின்சியராக அவரது பணியைச் செய்யும்போது நாங்களும் அந்த அனுபவம் தந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். (திருமண்டங்குடி என்ற ஊர் கோவில் அது)

      நீக்கு
    14. கஞ்சத் தனத்திற்கான அளவு ஒவ்வொருவரைப் பொறுத்தும் மாறுபடும் அதிரா. நான் சிக்கனமாக இருக்கணும் என்று நினைப்பேன் (இரண்டு விஷயங்களைத் தவிர. அதில் ஒன்று ருசியான உணவு/இனிப்பு போன்றவை. இன்னொன்று சொல்ல மாட்டேன்... அது பெரிய கதையாகிவிடும்). என் பையன் என்னை சின்ன வயதில் 'கஞ்சூஸ்' என்பான். நான், 'அடப் போடா... நீயும் என் ரத்தம் தானே... நீயும் இப்படித்தான் பிற்காலத்தில் இருப்ப' என்று சொன்னேன்.

      இது ஜீன்ஸ்/குல வழக்கம் காரணமாக இருக்கும்னு நினைக்கிறேன். என்னை வழிநடத்திய பெரியவர்கள், 'We are custodians of money given by God and we should live a simple life' என்று சின்ன வயதிலிருந்தே சொல்லியிருப்பதாலும் அவங்க எப்படி வாழ்ந்தாங்க என்று பார்த்திருப்பதாலும் இது என் மனதில் பதிந்திருக்கு என்று நினைக்கிறேன்.

      இன்னொன்று, 'என்னதான் உருண்டு பிரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்'. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், நாம் என்ன அனுபவிக்கணும்னு தலைல எழுதியிருக்கோ அதைத்தான் நாம அனுபவிக்க முடியும்.

      பாருங்க..நான் பதின்ம வயதில் இருந்தபோது வெளிநாட்டு வாழ்க்கை அமையும் என்று நினைத்ததே இல்லை. உங்களுக்கும் வாழ்க்கை இப்படி எங்கோ அமையும் என்று தோன்றியிருக்கா?

      எல்லாம் அவன் செயல்.

      நீக்கு
  16. உண்மைதான், நம்மவர்கள் இப்போ கோயிலுக்குப் போவது குறைந்து கொண்டே வருகிறது.. முன்பு எங்கள் அம்மம்மா.. அம்மப்பா எல்லாம் குளித்து பகக்த்துப் பிள்ளையாருக்கு ஓடிப்போய்க் கும்பிட்டு விட்டு வந்தே சாப்பிடுவார்கள்.. அது எத்தனை மணி ஆனாலும்.. ஆனா இப்போ பக்தியோடும் இருக்கின்றனர், ஆனா வெள்ளிக்கிழமையில்கூட சைவமாக இருந்து கோயிலுக்குப் போக முடியாது என சொல்வோரும் உண்டு...

    இன்னுமொன்று.. கால ஓட்டத்தில் நேரமும் காணாமல் போய் விடுகிறது..

    என்னதான் விட்டில் கோயில்போல சுவாமி வைத்துக் கும்பிட்டாலும்.. கோயிலுக்குப் போய் வருவதைப்போல இருக்காது.. அது என்னமோ ஒரு சக்தி.. புத்துணர்வு கிடைக்கிறது.. அது கோயிலுக்குப் போவோருக்கே புரியும்.

    அதிலும் சனநெரிசலான கோயிலில் போய் திருவிழாக் கூட்டத்தில் முண்டியடிப்பதில் எதுவுமில்லை.. அமைதியான, இட வசதியுள்ள மண்டபம், மரங்கள் இருக்கும் கோயிலுக்குப் போய் வந்தால், அன்று முழுவதும் மனம் ஊஞ்சலாடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா-- உங்கள் எழுத்தில் உண்மை நிலையைச் சொல்லியிருக்கீங்க.

      என் பதின்ம வயதில், மாலை ஸ்கூலிலிருந்து வந்தவுடன் ஆற்றங்கரைக்குச் சென்றுவிட்டு, பிறகு கோவில், அங்கு வழிபாடு பிரசாதம் முடிந்து வீட்டுக்குத் திரும்புவோம் (எல்லோரும்). பிறகு உணவு. அப்போ வேறு பொழுதுபோக்கு கிடையாது.

      இப்போ, அம்மாவைப் பார்த்துட்டு வரணும்னா, மாஸ்டர்செஃப் எபிசோடு பார்க்க முடியாதேன்னு நினைக்கும் காலமாகிவிட்டது. கோவில்ல ஐந்து நிமிடம் மந்திரம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்கன்னா வாட்சப்பை நோண்டும் காலம்.

      கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அது கொடுக்கும் மனச் சாந்தியே தனி.

      நீக்கு
    2. எஸ் அதிரா எனக்கு கூட்டமில்லா கோயில் அமைதியான மண்டபம் மரங்கள் என்று இருந்தால் அந்த சக்தி தனிதான்...இயற்கையும் இறைவனும் ஆன கோயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்...கூடவே இப்படியான சிற்பங்கள் நிறைந்த கோயில்கள்..ஆனால் நம் கூட வருபவர்கள் சிற்பங்களையும் ரசிப்பவராக இருக்க வேண்டும்....

      கீதா

      நீக்கு
    3. டாங்ஸ் கீதா... அனைத்துக்கும் கை கோர்த்தமைக்கு...

      நீக்கு
    4. கீதா ரங்கன்... இன்னொரு இடுகையில் உங்களுக்கு பதில் சொல்லுகிறேன் (சிற்பங்கள், ரசித்தல் போன்றவை)

      நீக்கு
  17. போடும் படங்களும் நீங்கள் எடுத்ததாக இருக்கும்போதுதான், போஸ்ட் படிக்க ஆசை வருகிறது.. கூகிளில் தேடித்தகவலும் படமும் போட்டு எழுதினால், அதுக்கு எதுக்கு மினக்கெட்டுப் படிக்க வேண்டும், தேவைப்படும்போது கூகிளிலேயே தேடிக் கொள்ளலாமெ எனத்தான் மனம் எண்ணும்.. கோமதி அக்காவும் இப்படி தான் போகும்போது படமெடுத்து வந்து, இடையே மானே தேனே எல்லாம் போட்டு, சாப்பிட்டது நடந்தது குருவி பார்த்தது எனும் கதையெல்லாம் சொல்லி எழுதும்போது படிக்க ஆவல் அதிகமாகும்..

    தனியே பக்திப்பரவசம்போல கடவுளை மட்டும் எழுதினால் போறிங்காகிடும்..

    உங்கள் கடசி மூன்று வசனங்களையும் போல[மேலே போஸ்ட்டின் முடிவில் சொன்னதை] கடைப்பிடிச்சு எழுதுங்கோ..

    “புள்ள மங்கை”.. ஆவ்வ்வ்வ் எம்பாலார் கோயிலாச்சே...

    தஞ்சையம்பதியில் சங்கமித்திருக்கும் நெல்லைத்தமிழனுக்கும்.. வரவேற்று, புதிய பக்கம் ஓபின் பண்ணியிருக்கும் துரை அண்ணனுக்கும்.. வாழ்த்துக்கள்.. நல்லபடி தொடர புள்ளமங்கை அம்மனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... ராமானுசர் படம் தவிர மற்றவை நானே படமெடுத்தவைதான். நீங்கள் சொல்ற மாதிரி இணையத்துல தேடி படத்தை எடுத்துப் போட்டால் அதில் பெர்சனல் டச் இருக்காது.

      நீங்க சொல்லற "என்னா புள்ளை... என்னைப் பாத்து சிரிக்கறாவ" ல வரும் "புள்ள"யும் இதில் வரும் "புள்ள" யும் வேறு வேறு. எந,தக் காலத்துலயோ வாங்கின "டி" சர்டிபிகேட்லாம் தூசு தட்டி வைங்க. உதவும். ஹா ஹா

      நீக்கு
    2. நீங்க "குருவி" பார்த்ததுன்னு எழுதும்போது, இந்தப் பயணத்தில் ஒரு கோவிலில் வளாகத்துல பிரசாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பலிபீடத்தின் மேலே ஒரு கலர்ஃபுல் குருவி-செம்போத்துக்கு இடைப்பட்ட பறவை உணவு சாப்பிட்டது. நான் செம்போத்து என நினைத்து படமும் சிறிய காணொளியும் எடுத்தேன்.

      நாம திருப்பதி பெருமாளை நிம்மதியா கும்பிட விடாம ஒரு வினாடில தள்ளி விடறாங்களேன்னு சொல்லுவோம். ஆனால் நம்மை சன்னிதிலேயே உட்கார்ந்துக்குங்க என்றால் அரை நிமிடம் பொறுத்து, என்ன பண்ணறது, எப்போ வெளில போகலாம்னு மனது கேட்கும்.

      முடிந்தவரை சப்ஜெக்ட் நீர்த்துப் போகாமல் எழுதப் பார்க்கிறேன். வெளிப்படையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    3. நான் இடைவெளி விடாமல் எழுதி விட்டேன் அதனால புரியுதோ தெரியாது.. நான் மேலே சொன்னது..

      கோமதி அக்கா, நேரடியாகப் படம் எடுத்து வந்து, எழுதும்போது இடைக்கிடை மானே தேனே எல்லாம் சேர்த்து, தான் பார்த்த குருவி மைனாவைப்பற்றியும் சொல்லி, சாப்பிட்ட உணவையும் சொல்லி எழுதுவா அப்போ படிக்க போறிங் வருவதில்லை என..

      ஏன் செம்போத்துவின் படத்தைப் போடவில்லை இங்கு..

      ஊசிக்குறிப்பு:
      நெல்லைத்தமிழன்... இப்படி கோயில்களுக்குப் போய் வாறவர்கள், தம் செல்பியையும் இணைப்பது வழக்கம்:)).. ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. நன்றி அதிரா . நான் எழுதும் முறை உங்களுக்கு பிடித்து இருப்பது .
      நான் சாதாரணமானவள்..

      நீக்கு
    5. ஆமாம் கோமதிக்கா ஹைஃபைவ் வித் அதிரா....கோயில் என்றாலும் கூடவே இயற்கையும் கலந்து கட்டி இருக்கும்....அக்காவின் பதிவுகளில்..

      கீதாக்காவும் ரிவர் படம் எல்லாம் போடுவாங்க...ஊருக்குப் போற வழி என்று....

      துரை அண்ணாவுக்கும், நெல்லைக்கும் வாழ்த்துகள்.

      இப்படி விருந்தினர் (நெல்லையின்) பதிவு போட தளம் கொடுத்த துரை அண்ணாவுக்கும் பாராட்டுகள்...தலைப்பும் அருமை அண்ணா..

      எபியில் கே வா போ, திங்க போல!!!! கலக்குங்க!! ரெண்டு பேரும்

      கீதா

      நீக்கு
    6. கீதா ரங்கன்... முதலில் எனக்கு அவருக்கு எழுத தயக்கமா இருந்தது (காரணத்தையும் ஓபனா சொல்லிடறேன். நான் பஹ்ரைனில் இருந்தபோது குவைத் வழியாக பயணப்படும் வாய்ப்பு கிடைத்தது. துரை செல்வராஜு சார் ஏற்கனவே கில்லர்ஜியை சந்தித்திருப்பதால் (அபுதாபியில்), நானும் வாய்ப்பிருந்தால் குவைத்தில் துரைசெல்வராஜு சாரை சந்திக்கலாம் என நினைத்தேன். ஆனால் அவர் எழுதிய மெயிலில் அவரது காண்டாக்ட் நம்பரைத் தரவில்லை, வெறும்ன 'மகிழ்ச்சி' என்று எழுதியிருந்தார். அதனால்தான் அவர் நம்பரைக் கேட்க பிறகு எப்போதுமே தயக்கம். மெயில் எழுதவும் முதலில் தயங்கினேன்.. ஹா ஹா)

      நீக்கு
    7. ஹா ஹா ஹா ம்கிழ்ச்சி!!!.. ரஜனி அங்கிள் படம் பார்த்த மூட் ல இருந்திருப்பார்போலும் துரை அண்ணன்:)).

      நீக்கு
  18. ஆஹா,... அருமையான தொடக்கம். கும்பகோணம் பகுதி கோவில்கள் சிலவற்றை ஆவது நின்று நிதானமாக பார்க்கும் ஆவல் உண்டு. திருச்சி காவிரி ஆற்றின் இரு கரையிலுள்ள கோவில்கள் பல உண்டு. திருவரங்கத்தில் கொள்ளிடக் கரையில் கூட ஒரு திருவரசு உண்டு.

    சிறப்பாக தொடங்கி இருப்பது மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம். உடம்பில் சக்தியும் ஆயுளும் ப்ராப்தமும் இருக்கணுமல்லவா?

      கொள்ளிடக்கரை திருவரசு... மனதில் குறித்துக்கொண்டேன்.

      நீக்கு
  19. அன்பு முரளி, உங்கள் எழுத்து, படிக்கப் படிக்க அருமை.
    கோவில் தரிசனங்கள் நீடிக்கட்டும் . அதே போல அருமையான படங்களோடு விளக்கமும்
    கொடுத்து
    அருமையாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.
    திருவரசு பற்றிப் பேசும்போது , ECR சாலையில் ஸ்ரீ ஆளவந்தார் திருவரசு
    அமைந்திருப்பத்டைப்
    பார்த்த நினைவு வருகிறது சாலியின் இடது புறம் கடற்கரையை
    ஒட்டி இருக்கும். அதாவது மஹாபலிபுரத்துக்குப் போகும் வழியில்.
    இங்கு கோவில்களில் கைகளில் குங்குமம் தருவது வழக்கம் இல்லை.
    குங்குமமோ விபூதியோ கிண்ணங்களில் வைத்திருப்பார்கள்.
    மஞ்சள் காப்பு கூட அப்படித்தான்.
    அர்ச்சகர் தட்டில் போடும் வழக்கம் இல்லை. உண்டியலில்
    போடவேண்டியதுதான்.
    விஸ்வரூப தரிசனம் விவரம் அருமையாக இருந்தது.
    மனம் நிறை வாழ்த்துகள். உடலில் தெம்பிருக்கும் போதே
    போய் வரவேண்டும். இது சத்தியமான உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா.... படங்கள் பதிவேற்றுவது சிரம்மாக இருக்கக்கூடாது என்று 50% குவாலிட்டியை குறைத்து அனுப்பினேன்.

      அங்கு இதையெல்லாம் உன்னிப்பாக்க் கவனித்து கோவில் சுத்தத்திற்கும் சவுகரியத்துக்கும் முன்னுரிமை கொடுத்திருப்பார்கள்.

      வரலாற்றின் பிரகாரம் ஆளவந்தார் மறைந்தது திருவரங்கத்தில் அல்லவா? அங்குதானே இராமானுசர் சென்று, ஆளவந்தார் மறைந்த சில மணித்துளிகள் சென்றுதான் தரிசிக்க நேர்ந்தது? மேலும் விவரங்கள் நினைவடுக்கிலிருந்து தாருங்கள். மிக உபயோகமாக இருக்கும்.

      நீக்கு
  20. ஓ! பதிவு நெல்லைத் தமிழனின் பதிவா. முதலில் டக்கென்று புரியவில்லை. தஞ்சையம்பதியில் துரை ஐயாதானே என்பதால். அப்புறம் புரிந்து கொண்டேன். நெல்லைத் தமிழன் மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள். விவரணம் அருமை.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு கோயில்களுக்கும் பல வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன். பாத யாத்திரையாக. நான் மட்டுமே. படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன. தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார். மௌபைல்ல பதில் எழுதுவதால் தவறு நேரிடலாம்.

      நீங்க வந்தது மிக்க மகிழ்ச்சி. இணையத்துல பழக்கம் ஏற்பட்டாச்சுனா, கேரள வெள்ளம்போல் அசம்பாவிதம் ஏற்படும்போது, நம்ம ஆளு பத்திரமா, அவரைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பில்லையான்னு தோணிக்கிட்டே இருக்கும். கேரள வெள்ளத்தின்போது உங்களைப்பற்றி பலமுறை நினைத்தேன்.

      சரியான டாபிக்குக்கு நீங்களும் வந்திருக்கீங்க. கோவில்களில் சிலர் பக்தர்களை ட்ரீட் செய்யும் விதம். உங்கள் அனுபவத்தோடு ஒரு இடுகை வெளியிடுங்க.

      நீக்கு
  21. நெல்லை சூப்பர் தொடக்கம்....ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க. மீக்கு எல்லா கோயிலும் ஒன்றே...எல்லாத்துலயும் ஒரே இறைவனே...அது தெருவீதிக் கோயில் என்றாலும் பெரிய கோயில் என்றாலும்...

    கூட்டம் இல்லா கோயில் எனக்கு மிக மிக மிகப் பிடிக்கும்....

    நான் சொல்ல வந்த கருத்துகல் பல அமுதசுரபி சொல்லியிருப்பது போலத் தெரியுது ஸோ அந்த இடத்திற்கு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச் சொல்லியிருக்கீங்க கீதா ரங்கன்.

      சமீபத்துல ஒரு ஜோசியரிடம் எந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகணும்?, நங்கநல்லூர், நாமக்கல் இதெல்லாம் கேட்டதற்கு, பக்கத்தில் உள்ள கோவிலைவிட்டுவிட்டு இன்னொரு கோவிலைத் தேடக்கூடாது, எங்கும் ஒரே ஆஞ்சநேயர்தான் என்றார்.

      அதுதான் எனக்கு நினைவு வந்தது

      நீக்கு
    2. முற்றத்து மல்லிகை வாசம் இல்லை என்பதைப்போல இருக்குமோ?:) பக்கத்துக் கடவுள், வரம் குறைவாத்தருவார் எனும் நினைப்பு:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. "முற்றத்து மல்லிகை வாசம் இல்லை" - அருமையான வாக்கியம். பொதுவா நாம நினைப்பது, அந்த ஃபேமஸ் கோவிலுக்குப் போவோமே என்று. கடவுள் எல்லாக் கோவிலிலும் ஒருவரே என்ற எண்ணம் நமக்கு மறந்து போகிறது.

      நீக்கு
  22. செம படங்கள் நெல்லை அதுலயும் தஞ்சை பெருவுடையார் கோயில் கோபுரம் அட்டகாசம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை. நானும் மனைவியும் இருந்த இதே மாதிரியான படத்தை அட்டாச் பண்ணலை. ஹா ஹா (அப்புறம் பூசார் என்னைக் கலாய்த்துவிடுவார் அங்கிள் என்று- நேர்ல 15 வயசாவும் படத்துல 51ஆவும் தெரிவேன்னு சொன்னேன்)

      நீக்கு
    2. தஞ்சை பெரிய கோவில் செல்லும்போது அதன் ப்ரம்மாண்டம், ராஜராஜ சோழன் அங்குதான் உலாவினான் என்ற நினைப்பு, நம் முன்னோர்களின் சிற்ப கட்டிட கலை அறிவு இதெல்லாம் நினைத்து மனது சிலிர்த்தது

      நீக்கு
    3. நீங்க கெட்டித்தனமாத்தான் மூவ் பண்ணுறீங்க நெ.தமிழன்:)).. முதல்ல பெயர் சொல்ல வச்சுப்போட்டு பின்பு படம் காட்டும்போது சரி சரி இனி எப்படி மாற்றுவது:).. அப்படியே கூப்பிடுவோம் எனும் முடிவுக்கு வந்திடுவோம்ம்.. ஹா ஹா ஹா.. என்னது 51 ஆ?:) இல்லையே.. போன தடவை எங்கோ பார்த்தனே.. பிறந்ததிலிருந்து இந்த 60 வருசமா என வாய் மாறிச் சொலியிருந்தீங்க ஹா ஹா ஹா.. விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை.. சரி சரி ரென்ஷனாகிட வேண்டாம்.. கோபு அண்ணனைக் கேட்டால் ஜொள்ளிடப்போறார்ர்.. அவ்வ்வ்வ்வ்வ் கோர்த்து விட்டாச்சூஊஊ ஹா ஹா ஹா:)).

      நீக்கு
    4. கோபு சார் தானே.... சொல்லிட்டாலும்....

      அவரே, அவர் வயசு 25னு யார் கிட்டயும் சொல்ல முடியலையே... ஒவ்வொரு இடுகையிலும் தன் படம்லாம் போட்டு ஆதியோடு அந்தமா எல்லாக் கதையும் எழுதிட்டோமே என்று உள்ளூர வருத்தமா இருப்பார்.

      ஒரு நாள் படத்தைப் போட்டுடுவோம். அப்புறம் அதைப் பார்த்துட்டு, உங்க வயசை இன்னும் குறைத்துச் சொல்லக்கூடாது (இவருக்கே இந்த வயசுன்னா நமக்கு இன்னும் கொஞ்சம் கொறைச்சுப்போம்னு)

      நீக்கு
  23. முதல்படம் தாராசுரம் படம் செம அதுவும் அட்டகாசமா இருக்கு நெல்லை.

    ஸ்ரீராம் கூட போட்டிருந்தாரே இல்லையா இந்தக் கோயில் படங்கள்...இன்னும் போடுவீங்கதானே படங்கள். அங்கு சிற்பக்கலை அருமையா இருக்குமே..அதான் கேட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனையும் கவர் பண்ணறேன். ஆனால் அதிரா அதனை புராண இதிகாச பதிவுன்னு நினைக்கக்கூடாது

      நீக்கு
    2. சே..சே.. என்ன இது?:), கம்பராமாயணத்துக்கும் மகாபாரதத்துக்கும் வித்தியாசம் தெரியாதோ எனக்கு:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  24. அழகாகவும் நன்றாகவும் சொல்லி இருக்கிறீர்கள். வைணவக் கோயில்கள் பத்திச் சொல்கையில் அங்கே வைணவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் சொல்லி இருக்கலாமோ? :)))) திருவாலி, திருநகரி போயிட்டுப் பாடாய்ப் பட்டோம்! :( அதே நவ திருப்பதியில் நன்றாக இருந்தது. நன்கு கவனித்தார்கள். ஶ்ரீமுஷ்ணத்தில் தலவரலாறு கேட்டப்போ பட்டாசாரியார் உனக்கு எதுக்கு அதெல்லாம் என்று சொல்லிவிட்டார்! :( பின்னர் தினமலர் மூலம் அறிந்து கொண்டேன். இப்படி நிறைய எழுதலாம் கோயில்கள் பற்றிய அனுபவங்களில். கூடியவரை தேவையானதை மட்டுமே தர வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை மொபைல்ல விளக்கமா தருவது கஷ்டம். கண்டிப்பா இந்தக் கேள்விக்கு பதிலளிப்பேன்.

      எனக்கும் இத்தகைய அனுபவங்கள் உண்டு.

      வைரத்தை பொட்டில அடுக்குகிற வேலைக்காரனுக்கு வைரத்தின் மதிப்பு தெரியுமா? கடவுள் சன்னிதியில் அளவுகோல் பக்தி ஒன்றே. வேறு எதுவும் கிடையாது.

      திருப்பாணாழ்வாரை, ஆழ்வார்களை குருபரம்பரையாக்க் கொண்டவர்களின் அளவுகோல், பக்தி மட்டும்தான் இருக்கணும் இருக்க முடியும். மற்றவர்கள் வைரத்தையும் கரியையும் பிரித்தறிய முடியாதவர்கள்

      நீக்கு
    2. கீதா சாம்பசிவம் மேடம்... 1990ல், என்னுடைய மேனேஜரை மயிலாப்பூரில் பார்க்கச் சென்றிருந்தேன் (அவர் ஐயர்). அவர் சொன்னார், மயிலாப்பூரில் உள்ள வைணவக் கோவிலைக் குறிப்பிட்டு, அங்கு சென்றிருந்தபோது தீர்த்தம் அவருக்கு அடுத்து இருந்தவருக்குக் கொடுத்துவிட்டு, இவரை விட்டுவிட்டு அதற்கப்புறம் தொடர்ந்தார் என்று சொன்னார்.

      எனக்கும் (ஹா ஹா) சில வைணவக் கோவில்களில் இந்த அனுபவம் உண்டு. 1990களில், திருப்பதி கோவிலில் பிரசாதம், தீர்த்தம் தரும் இடங்களில் சில சமயங்களில் எனக்குத் தனிச் சலுகையை பெற்றுக்கொண்டு வெட்கப்பட்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு, சில கோவில்களில் நான் பாசுரம் சொல்லக்கூடாது என்று தடுக்கப்பட்டிருக்கிறேன். நான் தைரியமாக, 'நீங்கள் செய்வது தவறு' என்று சொன்னேன். அவர்கள் ஒத்துக்கொண்டு, ஆனாலும் நீங்கள் இங்கு சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டனர். பிறகு, அங்கிருந்த பெரியவர், அவருக்குக் கொடுத்த பிரசாதத்தையும் என்னைக் கூப்பிட்டுக் கொடுத்தது தனிக் கதை.

      இரு வாரங்களுக்கு முன்பு, வைணவக் கோவில்களின் தரிசனத்திற்கு இடையில் ஒப்பிலியப்பன் கோவிலுக்கு ச்ரவண விசேஷத்துக்காகச் செல்வதற்கு சற்று முன்பு, திருவிடைமருதூரில் மஹாலிங்கரை தரிசனம் செய்தேன். பிரசாதமா விபூதி எடுத்துக்கொள்ளவில்லை. அப்புறம் ஒப்பிலியப்பன் கோவிலுக்குச் செல்லணும் என்பதால். சிவன் கோவில் அர்ச்சகரும் அதனைப் புரிந்துகொண்டார். இதைப் பற்றி பிறகு எழுதறேன்.

      அதனால் நீங்கள் எழுதியது நடந்திருக்கும். அது த வ று. இதில் இருவேறு அபிப்ராயம் இருக்க முடியாது.

      நீக்கு
  25. அர்ச்சகர்களுக்குப் பணம் கொடுத்து தீபாராதனையும் பிரசாதமும் பெறுவதைப் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். பெரும்பாலான கோயில்களில் நடப்பது இதுவே! வேலூர் ஶ்ரீபுரம் தங்கக் கோயில் போயிருந்தப்போ அங்கே அறிவிப்பே காணப்பட்டது. பணம் கொடுத்தவர்கள் மட்டும் ஶ்ரீபுரம் சந்நிதிக்கு அருகே வந்து தரிசித்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் செல்லலாம் என்று. மற்றவர்கள் சுமார் 50 அடியாவது தள்ளி நின்று தான் தரிசிக்க வேண்டும். சந்நிதியில் கொடுப்பது குங்குமப் பிரசாதம். சாப்பிடும் பிரசாதமாகவும் கலந்த சாத வகைகள் கொடுக்கிறாங்க. ஆனால் அதற்கு ஏகமாய்க் கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள். நாங்க வாங்கவே இல்லை. வந்துட்டோம். )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்றவர்கள் சுமார் 50 அடியாவது தள்ளி நின்றுதான் தரிசிக்கணும்// - பரவாயில்லை. இறைவன் அங்கு இங்கு என்றில்லாமல் எங்கும் இருப்பவன். அவனுக்கு 50 அடி தூரம் ஒரு பொருட்டா?

      துயின்றுகொண்டிருந்த கண்ணனின் தலைமாட்டில் வந்து அமர்ந்துகொண்ட துரியோதனனுக்கு கண்ணனின் முதல் பார்வையா இல்லை காலடியில் வந்து அமர்ந்த தர்மனுக்கு முதல் பார்வையா?

      கோவிலின் வருமானத்துக்காக இந்த மாதிரி சிலவற்றை கோவில் நிர்வாகிகள் செய்கிறார்கள். அதனால் என்ன.

      எனக்கு 'கட்டுப்பாடுகள்', 'சட்டதிட்டங்கள்'னாலே அந்த மாதிரி போய் எதையும் வாங்கமாட்டேன். இலவசமா எதையுமே வாங்கிக்கமாட்டேன். இறைவன் சன்னிதியில் வருபவர்களுக்குக் கொடுப்பது அவனுடைய பிரசாதம். அதில் வேறுபாடு பார்த்து கொடுப்பவர்களை என்ன சொல்ல?

      நீக்கு
  26. சரித்திரப்பிரசித்தி பெற்ற கோயில்களில் வழிபாடுகள் இல்லாமல் இருந்தது தஞ்சைப் பெருவுடையார் கோயிலும், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலும். மிகச் சமீப காலங்களிலேயே அவற்றில் வழிபாடுகள் ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே கொஞ்ச நாட்களுக்கு நாம் தரிசிக்கையில் அதன் பிரம்மாண்டம் மட்டுமே மனதில் படும். முதல் முதல் எண்பதுகளில் பார்த்தப்போ அதை ஒரு தொல்லியல் சின்னமாகத் தான் பார்த்தோம். அதன் பின்னரே மராமத்துப் பணிகள், திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேஹமும் செய்யப்பட்டு வழிபாடுகளும் ஆரம்பிக்கப்பட்டன. வேலூரிலும் சமீப காலத்தில் தான் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே அதன் சாந்நித்தியம் நமக்குத் தெரியவும், புரியவும் கொஞ்ச காலம் எடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதா சாம்பசிவம் மேடம்.

      நான் இருமுறை சென்றிருந்தபோதும், அதனைச் சரித்திரச் சான்றாகவே கண்ணுற்றேன். இந்த முறை சென்றிருந்தபோது மறக்காமல் ராஜராஜ சோழன் சிலையை, சன்னிதியின் முன்பாக வைத்திருப்பதைப் போய்ப் பார்த்தேன் (படமெடுத்துக்கொள்ள அனுமதிக்கலை)

      நீக்கு
  27. தஞ்சைக்கோயில் பெருவுடையாரை மகுடாகமம் முறையில் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். அதைப் பற்றிச் சொல்லப் போனால் பெரிதாக ஆகிவிடும். ஆனால் தஞ்சைக் கோயிலும் ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயிலே என்பதற்காகச் சொன்னேன். அதுல் சூக்ஷ்மமான பல விஷயங்கள் இருக்கின்றன. ராஜராஜசோழன் அதைக் கட்டி முடித்துவிட்டு சிவபாத சேகரன் என்னும் பெயரில் துறவறம் ஏற்று யோக முறைப்படி உயிரை விட்டதாகச் சொல்வதுண்டு. இது குறித்துப் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை பெருவுடையார் கோவிலும் வழிபாட்டுக்கானதுதான். இடையில் பல காலம் வழிபாடுகள் நடக்கவில்லை என்றபோதும்.

      ராஜராஜ சோழன், தன் அரச பதவியை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டு ஒதுங்கி இருந்தான் என்றுதான் படித்துள்ளேன். அவனது பள்ளிப்படை, உடையாளூரில் இருப்பதுதான் என்று எனக்கு அந்த கைடு சொன்னார். அங்கு மண்டபம் கட்ட முயற்சி எடுக்கிறார்கள் என்றார்.

      பலர், ராஜராஜ சோழனுக்கு பெரிய பள்ளிப்படை எடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர். அப்படி எடுத்திருந்து, அதனை எதிரிகள் அழித்துவிட்டனரோ என்னவோ. இந்த முறை அங்கு செல்லவில்லை. அடுத்த முறை நிச்சயம் செல்வேன் (தனியாப் போனால். ஹா ஹா. இப்போவே பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக்குக் கூட்டிக்கொண்டு போனதற்கு அவளுக்கு இஷ்டமே இல்லை)

      நீக்கு
    2. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக்கோயில் நாங்களும் போனதில்லை. சென்னையில் வரும்போதெல்லாம் கும்பகோணத்தில் 3 நாட்களாவது தங்கும்படி இருக்கும். இப்போல்லாம் காலை கிளம்பிப் போயிட்டு மதியமே திரும்புவதால் வேறே எங்கும் செல்லும்படி நேரவில்லை. இதற்கு எனப் போய்த் தான் பார்க்கணும்.

      நீக்கு
    3. கீதா சாம்பசிவம் மேடம்... அப்படி வாய்ப்பு வந்தால் சொல்லுங்க. நான் எந்த எந்தக் கோவில்களைப் பார்க்கலாம் என்று சொல்றேன். மனைவியோட போனபோது ஆட்டோலயே கோவில்கள் தரிசனம் ஆச்சு. அதற்கு முன்பு நான் மட்டும் போயிருந்தபோது காரில் எல்லாத் தலங்களையும் சேவித்தேன்.

      சென்றமுறை (இந்த முறையும்தான்) நான் மிஸ் பண்ணியது, பழையாறை கோவில். அங்கு சென்றும், அது பாடல் பெற்ற தலம் என்பதை அறியவில்லை.

      நீக்கு
    4. நான் போனவற்றுக்கு ஒரு பட்டியல் தரேன். பார்க்காத கோயில்களை நீங்க சொல்லுங்க. பழையாறை நிச்சயமாப் போகலை! :)))) அதே போல் நந்திபுர விண்ணகரமும் போகலை! இப்போ வேறே பேரிலே இருக்குனு நினைக்கிறேன். சரி பார்க்கணும். :)

      நீக்கு
    5. அருள்மிகு சோம கமலாம்பிகை உடனுறை சோமநாதஸ்வாமி கோவில், கீழப்பழையாறை - பாடல் பெற்ற தலம். அதற்கு எதிர் சாலையில் திவ்யதேச கோவில்களில் ஒன்றான ஜெகன்னாதப் பெருமாள் கோவில், நந்திபுர விண்ணகரம் (இப்போது நாதன் கோவில்).

      நீக்கு
  28. இந்தப்பதிவு வந்திருப்பதே தெரியலை. இப்போத் தான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நீங்க பிஸியா இருக்கீங்கன்னு நினைத்தேன். சில சமயம் தொடர்ந்து சில நாட்கள் நீங்கள் இணையத்துக்கு வராமல் இருந்தது உண்டே.

      நீக்கு
    2. இப்போ இரண்டு, மூன்று வருஷங்களாகத் தான் இணையத்திற்கு வர முடியாமல் போகிறபடி ஆகிறது. முன்னெல்லாம் தினம் ஒரு பதிவானும் போட்டு விடுவேன். :))))) மறுபடி 2,3 நாட்கள் வர முடியாமல் போகும். பின்னர் ஞாயிறு அன்று தான் வருவேன், :)))))))

      நீக்கு
    3. தினம் ஒரு பதிவு எழுதுறவங்களோட உழைப்பு எனக்கு வராது. அதிலும் நிறைய விஷயங்களோடு எழுதணும்னா நிறைய படிக்கணும், சிந்திக்கணும். மெஷின் மாதிரி எழுதறவங்க பலர் உலவுகிற இணையதளம். (வெங்கட், நீங்க, ஸ்ரீராம், சில சமயங்களில் தொடர்ந்து தஞ்சையம்பதில இடுகைகள் வரும், மற்றும் பலர்) நம்மால் அது முடியாது சாமி....

      நீக்கு
  29. கோவிலைப் பற்றி விளக்கமாக, உங்கள் பார்வையில் அருமையாக உள்ளது நெ.த ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன். நேரம் கிடைக்கும்போது வாசித்து கருத்தளியுங்கள்.

      நீக்கு
  30. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் முதல் முட்டை பொரிச்சதில்.. மீதான் 100 ஆவது.. இந்தாங்கோ பூங் கொத்து.. தொடரட்டும் உங்கள் சமயப் பணி..

    https://tse3.mm.bing.net/th?id=OIP.6OrvFbqCo5-K6rwoCKT9NQHaHf&pid=15.1&P=0&w=300&h=300

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அதிரா... உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்.

      இது மாதிரி ஏதேனும் கோவிலுக்குப் போகும்போது, அங்கு இருக்கும் தெய்வம், 'அதிரா சொன்ன வைர அட்டியலை உடனே தரச் சொல்லுங்கோ' என்று என்னிடம் சொன்னால், உங்களிடம் உடனே சொல்லிடறேன்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அப்பூடி ஏதும் கேட்டால், உடனேயே நேர்த்தி வச்ச்சிடுங்கோ..
      “மொட்டை அடிப்பேன்ன்[நெல்லைத்தமிழனாகிய நான்], அதிராவிடம் அட்டியல் கேட்காதீங்கோ இப்போ” என...

      இல்லை எனில் வலையுலக சகோதரனாக இருந்தும் என்ன பயன்?:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. நாம எதுக்கு புதுசா மொட்டை அடிக்கணும்... வயது ஏற ஏற, அது தானாகவே நடந்துவிடும். ஹா ஹா.

      அதுக்காக நீங்க உங்க நேர்த்தி கடனை மறக்காதீங்க...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..