நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 18, 2019

நந்தி அலங்காரம்

தை முதல் நாள் மதியத்துக்கு மேல்
தஞ்சை பெரியகோயில் மகாநந்திக்குப் பேரபிஷேகம் நிகழ்த்தப்பட்டது...

அதன் தொடர்ச்சியாக மறுநாள் மாட்டுப் பொங்கலன்று
ஆயிரம் கிலோவுக்கும் மேல் எடையுள்ள காய்கள் பழங்கள் இனிப்பு வகைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நிகழ்ந்தது..

அதேவேளையில் -
பெரிய கோயில் வளாகத்தில் 108 பசுக்களுக்கு
கோபூஜை வைபவமும் நிகழ்ந்தது...

முன்னதாக -
தஞ்சை கீழவாசல் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலில்
தைப் பொங்கலன்று செய்யப்பட்ட மலர்ப்பந்தல்...


பெரிய கோயிலில் நிகழ்வுகளின் படங்களை
நண்பர் தஞ்சை ஞானசேகரன் வழங்கியுள்ளார்...

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...


அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழிண்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி...
-: காஞ்சிப்புராணம் :-
*
கீழுள்ள படங்களை வழங்கிய
விகடன் இதழுக்கு நன்றி..

இன்றொருநாள் மட்டும்
பசுக்களையும் ஏனைய கால்நடைகளையும்
கொண்டாடுவது என்றில்லாமல்
எந்நாளும் அவற்றை அன்புடன் பராமரித்தல்
நமக்கு நன்மை என்பதை உணர்தல் வேண்டும்..

வாழ்க ஆனினம்..
வளர்க ஆனினம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

17 கருத்துகள்:

 1. அழகிய படங்களுடன் நந்தி அலங்கார விடயங்கள் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்களுக்கு நல்வரவு..
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. அழகான படங்கள்.
  நேரில் பார்ப்பது போல் இருந்தது.
  வாழ்த்துக்கள், நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. நந்தி அலங்காரம் மிக அருமை, இன்றுதான் இப்படிப் பார்க்கிறேன், படத்தைக் கொப்பி பண்ணி அம்மாவுக்கு வைபரில் அனுப்பலாம் என வெளிக்கிட்டால் கொப்பி பண்ண முடியவில்லை கர்:)).. சமீபத்தில் அம்மா போய் இவரை நேரில் பார்த்து வந்தவ அதனாலதான்:)..

  கூகிளில் தேடி எடுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமுதசுரபியின் வருகைக்கு மகிழ்ச்சி...

   + 965 6939 2428 விரும்பினால் இந்த எண்ணை Whatsapp ல் இணைத்துக் கொள்க.. அவ்வப்போது வரும் படங்களை அனுப்பி வைக்கிறேன்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி,,

   நீக்கு
  2. என்ன நம்பரை வெளில பப்ளிஷ் பண்ணிட்டீங்க

   நீக்கு
  3. >>> என்ன நம்பரை...<<<

   ஆலயம் தொடர்பான படங்களை விரும்பிக் கேட்கிறார்கள்..

   அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி தானே!..

   நீக்கு
  4. என்ன நம்பர் அது? விகடன் குழு நம்பரா?

   நீக்கு
 4. அருமையான படங்கள். எல்லாம் நன்றாக இருக்கிறது. இந்த வருஷம் இம்மாதிரிப் பல கோயில்களின் நந்தி தரிசனம் வாட்சப் தயவால் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   தஞ்சை பெரிய கோயிலில் கடந்த சில வருடங்களுக்கு முன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சங்கராந்தி வைபவம் தற்போது மிகப்பெரிய அளவில் நடக்கின்றது..

   இந்த வைபவத்தைத் தரிசிக்க வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்திருப்பதாக அறிய முடிகின்றது....

   இந்த வருடம் திருஐயாறு திருக்கோயிலில் நந்தியம்பெருமானுக்கு காய்கறி அலங்காரம் செய்திருக்கின்றார்கள்..

   மேலும் பல்வேறு திருக்கோயிலிலும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்...

   இதையெல்லாம் விட - வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் நாட்டுப் பசுக்களை வளர்க்க முன்வரவேண்டும்...

   அதற்கான மனோநிலை மக்களுக்கு உண்டாக இறைவன் அருள்புரிய வேண்டும்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 6. நிறைய படங்கள் வாட்சப்பில் வந்திருந்தன. இடுகை நல்லா இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ. த.,

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அழகிய படங்கள். அழகிய அலங்காரம். குட் மார்னிங்.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் மிக அழகு. தரிசனமும் கிடைத்தது. மிக்க நன்றி ஐயா

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..