நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 19, 2019

நாட்டு மக்களுக்கோர்..

சில தினங்களுக்கு முன் ஒரு ஆனந்த அதிர்வு...

வலையுலகில் நமக்கெல்லாம் அறிமுகமானவர்... நல்ல மனிதர்...

நட்புறவுள்ள தளங்கள் தோறும் மனதார கருத்துரைகளுடன்
மேலதிகத் தகவல்களையும் வழங்கி உற்சாகப்படுத்துபவர்..

அவரிடமிருந்து மின்னஞ்சலில் ஒன்று..

உங்களது தளத்தில் எனது - ....

இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!...

கரும்பு தின்பதற்குக் கூலியா.. ஆகா என்னே நான் பெற்ற பேறு!...

- என்று , என்னை நானே பாராட்டிக் கொண்டேன்...ஆக, 

இனிமேல் நமது தளத்தில்
விருந்தினர் பக்கம் எனும் பெயரில்
அவ்வப்போது நண்பருடைய பதிவுகளும் வெளியாகும்
என்பதனை - மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

அவங்க யாருன்னு பேர் சொல்லக் கூடாதா!...

பேரா முக்கியம்?..
அவர் தரும் சீர் அல்லவா முக்கியம்!..

என்னது?.. அல்வா... வா!...

அல்வா.. வா?..
அல்லவா..ன்னு தானே போட்டிருக்கேன்!..இதன்படி நாளைக்கு அவர்களது
முதல் பதிவு வெளியாகும்....

அதன்பின் அவ்வப்போது
விருந்தினர் அளிக்கும் விருந்து!..

தமிழன்பர்கள் அனைவரும் வழக்கம் போல
இருகரம் நீட்டி வரவேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...


அதெல்லாம் சரி...
எழுதப் போறது யாரு..ன்னு சொல்லலையே!..
 
வாழ்க நலம்
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. பதிவர்களுக்கு நெல்லைத்தமிழர் அல்வா கொடுக்கப்போகிறாரா ?

  மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்ன புது விஷயம்? தஞ்சையம்பதிலயே ஆண்டவர் அல்வா கடை (திருவையாறு) இருப்பதை தேவகோட்டையார் தெரியாததுபோல இருப்பது ஏனோ?

   நீக்கு
  2. அன்பின் ஜி...

   தங்களுக்கு நல்வரவு..

   இருந்தாலும்

   நெல்லைத் தமிழர் தான் அல்வா தர வேண்டுமா!..

   மற்றவர்கள் தரக்கூடாதா?..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. நல்ல செய்தி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நெல்லை கொடுக்கப் போகும் அல்வாவுக்குக் காத்திருக்கேன். நல்வரவு.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

  ஆனாலும் நெல்லையார் தான் அல்வா தரப்போகிறார் என்று யார் சொன்னது?..

  பதிலளிநீக்கு
 6. வாவ்வ்வ் - அல்வா——திருநில்வேலி—— நெல்லைத் தமிழன்—- சமீபகால சுற்றுலா——தஞ்சையம்பதி—— நேயர் பக்கம்——- அதிராட கொமெண்ட்டும்:) ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா “இதோ பெல் அடிச்சுட்டாங்க. கிளாஸுக்கு போகணும்” அப்படீன்னு எழுதாம சமீப காலங்களில் போட்ட பின்னூட்டம் இதுதான்

   நீக்கு
  2. ஹா ஹா ஹா திங்கள் செவ்வாயில் மட்டும், கட்டாய பெல் அடிக்குமே:)) ஏனைய நாட்கள் எனில் சொய்ல வரும்:))..

   நீங்க ஏன் ஒரு புளொக் திறக்கக்கூடாது நெல்லைத்தமிழன்?.. குயிலைப்போல வாழ நினைக்கிறீங்க ஹா ஹா ஹா:)).

   நீக்கு
 7. காத்திருக்கிறேன் என்று நான் சொல்லமுடியாது! ஏனெனில் அவரது முதல் பதிவை படித்த பின்னரே இந்தப் பதிவுக்கு வந்திருக்கிறேன். ஹா... ஹா.. ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஸ்ரீராம் அதே அதே அதைப் பார்த்த பின்னரே இங்கு நானும் வந்தேன்....

   கீதா

   நீக்கு
 8. துளசி யார் என்று யோசிப்பதாகச் சொல்லி ஆனால் கருத்துகள் நெல்லை என்று சொல்லியிருப்பதால் நெல்லைத்தமிழனாக இருக்குமோ என்று கருத்து அனுப்பியிருந்த துளசியின் கருத்தை நான் இங்கு இபப்டிக் கொடுத்துட்டேன்..ஹிஹிஹி ஏன்னா சஸ்பென்ஸ் போயிருச்சே மீக்கு..அதான்

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..