நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 02, 2022

செஞ்சேவல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை 19
திங்கட்கிழமை
வளர்பிறை
இரண்டாம் நாள்
கார்த்திகை நட்சத்திரம்


ஸ்ரீஅருணகிரிநாதர் 
அருளிச் செய்த
வேல் மற்றும் மயில் விருத்தங்களில்
இருந்து சில திருப்பாடல்களை
கடந்த சில நாட்களில்
கண்ணுற்றபடிக்கு
இன்றைய பதிவில்
சேவல் விருத்தப் பாடல்..

அம்பா, துலா, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி,நிதர்த்தனி
- எனும் அறுவரின் அரவணிப்பில் வளர்ந்த
அறுமுகச் செல்வனின்
மலரடி போற்றி வணங்கி வாழ்த்துவோம்..

இத்திருப்பாடலிலும்
ஸ்ரீ நரசிங்கப் பெருமானின் திருத்தோற்றத்தினைப் பேசுகின்றார் அருணகிரிநாதர்.. சிந்தித்து மகிழ்க..


பங்கமா கியவிட புயங்கமா படமது
   பறித்துச் சிவத்தருந்திப்

பகிரண்ட முழுதும் பறந்துநிர்த் தங்கள்புரி
   பச்சைக் கலாப மயிலைத்

துங்கமா யன்புற்று வன்புற் றடர்ந்துவரு
   துடரும் பிரேத பூதத்

தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
   துண்டப் படக் கொத்துமாம்


மங்கையா மளைகுமரி கங்கைமா லினிகவுரி
   வஞ்சிநான் முகிவராகி

மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
   மகிழ அமுதுண்ட பாலன்

செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னுநர
   சிங்கமாய் இரணியனுடல்

சிந்தஉகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
   சேவற் றிருத் துவசமே..
*

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா..
***

28 கருத்துகள்:

 1. நாளை ஒரு முயற்சி.   வெற்றி பெற வெற்றிவேல் முருகன் அருள்புரியவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம்..
  தங்களுக்கு நல்வரவு..

  வேலும் மயிலும் துணையாகும்..
  நாளும் பொழுதும் நலமாகும்..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 3. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஜி..

  தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இன்றைய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானின் அழகான படங்களை தரிசித்துக் கொண்டேன். ஐந்து முகமும் எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ ஓதிமலை ஆண்டவரை வணங்கிக் கொண்டேன். வேலும், மயிலும் நாளும் துணையாக வர வேண்டும். மால் முருகன், அழகிய வேலவன் அனைவரையும் அன்புடன் காத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   முருகன் அருளால் எங்கும் நலம் விளைந்திட வேண்டிக் கொள்வோம்..

   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வேலும் மயிலும் துணை நின்று ஶ்ரீராமின் முயற்சி வெற்றி பெற அருளட்டும். ஓதிமலை ஆண்டவரை இன்றே பார்க்கிறேன். அதே போலக் கார்த்திகைப் பெண்களின் பெயர்களையும் உங்கள் மூலமாக அறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வேல் விருத்தம் - கிட்டத்தட்ட திருப்புகழ் போல ரிதத்துடன் வருகிறது இல்லையா. ஒலி அமைப்பு சொன்னேன்.

  படங்களும் விவரங்களும் சிறப்பு. விருத்தங்களை ரசித்து வாசித்துக் கொண்டேன் துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 8. என் கருத்து எங்கே போயிற்று? ஆ! மீண்டும் அடிக்க வேண்டுமே.

  அருணகிரிநாதரின் வேல் விருத்தமும் திருப்புகழ் போல ஒரு ரிதம் அதாவது ஒலி அமைப்புடன் இருக்கிறது இல்லையா? துரை அண்ணா?. படங்களும் விவரமும் நன்று

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   திருப்புகழ், வேல், மயில், சேவல் விருத்தங்கள் எல்லாமெ சந்தத்தில் அமைந்தவல்.. பதம் பிரித்து பொருள் உணர்ந்து விட்டால் தமிழ் அமுதம் தான்..

   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. இதுக்கு நான் கொடுத்த கருத்து வெளியாகலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆனால் எனக்கு மற்றவர்களின் கருத்துகள், பதில்கள் வருகின்றன. எங்கே போச்சு என்னோட கருத்து? :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட, ஆமாம்.  அதில் எனக்கும் வாழ்த்து சொல்லி இருந்தீர்கள்.  எனக்கு மெயிலில் பார்த்தேன்.  இங்கு வந்து பார்த்தால் காணோம்.

   நீக்கு
  2. ஶ்ரீராம், ஆமா இல்ல, உங்கள் புது முயற்சி வெற்றி பெற வாழ்த்தி இருந்தேன். இப்போத் தான் நினைவில் வருது. அது எனக்கு மெயிலில் கூட வரலையே! என்ன ஆச்சு?

   நீக்கு
  3. அது என்ன புது முயற்சி?..

   வாழ்க வளமுடன்..

   நீக்கு
 10. ஓதி மலை ஆண்டவர் குறித்து ஏதோ சொல்லி இருந்தேன். நினைவில் வரலை இப்போ! நல்ல பகிர்வு. வெற்றி வடிவேலன் வேலால் அனைவரது வினையும் தீரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 11. சேவல் விருத்தபாடல் பகிர்வுக்கு நன்றி.
  முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு
 12. வடிவேலன் நம் அனைவரின் நலத்திற்கும் துணை புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 13. நல்லதே நடக்கட்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  பதிலளிநீக்கு
 14. இரண்டு முறை கருத்துரைத்த போதும் இங்கே வெளிவரவில்லை. :(

  பதிலளிநீக்கு
 15. இரண்டு முறை கருத்துரைத்த போதும் இங்கே வெளிவரவில்லை. :(

  பதிலளிநீக்கு
 16. நல்லதே நடக்கட்டும்...... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடைய எல்லா கமெண்ட்ஸும் என் மெயில் பாக்சில் பார்த்தேன்!

   நீக்கு
  2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்....

   வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..