நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தஞ்சை வெண்ணாற்றங்கரை ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் உடன் உறையும் ஸ்ரீ மணிக் குன்றப் பெருமாள் திருக் கோயிலில் கடந்த சனிக் கிழமை சித்திரை 24 (7/5) அன்று மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு
காலையில் யாக பூஜையும் திருமஞ்சனமும் மாலையில் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது..
நிகழ்வின் இரண்டாம் பகுதியான திருக்கல்யாண வைபவம் இன்றைய பதிவு..
இப்படியான நிகழ்வுகளில் தஞ்சையம்பதி தளத்தின் அன்பு உறவுகள் எல்லாரும் கலந்து கொள்வதாக பாவித்து நிகழ்வுகளைப் படமெடுத்து தளத்தினில் பதிவு செய்கின்றேன்..
பதிவினில் பிழை இருப்பின் பொறுத்துக் கொள்ளவும்.. நன்றி..
**
மாமலர் மங்கையுடன் நின்றான் தன்னை
பூமகள் உடனாய புனிதன் தன்னை
கோமளன் கோகுலன் குழகன் தன்னை
மாமணிக் குன்றினில் கண்டேன் கண்டேன்..
ஸ்ரீ அம்புஜவல்லி நாயகி உடனாகிய
ஸ்ரீ மணிக்குன்றப்
பெருமாள் போற்றி
போற்றி!..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. மணிக்குன்றப் பெருமாள், அம்புஜவல்லி தாயார் கல்யாண வைபோக படங்களை கண் குளிர கண்டு பரவசமடைந்தேன். படங்கள் அத்தனையும் சிறப்பாக உள்ளது. பெருமாள், தாயாரின் கருணை நிரம்பிய அழகு மனதை குளிர்வித்தது. இறைவனின் கல்யாண திருக்கோலங்களை எங்களுடன் பகிர்ந்தளித்த தங்களுக்கு மனமுவந்த நன்றிகள்.
நேற்றைய பதிவையும் கண்டு அழகிய பெருமாள் தாயாரை சேவித்து வந்தேன் காலை எழுந்தவுடன் கண்குளிர இறைவனை வழிபட வைக்கும் உங்கள் பதிவுகள் மன மகிழ்ச்சியை
தருகின்றன. உங்களது பக்திப் பகிர்வுகளுக்கு மகிழ்வுடன் கூடிய நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பெருமாள் - தாயார் திருக்கல்யாண படங்கள் அருமை. நான் அன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் சென்றபோதும் கல்யாண கோலம்தான். கல்யாணக்கோலம் தரிசனம் கிடைத்திருப்பபது நல்ல பலன்களை தரட்டும். சேவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குஅழகிய தரிசனம் காண தந்தமைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்குநல்ல தரிசனம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
படங்கள் அருமை.
பதிலளிநீக்குகீதா
கல்யாண உற்சவம் கண்டேன். படங்கள் அனைத்தும் சிறப்பு. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஆஹா, கருத்துக் காணாமல் போயாச்சு. படங்கள் எல்லாமும் திருக்கல்யாண உற்சவத்தை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகின்றன.
பதிலளிநீக்கு