நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 24, 2022

போற்றி.. போற்றி..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஏழூர் பல்லக்குப் பெருவிழாவினைப் பற்றிய பதிவுகளை நிறைவு செய்யும் வேளை..


இன்றைய பதிவில் சப்த ஸ்தானத் தலங்களைப் பற்றிய சிறு குறிப்புகளும் இத்தலங்களுக்கான திருப்பதிகங்களில் இருந்து பாடல்களும் இடம் பெறுகின்றன..

திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி இரண்டு தலங்களைத் தவிர மற்ற ஊர்களுக்கு - தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. 
திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி இரண்டு ஊர்களுக்கும் திருவையாற்றில் இருந்து மினி பஸ்கள் இயங்குகின்றன..

சப்தஸ்தான தலங்கள் ஏழினையும் தரிசித்து திருப்பதிகம் அருளியவர்
அப்பர் ஸ்வாமிகள்..
இப்பதிவில் இடம் பெற்றுள்ள திருப்பாடல்கள் அனைத்தும் அப்பர் ஸ்வாமிகளது தேவாரம்.. 

அந்தந்த தலத்திற்கும்  அருளாளர் அருளிச் செய்த திருப்பதிகங்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள்..

சரியாக குறித்து வைத்துக் கொள்ள இயலாததால் பல்லக்கு படங்கள் மட்டும் சற்றே மாறியிருக்கின்றன..

பதிவில் உள்ள தேவாரத் திருப்பாடல்கள் தருமபுர ஆதீன தளத்தில் இருந்து பெறப் பட்டவை..

பதிவுகளின் ஊடாக
என்னுடன் பயணித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

சில சமயங்களில் தங்களது கருத்திற்கு பதிலளிப்பதற்கு சூழ் நிலையின் காரணமாகத் தாமதம் ஆகி இருக்கின்றது.. அதைப் பெரிதாகக் கொள்ள வேண்டாம்..
***
திரு ஐயாறுஸ்ரீ ஐயாறப்பர்
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

திருப்பதிகம் அருளியோர்
அப்பர் ஸ்வாமிகள் (12)
சம்பந்தப்பெருமான் (5)
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் (1)

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 4.38.1
*
திருப்பழனம்


ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
ஸ்ரீ ப்ரஹந்நாயகி

திருப்பதிகம் அருளியோர்
அப்பர் ஸ்வாமிகள் (5)
சம்பந்தப்பெருமான் (1)

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ.. 4.12.5
*
திருச்சோற்றுத்துறை


ஸ்ரீ சோற்றுத்துறை நாதர்
ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி

திருப்பதிகம் அருளியோர்
அப்பர் ஸ்வாமிகள் (4)
சம்பந்தப்பெருமான் (1)
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் (1)

கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் தான் அறியா
விடமணி கண்டம் உடையவன் தான் எனை ஆளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
படமணி நாகமன்றோ எம் பிரானுக்கு அழகியதே.. 4.85.9
*
திருவேதிகுடி


ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
ஸ்ரீ மங்கையர்க்கரசி

திருப்பதிகம் அருளியோர்
அப்பர் ஸ்வாமிகள் (1)
சம்பந்தப்பெருமான் (1)

எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம் அடைந் தாடுதுமே.. 4.90.6
*
திருக்கண்டியூர் வீரட்டம்


ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டீசர்
ஸ்ரீ மங்களாம்பிகை

திருப்பதிகம் அருளியோர்
அப்பர் ஸ்வாமிகள் (1)
சம்பந்தப்பெருமான் (1)

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்லா நம்மைச் செற்ற அநங்கைக்
காய்ந்த பிரான்கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோஅடி யேனை ஆட்கொண்டவனே..
4.93.9
*
திருப்பூந்துருத்தி


ஸ்ரீ புஷ்பவனநாதர்
ஸ்ரீ சௌந்தரநாயகி

திருப்பதிகம் அருளியோர்
அப்பர் ஸ்வாமிகள் (3)

அருகடை மாலையுந் தான் உடையான் அழகால் அமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு பால் உலகாயு நின்றான்
பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும்
திருவுடைத் தேச மதியனை யான் அடி போற்றுவதே.. 4.88.6
*
திருநெய்த்தானம்


ஸ்ரீ நெய்யாடியப்பர்
ஸ்ரீ பாலாம்பிகை

திருப்பதிகம் அருளியோர்
அப்பர் ஸ்வாமிகள் (5)
சம்பந்தப்பெருமான் (1)

தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளரவுங் கங்கை தான் புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ எய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே.. 4.89.9
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

19 கருத்துகள்:

 1. அப்பரின் தேவாரங்களோடு நிறைவு செய்திருப்பது சிறப்பு.  ஓம் நமச்சிவாய.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தெளிவான படங்கள். ஒவ்வொரு கோவிலைப்பற்றியும் அழகான விமர்சனங்கள். இன்றைய நாளில் சிறப்பான தேவார பாடல்களுடன், இத்தனை நாட்களிலும் அழகான ஏழுர் பல்லக்கு படங்களைப் பற்றிய விவரணங்களுடன் தரிசிக்க வைத்து இன்று ஏழுர் இறைவன் இறைவியையும் கண்குளிர தரிசிக்க வைத்த தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். ஒவ்வொரு ஊரின் ஐயனையும், அம்மையையும் மனகுளிர தரிசித்து உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. இருந்தாலும் அவ்வப்போது தல வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும்..

   எல்லாம் ரங்களது நல்லாதரவு தான்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. ஏழுர் திருவிழா படங்களும் அப்பர் தேவார பதிக பாடல்களும் என்று பதிவு அருமை.
  கோவில் இருப்பிடம் போக்குவரத்து வசதிகள் எல்லாம் போக விரும்புபவர்களுக்கு உதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   மீண்டும் இந்த ஸ்தலங்கள் பற்றிய தகவல்களுடன் புதிய செய்திகளும் தொடரும்.

   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இறைவன் உள்ளிருக்கப் பல்லக்கு படங்கள் அருமை. விவரங்களும் அப்பரின் தேவாரங்களும் தெரிந்து கொண்டேன்.

  படங்கள் மிக அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 5. எத்தனை முறை சென்றாலும் புதிதாகச் செல்வது போன்று உணர்வினைத்தருகின்ற சப்தஸ்தானத் தலங்கள். உங்கள் பதிவு மனதிற்கு நிறைவினைத் தந்தது. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது தான் ஐயா பாரம்பரியம்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. படங்கள் அனைத்தும் அருமை. விவரிப்பும் சிறப்பு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்...

   நீக்கு
 7. அழகான படங்கள். கோயில்களைப் பற்றிய தெளிவான விவரங்கள். பதிகங்கள்/நாயன்மார் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு,

  பதிலளிநீக்கு
 8. அப்பர் வழங்கிய தேவாரப் பதிகங்களுடன் பதிவினை வெளியிட்டு இருப்பது சிறப்பு. படங்களும் அழகு.

  பதிலளிநீக்கு
 9. //அழகான படங்கள். கோயில்களைப் பற்றிய தெளிவான விவரங்கள். பதிகங்கள்/நாயன்மார் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு,// இந்தப்பதிவில் நேற்றுக் கொடுத்த கருத்து. இதையும் இங்கே காணோம். பின் தொடர்ந்த கருத்துகளோடு மெயில் பாக்ஸில் கிடைத்தது. என்னவோ போங்க. நேற்று ஏழூர் 1 வரைக்கும் படிச்சுக் கருத்துச் சொல்லி இருந்தேன். நம்ம உழைப்பை இப்படி வீணாக்குதே ப்ளாகர்! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. இப்போதெல்லாம் பிளாக்கர் ரொம்பவும் பிரச்னை செய்கின்றது.. அதுவும் கைபேசியில் தட்டச்சு செய்வது மிகவும் கஷ்டம்.. Note pad ல் எழுதி பிளாக்கரில் பதிவிடுகின்றேன்..

   எப்படியோ ஓடிக் கொண்டிருக்கிறது..

   அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. இங்கேயும் யாரும் பார்க்கலை போல!

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..