நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 01, 2022

மயிலே மயிலே..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிச் செய்த
மயில் விருத்தப் பாடல்..

மாலின் மருகன் முருகன் என்பதனை
அருணகிரியார் சொல்லும் அழகே அழகு..


யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
   உதித்ததென் றயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
   லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
   விசும்பிற் பறக்க விரிநீர்

வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
   வீசிப் பறக்கு மயிலாம்


நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
   கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
   நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
   முகிலுலவு நீலகிரிவாழ்

முருகன்உமை குமரன் அறுமுகன்
நடவு விகடதட மூரிக் கலாப மயிலே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
*

நேற்று அமாவாசை ஆனதால்,
திரு ஐயாறு
தரிசனம்..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியும்
ஸ்ரீ பஞ்சநதீசுவர
ஸ்வாமியும்
அனைவரையும்
காத்தருள் செய்வார்களாக..

கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு அரோஹரா!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

14 கருத்துகள்:

 1. அருமை.  முருகன் மால் மருகன் நமையெல்லாம் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு.. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. முருகனின் தரிசனம் நன்று ஜி

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. திருவையாறு கோவில் படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. நானும் இறைவன் இறைவியை தரிசித்துக் கொண்டேன்.

  அருணகிரிநாதரின் பாடல் நன்றாக உள்ளது. பக்தியுடன் பாடிக் கொண்டேன் . மால்மருகன், அழகிய முருகன் உலக மக்கள் அனைவரையும் காத்திட நானும் அந்த வேலாயுதனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   திருமாலின் மருகனாகிய முருகப் பெருமான் நல்லோர் அனைவருக்கும் நல்லருள் புரிந்திட வேண்டிக் கொள்வோம்..

   தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. திருவையாறு படங்களும் அருமை. தகவல்களும் நன்றாக உள்ளன. முருகப் பெருமான் அருளால் அனைவரின் வினைகளும் அகலட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. திரு ஐயாற்றுப் படங்கள் இன்னும் இருக்கின்றன.. அடுத்தடுத்த பதிவுகளில் அவை..

   அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 5. படங்களும் தகவல்களும் நன்றாக இருக்கின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 6. மால்மருகனின் ஆராதனை காணொளியும் கண்டேன் துரை அண்ணா. படங்கள் எல்லாமே அழகு,

  கீதா

  பதிலளிநீக்கு
 7. பதிவும் காணொளியும் அருமை.
  திருவையாறு முருகன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 8. பதிவும் காணொளியும் கண்டு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..