நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 05, 2022

குரு தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று சித்திரை - 21
புதன்கிழமை.. வளர்பிறையின் சதுர்த்தி..
திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபநாள்..


பாடகச்சேரி கிராமத்தில்
மகா சித்த புருஷராகிய 
ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்  வாழ்ந்த குடிலானது கோயிலாகி இருக்கின்றது..
சில காலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கருட பட்சிகள் வானில் வட்டமிட திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது..

நான்கு கால யாக வழிபாடுகள் பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று வேத பாராயணம் தேவாரதிருவாசகப் பண்ணிசையுடன் விழா வெகு சிறப்பாக நிகழ்ந்தது..


அன்பர்கள் அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணமும் செய்தனர்...
காலையும் மதியமும் அன்பர்களுக்கு விரிவான அளவில் உணவு வழங்கப்பட்டது சிறப்பு..

திருமுழுக்கு விழாவினை தரிசித்து ஆங்கே இயன்றவரை எடுக்கப்பட்ட ஒளிப் படங்களை இன்றைய பதிவில் தந்திருக்கின்றேன்..

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமானைக் கடந்ததும் ஆலங்குடிக்கு சற்று முன்பாக வலப்பக்கமாகப் பிரியும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது பாடகச்சேரி..


அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்சோதி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

 1. படங்கள் சிறப்பு.  பாடகச்சேரி கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.  அருட்பெருஞ்ஜோதியின் கருணைப்பார்வை நம் பக்கம் திரும்பட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   பாடகச்சேரி ஸ்வாமிகளின் நல்லருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பாடகச்சேரி சென்று வந்த நினைவுகள் மனதில் வந்து போகிறது. பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் அனைவருக்கும் எல்லா நலத்தையும் தர வேண்டும். பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   பாடகச்சேரி ஸ்வாமிகளின் நல்லருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
   தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலமுடன்..

   நீக்கு
 3. அருட்பெருஞ்சோதி
  தனிப்பெரும் கருணை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருட்பெரும்ஜோதி
   அருட்பெரும்ஜோதி
   தனிப்பெரும்கருணை
   அருட்பெரும்ஜோதி..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பாடகச்சேரி கோவில் கும்பாபிஷேகம் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பிறகு மதியத்தில் அனைத்தையும் பெரிதாக்கி ஒவ்வொன்றாக பார்க்கிறேன். இன்றைய தினம் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளின் குரு தரிசனம் கிடைத்தது மனதுக்கு நிறைவாக உள்ளது. அவரின் அருள் பார்வை அனைவருக்கும் கிடைத்து, அனைவர் வாழ்வும் வளமாக இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   பாடகச்சேரி ஸ்வாமிகளின் நல்லருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
   தங்கள் கருத்திற்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலமுடன்..

   நீக்கு
 5. குருதரிசனம் - படங்களும் விவரணமும் சிறப்பாக இருக்கின்றன.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   பாடகச்சேரி ஸ்வாமிகளின் நல்லருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
   தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி சகோதரி..

   நீக்கு
 6. அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை... நல்லதே நடக்கட்டும். படங்களும் தகவல்களும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   பாடகச்சேரி ஸ்வாமிகளின் நல்லருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
   தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

   நீக்கு
 7. ஆகா...!

  அருட்பெருஞ்சோதி...
  தனிப்பெரும் கருணை...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..